For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  உலக சர்வாதிகாரிகள் பின்பற்றி வந்த சில வேடிக்கையான விஷயங்கள்!

  By Staff
  |

  வரலாற்றில் நாம் நிறைய சர்வாதிகாரிகளை கண்டிருக்கிறோம். ஒவ்வொருவரும் அவர்களது தனிப்பட்ட சட்டதிட்டங்கள், கொடுங்கோல் ஆட்சி மற்றும் விசித்திரமான பழக்க வழக்கங்களால் வரலாற்றில் ஒரு தனி சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

  பெரும்பாலும் இவர்களை கொடூரமான குணம் மட்டும் தான் நாம் அறிந்திருப்போம். ஆனால், ஒருசில சர்வாதிகாரிகள் சில வேடிக்கையான பழக்க வழக்கங்கள் பின்பற்றி வந்தனர். அதாவது டால்பின் இரத்தத்தில் குளிப்பது, தங்களை பற்றி புத்தகங்களை ஏலியன்களுக்கு அனுப்பி வைப்பது என பல கலாட்டாக்கள் இவர்கள் செய்துள்ளனர்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  சபர்முரத் நியஜோவ் (Saparmurat Niyazov)

  சபர்முரத் நியஜோவ் (Saparmurat Niyazov)

  துருக்மெனிஸ்தானின் முன்னாள் அதிபர் சபர்முரத் நியஜோவ். இவர் தன்னை பற்றிய புத்தகங்களின் பிரதியை விண்வெளியில் ஏலியன்கள் படிக்க அனுப்பி வைத்திருக்கிறார்.

  ருஹ்னமா (Ruhnama) என கூறப்படும் இவரை குறித்த புத்தகத்தை அந்நாட்டு மாணவர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும். முற்றிலும் மத ரீதியான கோட்பாடுகள் கொண்டிருக்கும் அந்த புத்தகத்தை அனைத்து குடிமகனும் படித்து, பின்பற்ற வேண்டும்.

  அந்த புத்தகத்தின் மீது அதிக ஈர்ப்பு கொண்டிருந்த சபர்முரத் அதை விண்வெளிக்கு அனுப்பி வைத்தார். அதை அணங்கே இருக்கும் ஏலியன்கள் கண்டெடுத்தால் இவரை பற்றியும், இவரது மத ரீதியான கோட்பாடுகள் பற்றியும் ஏலியன்கள் அறிந்துக் கொள்ளும் என இவர் கருதினார். இதற்காக ஒரு ராக்கெட்டில் வைத்து இந்த புத்தகம் விண்ணில் ஏவப்பட்டது.

  Image Source: RUDEBUTGOOD.BLOGSPOT

  முயம்மர் கடாபி

  முயம்மர் கடாபி

  லிபியாவின் சர்வாதிகாரியாக இருந்தவர் கடாபி. இவருக்கு முன்னாள் அமெரிக்க செயலாளர் கொந்தளிசா ரைஸ் என்பவர் மீது ஓர் ஈர்ப்பு இருந்தது. அவரை மை டார்லிங் பிளாக் வுமன் என்றே அழைத்து வந்தார். ஒரு முறை பேட்டியில், லீசா, லீசா, லீசா ஐ லவ் யு வெரி மச்.. நான் அவரை விரும்புகிறேன் என்று கூறினார். 2007ம் ஆண்டில் இவர் கொடுத்து இந்த பேட்டியில், ஒரு கருப்பு பெண் இவ்வளவு உயரிய பதவியில் இருப்பதை நான் பெருமையாக கருதுகிறேன் என்றும் கூறியிருந்தார்.

  ஒருமுறை ரைஸ் லிபியா சென்றிருந்த போது, தனது ப்ரைவேட் கிச்சனுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அங்கே ரைஸ் பல உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்த காணொளிப் பதிவுகளை தொகுத்து அதன் பின்னணயில் வெள்ளை மாளிகையின் கருப்பு பூவே என்ற ஒரு பாடலை ஒலிக்க செய்திருந்தார். இதில் என்ன விசித்திரம் என்றால் கருப்பு பூ என்பது ஒரு கவர்ச்சியான பொருள் கொண்ட வார்த்தை என்று அறியப்படுகிறது.

  நிக்கோலே சௌசெஸ்கு (Nicolae Ceausescu)

  நிக்கோலே சௌசெஸ்கு (Nicolae Ceausescu)

  ரோமானியாவின் முன்னர் அதிபர் நிக்கோலே. இவர் தினமும் புதிய உடை மற்றும் ஷூ தான் அணிவார். மேலும், பயன்படுத்திய பழைய உடைகளை, ஷூக்களை எரித்துவிடுவார்.

