For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  ஹிட்லரே ஜெர்மன் சிட்டிசன்ஷிப் வழங்க முன்வந்த இந்த சாதனை இந்தியர் யார் தெரியுமா?

  |

  இந்தியாவுக்காக மூன்று ஒலிம்பிக் தங்கங்களை வென்றவர். இந்திய ஹாக்கி அணி வரலாற்றில் ஆல் டைம் சிறந்த வீரர் என்று புகழப்படும் நபர். தான் வாழ்ந்த காலத்தில் உலகிலேயே தலைச்சிறந்த ஹாக்கி விளையாட்டு சாம்பியன் என்ற பெயர்பெற்ற இந்தியர்.

  ஏறத்தாழ இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன் உலக ஹாக்கியின் முடிசூடா மன்னன் என்று போற்றப்பட்டவர். இவரது கோல்கள் அனைத்தும் மிகவும் திறமையானவை. தி விசார்ட் என்று இவரை புகழ்ந்து கூறினார்கள்.

  Facts About Hockey Legend Dhayan Chand!

  இவர் தனது ஹாக்கி மட்டையில் காந்தம் வைத்து விளையாடுகிறாரோ என்ற அளவுக்கு சந்தேகிக்கும் அளவிற்கு லாவகமாக ஹாக்கி விளையாடும் திறன் கொண்டிருந்தவர்.

  இவரை மெஜிஷியன் என்றும் பலர் கூறியதுண்டு. ட்ரிப்ளிங் எனப்படும் பந்தை லாவகமாக தட்டி செல்லும் நுட்பத்தில் இவரை மிஞ்ச ஆளே இல்லை. எதிரணி வீரர்கள் வெளிப்படையாக, இவரது மட்டையை பரிசோதனை செய்யுங்கள் என்று புகார்கள் அளித்ததும் உண்டு. இவரது மட்டையில் ஏதோ ஒன்று இருக்கிறது என்று குழம்பியதும் உண்டு....

  யார் இவர்..?

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  ஹிட்லர் அழைப்பு!

  ஹிட்லர் அழைப்பு!

  இவரது ஹாக்கி விளையாட்டு திறனை கண்டு தன் நாட்டுக்காக விளையாட சிட்டிசன்ஷிப் தருவதாக அடால்ப் ஹிட்லர் அழைப்பு விடுத்தார் என்ற கட்டுக்கதையும் பிரபலமானது. 1936ல் பெர்லின் ஒலிம்பிக் போட்டியில் இவரது திறனை கண்டு ஹிட்லர் ஜெர்மன் படையில் கர்னல் பதவி அளிக்க முன்வந்தார் என்ற தகவல்களும் கூட கூறப்படுகின்றன.

  தன் இளமை பருவத்தில் இராணுவத்தில் பணியாற்றி வந்த போதுதான், இவருக்குள் ஹாக்கி மீது ஒரு பேரார்வம், காதல் பிறந்தது. ஆரம்பத்தில் இராணுவ அணிகளுக்கு இடையே தான் விளையாடி வந்தார். அங்கே இவர் ஈட்டிய பெயரே, பிற்காலத்தில் இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக பொறுப்பேற்க வைத்தது. 1928 (லாஸ் ஏஞ்சல்ஸ்), 1932 (ஆம்ஸ்டர்டம்), 1936 (பெர்லின்) என தொடர்ந்து மூன்று முறை இந்தியா ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதற்கு முக்கிய காரணம் இவர் தான்.... தயான் சந்த்!

  Image Source: FullyIndia

  ஆரம்ப காலம்!

  ஆரம்ப காலம்!

  தயான் சந்த் அலகாபாத்தில் சமேஷ்வர் தத் சிங் என்பவருக்கு மகனாக பிறந்தவர். இவருக்கு இரண்டு சகோதரர்கள். இவரது தந்தை பிரிட்டிஷ் இந்திய இராணுவ படையில் பணியாற்றி வந்தார். இங்கே தான் தயான் சந்த் ஹாக்கி விளையாடினார்.

  இவர் ஆறு வருடங்கள் மட்டுமே பள்ளியில் படித்தார். இராணுவத்தில் பணியாற்றி வந்த காரணத்தால், அடிக்கடி வெவ்வேறு ஊர்களுக்கு பணியிட மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருந்த காரணத்தால் இந்நிலைக்கு தள்ளப்பட்டார் தயான் சந்த்.

