Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. நீங்க எந்த வேலை செஞ்சா கொடிகட்டிப் பறப்பீங்க-ன்னு சொல்றோம்...
Numerology In Tamil: வேத ஜோதிடத்தின் ஒரு முக்கிய பகுதி தான் எண் கணிதம். இந்த எண் கணிதத்தில் ஒருவரது பிறந்த தேதியின் விதி எண்ணைக் கொண்டு, அந்நபரின் குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை, காதல் வாழ்க்கை, நிதி நிலைமை, குணாதிசயங்கள் மற்றும் பல விஷயங்கள் கணித்து கூறப்படுகின்றன.
எண் கணிதத்தில் மொத்தம் 1-9 விதி எண்கள் உள்ளன. இந்த விதி எண்களானது பிறந்த தேதியின் கூட்டுத் தொகையின் ஒற்றை இலக்க எண்ணாகும். உங்களால் உங்கள் தொழில் வாழ்க்கையில் சிறப்பாக செயல்பட முடியவில்லையா? நீங்கள் எந்த மாதிரியான தொழிலை தேர்வு செய்தால், அந்த தொழிலில் கொடிகட்டி பறக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?

அப்படியானால் உங்கள் பிறந்த தேதிக்குரிய தொழிலை தேர்வு செய்யுங்கள். அப்படி தேர்வு செய்து, அதில் நீங்கள் உங்கள் திறமையை வெளிப்படுத்தினால், நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். இப்போது எந்த தேதியில் பிறந்தவர்களுக்கு எந்த வேலை சிறப்பாக இருக்கும் என்பதைக் காண்போம்.
விதி எண் 1
1, 10, 19, 28 ஆகிய தேதிகளின் பிறந்தவர்களின் விதி எண் 1 ஆகும். இந்த எண்ணின் அதிபதி சூரிய பகவான். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் நல்ல தலைவர்களாக இருப்பர். இவர்கள் எந்த ஒரு ரிஸ்க்கையும் எடுக்க தயங்கமாட்டார்கள். இந்த குணாதிசயம் தான் இவர்களை வியாபாரத்தில் கொடிகட்டி பறக்க காரணமாக உள்ளது. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு சிறந்த தொழில் என்றால், அது வணிகம்/வியாபாரம் தான்.
விதி எண் 2
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 2 ஆகும். இந்த எண்ணின் அதிபதி சந்திரன். இவர்கள் நல்ல கற்பனை திறனைக் கொண்டவர்கள் மற்றும் இதோடு தொடர்புடைய துறைகளில் வேலை செய்தால், சிறந்து செயல்படுவார்கள். இவர்கள் சிறந்த ராஜதந்திரிகளை உருவாக்குவார்கள். இவர்களுக்கு ஏற்ற சிறந்த தொழில் என்றால், அது கலை, நடப்பு, ஃபேஷன் டிசைனிங் போன்றவை தான்.
விதி எண் 3
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 3 ஆகும். இந்த எண்ணின் அதிபதி குரு பகவான். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இயற்கையாகவே வலிமையானவர்கள் மற்றும் நல்லவர்கள். இவர்கள் வங்கி மற்றும் நிதித்துறையில் சிறந்து விளங்குவார்கள். சில்லறை வணிகம் இவர்களுக்கு நல்ல வெற்றியைத் தரும். விதி எண் 3-க்கு உரியவர்களுக்கு ஏற்ற தொழில் என்றால், அது வங்கி, நிதி தொடர்பான துறைகள் மற்றும் சில்லறை வணிகம் போன்றவை தான்.
விதி எண் 4
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 4 ஆகும். இவர்கள் தனித்துவமானவர்கள். வாழ்க்கையில் நன்கு ரிஸ்ட் எடுப்பார்கள். ஆனால் தவறான முடிவுகளால் அடிக்கடி சிக்கலில் சிக்குவார்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சூதாட்டத்தை அறவே தவிர்க்க வேண்டும். இவர்களுக்கான சிறந்த தொழில் என்றால், அது கலை மற்றும் நடிப்பு தான்.
விதி எண் 5
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 5 ஆகும். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் நன்கு பேசக்கூடியவர்கள் மற்றும் திறம்பட முடிவெடுக்கும் திறன் கொண்டவர்கள். இவர்கள் மற்றவர்களை பேச்சால் எளிதில் நம்ப வைத்துவிடுவார்கள். இவர்கள் ஒரே மாதிரியான வேலைகளை செய்ய விரும்பாதவர்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கான தொழில் என்றால், அது தொழில்நுட்பம், விளையாட்டு, மார்கெட்டிங் அல்லது விற்பனை போன்றவை தான்.
விதி எண் 6
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 6. இந்த எண்ணின் அதிபதி சுக்கிரன். இவர்கள் மிகவும் கவர்ச்சிகரமான ஆளுமையைக் கொண்டவர்கள். இவர்களுக்காக சிறந்த வேலை என்றால், அது ஹோட்டல் அல்லது ரெஸ்டாரண்ட் தொழில், நடிப்பு போன்ற பொழுதுபோக்கு துறை தான். இதில் இருந்தால், அது அவர்களுக்கு நல்ல புகழைக் கொண்டு வரும்.
விதி எண் 7
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 7. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஆராய்ச்சி துறையில் மிகவும் சிறப்பாக திகழ்வார்கள். இவர்கள் தனித்துவமான மற்றும் ஆக்கப்பூர்வமான திறன்களைக் கொண்டுள்ளனர். இவர்களின் யோசனைகள் எப்போதும் நல்ல வெற்றியைத் தருவதாக இருக்கும். மொத்தத்தில் இவர்களுக்கு ஏற்ற தொழில் என்றால் அது ஆராய்ச்சி துறை தான்.
விதி எண் 8
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 8. இந்த எண்ணின் அதிபதி சனி. இவர்கள் பெரும்பாலும் 35 வயது வரை போராடுவார்கள். மிகவும் எளிமையானவர்கள் மற்றும் எதையும் நேரடியாக பேசக்கூடியவர்கள். இவர்களின் கடின உழைப்பு இவர்களுக்கு வெற்றியை சிறிது தாமதமாகவே தரும். இவர்களுக்கு ஏற்ற தொழில் அரசியல், மெட்டல் தொழில், ரியல் எஸ்டேட், நிதி துறை போன்றவை தான்.
விதி எண் 9
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 9. இந்த எண்ணின் அதிபதி செவ்வாய். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் விளையாட்டுத் துறையில் சிறப்பாக செயல்படுவார்கள். மிகவும் தைரியமானவர்கள். இது தவிர, இவர்களுக்கு ஏற்ற தொழில் என்றால், அது பாதுகாப்பு (defence), கெமிக்கல்கள் அல்லது ரியல் எஸ்டேட் போன்றவை.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications