Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
கிருஷ்ண ஜெயந்தி அன்று இந்த 5 விஷயங்களை தெரியாம கூட செஞ்சுராதீங்க... இல்லனா கிருஷ்ணரின் சாபம் வந்து சேரும்...!
Krishna Jayanthi 2023: இந்து மதத்தின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று பகவான் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடும் கிருஷ்ண ஜெயந்தி. கிருஷ்ண பக்ஷத்தின் அஷ்டமி திதியில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அஷ்டமி திதி செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 7 ஆம் தேதி முடிவடைகிறது.
கிருஷ்ண ஜெயந்தி அன்று விரதமிருப்பதை பெரும்பாலான மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். மாலை நேரம் கிருஷ்ணரை வழிபட்டு அவருக்கு பிரசாதம் படைக்கப்பட்ட பிறகு இந்த விரதம் முடிவுக்கு வருகிறது.

இந்த நாளில் கிருஷ்ணரை அவருக்கு பிடித்த பொருட்களை வைத்து வழிபடுவது உங்களுக்கு கிருஷ்ணரின் ஆசீர்வாதத்தைப் பெற்றுத்தரும். அதேசமயம் இந்த நாளில் நீங்கள் செய்யும் சில விஷயங்கள் உங்களுக்கு கிருஷ்ணரின் வெறுப்பை பெற்றுத்தரும்.
இது உங்கள் வாழ்வில் நீங்காத துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். இந்த பதிவில் கிருஷ்ண ஜெயந்தி அன்று நீங்கள் செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளாலாம்.
அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்
கிருஷ்ண ஜெயந்தி அன்று, விரதத்தை கடைபிடிக்காதவர்கள், குறைந்தபட்சம் சுத்தமான சைவ உணவை உட்கொள்வதுடன் வெங்காயம், பூண்டு, ஆல்கஹால் மற்றும் இறைச்சியை முற்றிலும் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இந்த நல்ல நாளில் நீங்கள் ஒரு சாத்விக் உணவை பின்பற்ற வேண்டும்.
அனைவரையும் மதித்து விலங்குகளுக்கு உணவளிக்கவும்
பகவான் கிருஷ்ணர் அனைத்து உயிரினங்களையும் வணங்குகிறார், ஆனால் பசுக்கள் அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். ஏனெனில் அவரது குழந்தைப் பருவம் முழுவதும் பசு மாட்டுக்களுடன்தான் அவர் செலவழித்தார். எனவே இந்த நாளில் அனைத்து மிருகத்தையும் அன்புடன் நடத்துங்கள், அவற்றைத் துன்புறுத்துவதைத் தவிர்க்கவும்.
கிருஷ்ண ஜெயந்தி அன்று விலங்குகள் அல்லது பறவைகளுக்கு உணவளிக்கவும், தண்ணீர் வழங்கவும் பரிந்துரைக்கப்படுகிறது. எந்த மனிதரையும் அவமரியாதை செய்யாமல் அனைவரையும் சமமாக நடத்துவதையும் மனதில் கொள்ள வேண்டும்.
மரங்களை வெட்டக்கூடாது
கிருஷ்ண ஜெயந்தி அன்று மரங்களை வெட்டுவதை தவிர்க்க வேண்டும். பகவான் கிருஷ்ணர் எல்லா இடங்களிலும் எல்லாவற்றிலும் வசிப்பதாக நம்பப்படுகிறது, எனவே இந்த நாளில் மரங்களை நடுவது உங்களுக்கு கிருஷ்ணரின் ஆசீர்வாதத்தைப் பெற்றுத்தரும், அதேசமயம் மரங்களை வெட்டுவது உங்களுக்கு கிருஷ்ணரின் சாபத்தைப் பெற்றுத்தரும்.
அரிசி உணவை சாப்பிடக்கூடாது
கிருஷ்ண ஜெயந்தி நாளில், அரிசி அல்லது பார்லியைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக பழங்கள், பால் அல்லது தயிர் சாப்பிடுவது அல்லது பழங்கள் அல்லது மோர் குடிப்பது போன்றவை பரிந்துரைக்கப்படுகிறது.
துளசி இலைகளை பறிக்கக்கூடாது
இந்த புனிதமான நாளில் துளசி செடியை பிடுங்குவதை அல்லது துளசி இலைகளை பறிப்பதை தவிர்க்க வேண்டும். துளசி ஒரு புனிதமான தாவரமாக கருதப்படுவதால், இந்த நாளில் நீங்கள் கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்க இந்த இலைகளைப் பறிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
உடல் நெருக்கம்
கிருஷ்ண ஜெயந்தி அன்று பிரம்மச்சரியம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் மற்றும் ஒருவர் உடல் உறவுகளைத் அவசியம் தவிர்க்க வேண்டும். கிருஷ்ணரை தூய உள்ளத்தோடும் உடலோடும் வணங்க வேண்டிய நாள் இது. இந்த நாளில் பிரம்மச்சரியத்தை கடைபிடிக்காவிட்டால் கிருஷ்ணரை மகிழ்விப்பதற்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிடும்.



Click it and Unblock the Notifications