  Image Cover: Defencelover

  16 வயதினிலே...

  16 வயதினிலே...

  இளமை பருவத்தில் தயான் சந்த் குத்து சண்டை வீரராக தான் மிகவும் விரும்பினாராம். மற்றபடி இதர விளையாட்டுகளில் இவருக்கு பெரிதாக ஆர்வம் அப்போதிருக்கவில்லை.

  தனது 16வது வயதில் பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் சேர்ந்தார் தயான் சந்த். அங்கே தான் ஹாக்கி விலையாக துவங்கினார் இவர். வேலை போக மீது நேரங்களில், இடைவேளைகளில் எப்போதுமே இவருக்கு ஹாக்கி விளையாடுவது தான் ஹாபி, ஆர்வம் எல்லாமே. இரவு நேரங்களில் கூட அதிக நேரம் ஹாக்கி விளையாடி வந்தார் தயான் சந்த்.

  1922ல் இவர் ஹாக்கியில் ஒரு சிறந்த வீரராக திகழ்ந்தார். இந்திய இராணுவ அணிக்காக இவர் ஹாக்கி விளையாட துவங்கியதும் அப்போது தான். இவரது திறமையை கண்டு இந்திய இராணுவ அணிக்காக விளையாட தேர்வு செய்து 1926ல் நியூசிலாந்து சுற்று பயணத்தில் இடம்பெற செய்தனர்.

  Image Source: cruxtor

  வெற்றிமுகம்!

  அந்த பயணத்தின் போது விளையாடிய 21 போட்டிகளில் தயான் சந்தின் அணி 18 போட்டிகளில் வெற்றிபெற்றது. இதற்கு முக்கிய காரணம் தயான் சந்தின் திறமை மட்டுமே. இதனால், இந்திய திரும்பிய போது, தயான் சந்திற்கு பதவி உயர்வும் கிடைத்தது.

  1928ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளின் போது, மீண்டும் ஹாக்கி இணைக்கப்பட்டிருந்தது. ஆம்ஸ்டர்டாமில் நடந்த அந்த போட்டியில் இந்திய ஹாக்கி பெடரேஷன் ஒரு சிறந்த அணியை அனுப்ப முடிவு செய்தது. தனது திறமையின் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்தார் தயான் சந்த்.

  டச், ஜெர்மன் மற்றும் பெல்ஜியன் அணிகளை இந்தியா ப்ரீ-ஒலிம்பிக் போட்டிகளில் பெருமளவு ஹோல் வித்தியாசத்தில் வென்றது. ஒலிம்பிக்கில் இந்தியாவும் அறிமுக போட்டியில் தயான் சந்த் ஆஸ்திரியா அணிக்கு அதிராக மூன்று கோல்கள் அடித்தார். இந்தியா 6-0 என்ற கணக்கில் வெற்றிக் கண்டது.

  முதல் தங்கம்!

  தொடர்ந்து பெல்ஜியம், டென்மார்க், சுவிட்சர்லாந்து போன்ற அணிகளை வெற்றிக் கண்டு ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகளின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி.

  1928 மே மாதம் 26ம் நாள் நடைப்பெற்ற இறுதி போட்டியில் இந்திய அணி நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது. இந்தியாவின் முக்கிய வீரர்கள் உடல்நலம் குன்றி காணப்பட்டனர். ஆனாலும், நெதர்லாந்தினை 3-0 என்ற கணக்கில் வென்று இந்தியா தனது முதல் ஒலிம்பிக் தங்க பதக்கத்தை வென்று சாதித்தது.

  இதில் பெரும்பங்கு தயான் சந்துக்கு உண்டு. இந்த தொடரில் மட்டுமே தயான் சந்த் ஐந்து போட்டிகளில் 14 கோல்கள் அடித்திருந்தார்.

  11-1

  1932ல் லாஸ் ஏஞ்சலசில் நடந்த ஒலிம்பிக் போட்டியிலும் திறமையின் காரணமாக தானாக இடம்பெற்றார் தயான் சந்த். இந்த தொடரில் இவரது சகோதரர் ரூப் சிங்கும் இடம் பெற்றிருந்தார் என்று அறியப்படுகிறது.