  நிக்கோலே தன்னை ஆச்மோசிஸ் (osmosis) எனும் முறையில், அதாவது துணியில் விஷம் தடவி கொலை செய்துவிடுவார்களோ என்று அஞ்சினார். இதனால், இவர் தினமும் புதிய உடைகளை தான் உடுத்துவார். மற்றும் ஒருமுறை பயன்படுத்திய உடையை தீயில் இட்டு எரித்துவிடுவார். ஒருமுறை இவர் உடையை உடுத்தி கழற்றிவிட்டார் எனில், அது இவரது சாம்பலாக்கக்கூடிய கருவியில் போட்டு எரித்துவிடுவார்கள்.

  Image Source: BANATUL AZI

  ராபர்ட் முகாபே

  ராபர்ட் முகாபே

  ஜிம்பாவேவின் அதிபர் ராபர்ட் முகாபே, வெளிநாடுகளுக்கு பரிசாக தன் நாட்டில் விலங்கியல் பூங்காவில் இருக்கும் விலங்குகளை அனுப்பி வைப்பார்.

  வடகொரியாவுக்கு மட்டுமே ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை மற்றும் 18 மாத குழந்தை யானை என பல விலங்குகளை பரிசாக அனுப்பி வைத்திருக்கிறார் ராபர்ட் முகாபே.

  கிம் 2 சுங்!

  கிம் 2 சுங்!

  முன்னாள் வடகொரிய பிரதமாரான கிம் 20 வயதுக்குட்பட்ட ஆண், பெண்களின் இரத்தத்தை தனது உடலுக்குள் செலுத்தி அடிக்கடி புதுப்பித்து கொள்வார். இதன் மூலம் தான் இளமையாகவே இருப்பேன் என்று கருதினார் கிம். மேலும், சிலரை நியமித்து தன்னை பற்றிய ஒரு பாடலை எழுதி அதை கொரியன் ஸ்பேஸ் ஸ்டேஷனில் ஒலிபரப்ப செய்தார். இதன் மூலம் ஏலியன்கள் தன்னை பற்றி அறிந்துக் கொள்ளும் என்று கருதினார்.

  Image Source: NEWSLOCKER

  இடி அமின்!

  இடி அமின்!

  உகாண்டாவின் முன்னாள் அதிபர் சர்வாதிகாரி இடி அமின். இவர் நான்கு வெள்ளையர்களை தன்னை தூக்கி செல்ல பணியமரித்தி வைத்திருந்தார். இனிமேலும் கறுப்பின மக்கள் அடிமைகள் இல்லை என்று காட்ட, இவர் இப்படி நான்கு வெள்ளையர்களை வேலைக்கு பணியமர்த்தி தன்னை தூக்கி செல்ல வைத்தார். இடி அமினுக்கு மொத்தம் ஐந்து மனைவிகள் மற்றும் 43 குழந்தைகள்.

  Image Source: DAILY MONITOR

  நீ வின்!

  நீ வின்!

  பர்மாவின் தலைவராக இருந்தவர். இவர் டால்பின் இரத்தத்தில் குளிக்கும் பழக்கம் கொண்டிருந்தார்.

  இது கொஞ்சம் விசித்திரமான பழக்கம். நீ வின் தன்னை இளமையாகவும், வலிமையாகவும் வைத்துக் கொள்ள இப்படியான ஒரு மூட நம்பிக்கையை பின்பற்றி வந்தார். நீ வின்னின் இந்த பழக்கத்தை சிலர் தீய சக்தி / தீய பழக்கம் என்றும் கருதி வந்தனர்.

  Image Source: THEFAMOUSPEOPLE

  ரபேல் ட்ருஜிலோ (Rafael Trujillo)

  ரபேல் ட்ருஜிலோ (Rafael Trujillo)

  டொமினிக்கன் குடியரசின் சர்வாதிகாரியாக இருந்தவர் ரபேல். இவர் தான் விரும்பும் எந்த பெண்ணாக இருந்தாலும், அவர் திருமணமானவராக இருந்தாலும் அவருடன் செக்ஸ் வைத்துக் கொள்வார்.

  ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் இவர் சர்வாதிகாரம் செய்து வந்தார். இந்த காலக்கட்டத்தில் தன் கண்ணில் படும் எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும், அவர் திருமணம் ஆனவர், ஆகாதவர் என்றெல்லாம் பாராமல் தூக்கி வந்து செக்ஸ் வைத்துக் கொள்வார். ஒருவேளை அந்த பெண்களின் கணவர்கள் அல்லது தந்தையர் பெண்களை அனுப்ப மறுத்தால், அவர்களை அடித்தே கொன்றுவிடுவார்கள்.

  Image Source: MX HISTORY

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Eight Crazy Things The World's Dictators Did

  History has seen many dictators who have left an unforgettable impact due to their crazy policies and behaviour. From bathing in dolphin blood to sending copies of books to aliens, these dictators displayed how inept they were to rule their countries.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more