For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சூப்பர் ஸ்டார் ரஜினி பெயரில் இருக்கக்கூடிய ‘காந்த்’ ஏன் தெரியுமா? Wonder Women # 009

இந்திய சினிமாவின் முதல் நடிகை யாரென்று தெரியுமா?

|

இந்திய நாடு சுதந்திரம் பெற்று 71 ஆண்டுகள் கடந்து விட்டிருக்கிறது, இன்னமும் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கப்பட விலை, பெண்களுக்கு சினிமாத்துறை என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது. இன்றைக்கும் கூட ஆண்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தக்கூடிய சினிமாத்துறையில் நீங்கள் எப்படி உங்களுக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டீர்கள் என்று தான் கேட்கப்படுகிறது.

இந்த நூற்றாண்டிலேயே இப்படி மிகவும் அரிதாகவும், அதிசயமாகவும் பார்க்கிறார்கள் என்றால் ஆரம்ப காலத்தில் எல்லாம் எப்படி இருந்திருக்கும் இன்றைக்கு இருப்பதைக் காட்டிலும் அன்றைக்கு பெண்களுக்கு மிக அதிகமான கட்டுப்பாடுகள் இருந்தது, வீட்டிலும் சமூகத்திலும் பெண்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

First Cinema Actress in Indian Cinema

இவை எல்லாவற்றையும் கடந்தும் ஒரு பெண் திரையில் தோன்றி வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யார் அவர் ? :

யார் அவர் ? :

பொதுவாக பெண்கள் தங்களுடைய அடையாளத்தை வெளியில் பிறருக்கு காட்டக்கூடாது என்று தான் வலியுத்தப்படுகிறது. இந்நிலையில் 1913 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி இந்திய சினிமாவின் முதல் நடிகை என்ற பெருமைக்கு சொந்தக்காரர் கமலாபாய் கோஹலே.

ஆனால் இவருடைய அம்மா தான் முதலில் நடித்தவர் என்கிறார்கள். கமலாபாயின் அம்மா துர்கா பாய் மேடை நாடகங்களில் தோன்றியவர் என்றாலும் அதனை திரைப்படமாக எடுத்துக் கொள்ளவில்லை எனப்படுகிறது.

Image Courtesy

துர்காபாய் :

துர்காபாய் :

துர்கா பாய் கமாட் என்பவர் கணவிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வந்த இளம் பெண். 1903 ஆம் ஆண்டு, கணவர் ஆனந்த் நானோஸ்கர் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

மகளுடன் துர்கா பாய் தனியாக வாழ வேண்டிய கட்டாயம் அவருக்கு முன்னால் மூன்று வாய்ப்புகள் இருந்தது.

Image Courtesy

மூன்று வாய்ப்புகள் :

மூன்று வாய்ப்புகள் :

தன்னையும் மகளையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிற துர்காபாய் ஒன்று வீட்டு வேலையைச் செய்து கொத்தடிமையாய் இருக்கவேண்டும். இரண்டு, பாலியல் தொழிலில் ஈடுபடலாம்.மூன்று திரைப்படங்களில் நடிக்கலாம்.

துர்காபாய் மூன்றாம் வழியைத் தேர்ந்தெடுத்தார். தான் பிறந்து வளர்ந்த மராட்டிய மாநிலத்தில் திரைப்பட கம்பெனிகளில் மகளைத் தூக்கிக் கொண்டு தனக்கொரு வேலை கொடுக்கும்படி கெஞ்சினார்.

Image Courtesy

திறமைகள் :

திறமைகள் :

வெறுமனே வேலை கொடுங்கள் என்று மட்டும் கேட்டு நின்றுவிடவில்லை துர்காபாய், தொடர்ந்து தன்னுடைய திறமைகளை வளர்த்துக் கொள்ள ஆரம்பித்தார். அந்தக் காலத்திலேயே ஏழாம் வகுப்பு வரை படித்திருந்தார். அன்றைக்கு அது தான் உயர்ந்த படிப்பாக இருந்திருக்கிறது.

தொடர்ந்து பாடுவது, வரைவது, இசைக்கருவிகள் மீட்பது என தொடர்ச்சியாக தன்னையும் மகள் கமலாவையும் வளர்த்துக் கொண்டேயிருந்தார்.

Image Courtesy

இடர்பாடுகள் :

இடர்பாடுகள் :

திறமையிருக்கிறது அதனால் எங்களுக்கு வாய்ப்புகிடைத்தது, பேரும் புகழும் பெற்றோம் என்று எளிதாக கடந்து சென்று விட முடியாது எங்களது அனுபவங்களை. அந்தக் காலத்தில் பெண்கள் சினிமாவில் நடிக்கவே மாட்டார்கள். பயங்கர கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டோம்.

