For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  அபாயமான கடற்கொள்ளையர்களும், அவர்களை குறித்த இரகசியங்களும் - டாப் 10 உண்மைகள்!

  By Staff
  |

  இன்று பெரும்பாலும் நாம் கடற்கொள்ளையர்கள் பற்றி அறிந்திருப்பது எல்லாம் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படம் மூலமாக தான். அவர்கள் வாழ்வியல், பயணம், நட்பு, காதல், எதிர்ப்பு, போர் என பல முகங்களை இந்த படம் காண்பித்துள்ளது. ஆனால், இப்படியான படங்களை தாண்டி கடற்கொள்ளையர்கள் பற்றி நாம் அறியாத பல விஷயங்கள் இருக்கின்றன.

  அவர்கள் கொள்ளை அடிக்கும் புதையல்களில் இருந்து பங்கிடும் முறை, ஒற்றை கண் கட்டி இருப்பது, அவர்கள் கொடி மற்றும் சட்டத்திட்டங்கள் என பல உண்மைகள் மற்றும் நாம் தவறாக அறிந்து வைத்திருக்கும் தகவல்கள் பலவன இருக்கின்றன.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  ஒற்றைக்கண்!

  ஒற்றைக்கண்!

  பலரும் கடற்கொள்ளையர்கள் ஒற்றை கண் இல்லாதவர்கள் தான் ஒரு கண்ணை மட்டும் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று கருதுவதுண்டு. ஆனால், அது உண்மை அல்ல.உண்மையில் இருட்டாக இருக்கும் கப்பலின் கீழ் தளத்தில் நடக்கும் விஷயங்களை தெளிவாக காணவும், இருட்டிய பிறகு இரவில் எதிரே வரும் விஷயங்களை தெளிவாக கண்காணிக்கவும் தான் எப்போதும் ஒரு கண்ணை கடற்கொள்ளையர்கள் கட்டியபடி இருந்திருக்கிறார்கள்.

  பிளாக் பியர்டு!

  பிளாக் பியர்டு!

  பிளாக் பியர்டு என்று அழைக்கப்பட்ட எட்வார்ட் டீச் என்ற கடற்கொள்ளையன் தான் உலகின் மிகவும் திகிலூட்டும் கொள்ளையன் என்று பலரும் கூறுகிறார்கள். இவர் ஒரு கப்பலை பிடிக்க செல்லும் போது, தனது தாடியுடன் ஒரு நெசவு சணலை கட்டி அதில் தீப்பற்றவைத்து கொண்டு செல்வானாம். அப்போது அவனை பார்க்க பேய் போல இருப்பான் என்றும், அவனை கண்டி மற்றவர்கள் அஞ்சி நடுங்குவார்கள் என்று கூறுகிறார்கள்.

  தன்னிடம் இருக்கும் அடிமைகளை கொல்லும் பழக்கம் கொண்டிருந்த இவன் நீரிழிவு நோய் காரணத்தால் ஒரு காலை இழந்தான்.

  பிரபல கொடி!

  பிரபல கொடி!

  நீங்கள் எந்த ஒரு கடற்கொள்ளையர்கள் படங்களை எடுத்துக் கொண்டாலும் சரி, வரலாற்று பதிவுகளை கண்டாலும் சரி, கடற்கொள்ளையர்கள் என்றால் அவர்கள் கப்பலில் எக்ஸ் வடிவிலான எலும்புகள் முன்னிலையில் மண்டையோடு இருப்பது போன்ற ஒரு படம் பதித்த கொடி ஒன்று பறந்துக் கொண்டிருக்கும். அந்த கொடியின் பெயர் ஜாலி ரோஜர்.

  சிவப்பு கொடி!

  சிவப்பு கொடி!

  ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கடற்கொள்ளையர்கள் சிவப்பு கொடிதான் பயன்படுத்தி வந்தனர் என்றும், அந்த கொடி பறக்கவிட்டால் யாரிடமும் பாரபட்சம் பார்க்க முடியாது, யார் கையில் சிக்கினாலும் கொன்றுவிடும் என்றும் பொருள் என்றும் அறியப்படுகிறது. எனவே, கருப்பு கொடியை காட்டிலும், சிவப்பு கொடி தான் மிகவும் அபாயமானது என்று அறியப்படுகிறது. மேலும், அனைத்து கடற்கொள்ளையர்களும் ஜாலி ரோஜர் கொடியை பயன்படுத்தவில்லை என்றும் அறியப்படுகிறது. பல்வேறு கடற்கொள்ளையர்கள் கூட்டம் தங்களுக்கான தனி கொடியை வைத்திருந்தனர்.

  பெண்களும்!

  பெண்களும்!