  அந்த தொடரில் முதல் போட்டியில் ஜப்பானுக்கு எதிராக 11-1 என்ற மிகப்பெரிய கோல் வித்தியாசத்தில் இந்தியா பெரும் வெற்றி கண்டது. அனைத்து போட்டிகளிலும் வென்று இந்தியா மீண்டும் ஒலிம்பிக் தங்கத்தை தன்வசம் கைப்பற்றியது.

  கோல் மழை!

  இந்த ஒலிம்பிக் வெற்றிக்கு பிறகு அமெரிக்காவில் நடந்த ஹாக்கி தொடரில் பங்கெடுத்துக் கொண்டது இந்திய அணி. அங்கே நடந்த 37 போட்டிகளில் இந்தியா 34 போட்டிகளில் வெற்றிபெற்றது. இதில் இந்திய அணி அடித்த 338 கோல்களில் தயான் சந்த் மட்டுமே 133 கோல்கள் ஸ்கோர் செய்திருந்தார்.

  தனது சிறப்பான ஆட்டத்திறன் காரணத்தால் இந்திய அணியின் கேட்பனாக 1934ல் பொறுப்பேற்றார் தயான் சந்த். இதை தொடர்ந்து 1936ல் நடைபெற்ற பெர்லின் ஒலிம்பிக் போட்டியிலும் இந்திய அணிக்காக தங்கம் வென்றார் தயான் சந்த். இதனால் தொடர்ந்து மூன்று முறை ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்று சாதித்தது இந்திய அணி.

  தொடர்ந்து இந்திய அணிக்காக ஹாக்கி விளையாடி வந்த தயான் சந்த் 1940களில் ஓய்வு பெற்றார். மேலும், இராணுவத்தில் இருந்து 1956 ஓய்வு பெற்றார் இவர். தனது வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, இந்திய அணியின் கோச்சாக பணியாற்ற துவங்கினார்.

  பத்ம பூஷன்!

  1928, 1932, 1936 என இந்திய அணி ஒலிம்பிக் தங்கம் வென்ற அணிகளில் இவர் இடம் பெற்றிருந்தார். தனது கேரியரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோலடித்துள்ளார் தயான் சந்த். அவற்றில் 400க்கும் மேற்பட்டவை சர்வதேச போட்டிகளில் இவர் ஸ்கோர் செய்தது ஆகும்.

  தனது விளையாட்டு துறையில் இவர் புரிந்த சாதனைகளுக்காக 1956ல் இவருக்கு பத்ம பூஷன் விருது கொடுத்து கௌரவப்படுத்தியது இந்திய அரசாங்கம்.

  ஏழ்மையில் மரணம்!

  இவர் 1936ல் ஜானகி தேவி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவருக்கு மொத்தம் ஏழு ஆண் குழந்தைகள். எதிரபாராத விதமாக இவரது கடைசி காலம் சிறப்பாக அமையவில்லை. தனது கடைசி நாட்களை துயரத்தின் உச்சியில் வாழ்ந்தார் தயான் சந்த். இவரை பலரும் மறந்துவிட்டனர். பொருளாதார சிக்கல் என்று ஏழ்மையில் கடத்தினார். கல்லீரல் புற்றுநோய் காரணாமாக இவர் 1979ல் தனது 74வது வயதில் மரணம் அடைந்தார்.

  தேசிய விளையாட்டு தினம்!

  இந்தியாவின் விளையாட்டு துறை சார்ந்த உயரிய விருதாக கருதப்படும் விருது, தயான் சந்த் விருது. இவர் இறந்த பிறகு, இவர் பெயரில் இந்த விருது விளையாட்டு துறையில் வாழ்நாள் சாதனையாளராக கருதப்படும் நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

  தயான் சந்தின் திறமையை விளக்கும் படி வியன்னாவில் நான்கு கைகளுடன் இருக்கும் சிலை வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் ஆங்காங்க பரப்பப்பட்டு வருகிறது.

  ஆனால், இது உண்மையல்ல என்று ஆஸ்திரியா விளையாட்டு துறை கூறி இருக்கிறது. இவரது பிறந்தநாளன ஆகஸ்ட் 29ம் தேதியை தேசிய விளையாட்டு தினமாக இந்தியா கொண்டாடி வருகிறது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Facts About Hockey Legend Dhayan Chand!

  Dhayan Chand Considered as the greatest hockey player of India, he won three Olympic gold medals for India. Here we gonna talk about this hockey legends, childhood, life, achievements, works and awards.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more