Image Courtesy

ஆதிக்கம் :

ஆதிக்கம் :

அப்போது ஊருக்கூடி நாடகங்களை நடத்துவார்கள். கடவுளின் கதைகள் தான் அரங்கேற்றுவார்கள். அப்போது, ஆண்கள் தான் பெண்களாக தங்களை அலங்கரித்து நடிப்பார்கள்.

நான் வேலை தேடி வரும் போது அவர்கள் எங்களை எதிரியாக பார்க்க ஆரம்பித்தனர். தங்களுடைய வாய்ப்பினை தட்டிப்பறிப்பதாக நினைத்தார்கள்.

Image Courtesy

முதல் மேடை :

முதல் மேடை :

கமலாபாய் நான்கு வயது குழந்தையாக இருக்கும் போது சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். நான் நடிக்க வேண்டிய காட்சிகளை அடிக்கடி மறந்து விடுவேன், என் அம்மாவோ அல்லது அங்கிருப்பவர்கள் தான் என் தலையில் தட்டி நினைவூட்டுவார்கள்.

நாடகங்களை போட ஒவ்வொரு ஊராக தொடர்ந்து பயணித்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்பதால் சரியாக பள்ளிக்குச் செல்லமுடியவில்லை, ஆனாலும் எனக்கு அம்மா வீட்டிலேயே பாடங்களை சொல்லிக் கொடுத்தார். எழுதப்படிக்க கற்றுக் கொண்டேன்.

Image Courtesy

ஹீரோயின் :

ஹீரோயின் :

என்னுடைய பதினைந்து வயதில் தற்போது இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படுகிற தாதா சாஹேப் பால்கே தன்னுடைய மோஹினி பாஸ்மசூர் என்ற திரைப்படத்திற்கு ஆட்களை தேடிக்கொண்டிருந்தார்.

அதில் நான் முக்கிய வேடத்தில் நடிக்க,அம்மா துர்கா பாய் பார்வதி தேவியாக நடித்திருந்தார்.

Image Courtesy

 புகழின் உச்சி :

புகழின் உச்சி :

அவ்வளவு தான் கமலாபாய் மீது புகழ் வெளிச்சம் வீசத்துவங்கியது.தொடர்ந்து ரகுநாதராவ் கோஹலே என்பவரை திருமணம் செய்து கொள்கிறார். ஒரு நாடக கம்பெனியில் இணைந்து தொடர்ந்து நடிக்கிறார்.

ஆனால் கமலாபாயின் குரல் அதற்கு ஒத்துழைக்கவில்லை, பெரும் தடையாக இருந்தது அதனால் கமலாபாயும் அவரது தாயாரும் அவருடைய சகோதர் கம்பெனியில் சேர்கிறார்கள்.

Image Courtesy

சந்ததிகள் :

சந்ததிகள் :

கிட்டத்தட்ட முப்பத்தைந்து திரைப்படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார் கமலாபாய். இறுதியாக 1980ஆம் ஆண்டு வெளியானது. இவருக்கு சந்திரகாந்த் கோஹலே,லால்ஜி கோஹலே,சூர்யகாந்த் கோஹலே என மூன்று குழந்தைகள். இவர்களில் சந்திரகாந்த் கோஹலேயின் மகன் தான் விக்ரம் கோஹலே மராத்தி மற்றும் ஹிந்தி திரையுலகத்தில் இவர் மிகப் பிரபலம்.

ரஜினிகாந்தில் ‘காந்த்' என்பது எப்படி சேர்ந்தது என்று புரிந்ததா?

கோரியோகிராபி :

கோரியோகிராபி :

பெண்கள் சினிமாவில் நடிப்பது என்பது அந்த காலத்தில் பெரும் பாவமாகவே கருதினார்கள். யாரும் திரைப்படங்களில் நடிக்க முன்வரவில்லை, அப்போது தான் தாதா சாஹேப் பால்கே தன்னுடைய முதல் படத்தை எடுத்து முடித்திருந்தார்.

இரண்டாவது படத்திற்கு துர்காபாய் மற்றும் கமலாபாயை அமர்த்தினார். இந்திய சினிமாவில் தடம் பதித்த பெண்களாகிவிட்ட இவர்களில் கமலபாய் இன்னொரு பெருமைக்கும் சொந்தக்காரர். அப்போதே பாடலை கோரியோகிராப் செய்து நடனமும் ஆடியிருக்கிறார்கள். கோரியோ செய்யப்பட்ட பாடலுக்கு ஆடிய முதல் நபர் கமலாபாய் தான். அதனை தாதா சாஹெப் பால்கே கோரியோகிராப் செய்திருந்தார்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse wonder women
English summary

First Cinema Actress in Indian Cinema

First Cinema Actress in Indian Cinema
Story first published: Thursday, February 22, 2018, 16:32 [IST]
Desktop Bottom Promotion