  கடற்கொள்ளையர் என்றாலே அதில் ஆண்கள் மட்டும் தான் இருப்பார்கள் என்பது நாம் படங்கள் மூலம் அறிந்த செய்தி. ஆனால், மேரி ரெட், அன்னே போனி, கிரேஸ் ஓ மல்லே மற்றும் சிங் ஷிஹ் போன்ற பிரபல பெண் கடற்கொள்ளையர்களும் வரலாற்றில் தங்கள் பெயரை ஆழமாக பதித்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  கிராக்!

  கிராக்!

  கிராக் என்பது ராம், தண்ணி, எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை கலந்து தயாரிக்கப்படும் மதுபானம். இதை தான் கடற்கொள்ளையர்கள் விரும்பி பருகி வந்துள்ளார். இதை படித்துவிட்டு குடிமக்கள் உடனே முயற்சி செய்து பார்த்துவிட வேண்டாம். இவை எல்லாம் ஆங்காங்கே பதிவான தகவல்கள் மட்டுமே. ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்பட்டால் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது (ஹிஹிஹி!!!!!)

  புதையல்கள்!

  புதையல்கள்!

  கடற்கொள்ளையர்கள் தாங்கள் திருடும், கொள்ளையடிக்கும் பொருட்களை புதைத்து மறைத்து வைப்பார்கள் என்பது மிகவும் அரிதான செயல். பெரும்பாலும் கும்பல்களாக இருக்கும் இவர்கள் அவரவர் பங்குகளை சரியாக பிரித்துக் கொள்வார்கள். மேலும், இவர்கள் தங்கள், வெள்ளி, வைரத்தை மட்டும் திருடுபவர்கள் இல்லை. பெரும்பாலும் இவர்கள் திருடவது உடை, உணவு, வெட்டிய மரங்கள் மற்றும் விலங்குகளாகவும் இருக்கும்.

  சட்டத்திட்டங்கள்!

  சட்டத்திட்டங்கள்!

  ஒவ்வொரு கம்பெனிக்கும் தனிப்பட்ட எச்.ஆர் பாலிசி இருப்பது போல, ஒவ்வொரு தனி கடற்கொள்ளையர்கள் கப்பலுக்கும் தனிப்பட்ட சட்டத்திட்டங்கள் இருக்கும். அதை அவர்கள் பின்பற்றி தான் நடக்க வேண்டும், கொள்ளையடிப்பதில் இருந்து, அதை பங்குபோடுவது வரைக்கும் என ... சண்டை போடும் முறைகள் வரை தனித்தனி சட்டத்திட்டங்கள் வைத்திருப்பார்கள். ஒருவேளை ஏதேனும், ஒரு சட்டத்திற்கு இருவேருப்பட்ட கடற்கொள்ளையர்கள் எதிர்கருத்து கொண்டிருந்தால், அவர்களில் யார் சண்டையிட்டு வெற்றிப் பெற வேண்டும். சண்டை நிலத்தில் தான் நடக்கும், கப்பலில் இல்லை.

  காதணிகள்!

  காதணிகள்!

  பொதுவாக கடற்கொள்ளையர்கள் நிறைய ஆபரணங்கள் அணிந்திருப்பார்கள். அது அவர்களுக்கு தாங்கள் கொள்ளையடித்த நகைகள் மீதான மோகம், ஆசை என்றெல்லாம் கூறுவதுண்டு. ஆனால், ஆண் கடற்கொள்ளையர்களும் காதணி அணியும் வழக்கம் கொண்டிருந்தனர். இது அவர்களுடைய தனிப்பட்ட ஃபேஷன் என்று சிலர் கருதுவதுண்டு. ஆனால், உண்மை காரணம் என்னவெனில், காதணி அணிவதால் தங்கள் கன் பார்வை மேலோங்கும் என்று அவர்கள் எண்ணினார்கள். அதனால் தான் காதணி அணிந்திருந்தனர்.

  தண்டனை!

  தண்டனை!

  பெரும்பாலும், தூக்கிலிடுவது, கழுத்தை வெட்டி கொல்வது தான் கொடுமையான தண்டனையாக அறிகிறோம். ஆனால், கடற்கொள்ளையர்கள், தவறு செய்தவன், விரோதி அல்லது அடிமைகளை கொலை செய்ய ஒரு கொடூரமான வழியை பின்பற்றி வந்தனர். அதன் படி தலை கீழாக கட்டி கயிறாய் கப்பலில் கட்டி, கீழே தள்ளி விட்டுவிடுவார்கள். கப்பல் பயணிக்க துவங்கும், அந்த நபர் மெல்ல, மெல்ல நீரில் மூழ்கி இறந்துவிடுவார்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Facts and Myth about Pirates

  Here we have listed a lesser known facts and myth about Pirates and their life. Take a look on here.
  Story first published: Saturday, April 21, 2018, 17:00 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more