Latest Updates
-
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம்
இந்த 4 தேதிகளில் பிறந்த பெண்கள் அவர்களின் கணவருக்கு அதிர்ஷ்ட தேவதைகளாம்.. உங்களோட பிறந்த தேதி என்ன?
Numerology: ஜோதிடத்தில் எப்படி கிரகங்களைக் கொண்டு ஒருவரது குணாதிசயங்கள், அவரது எதிர்காலம் போன்றவற்றை கணித்து கூறப்படுகிறதோடு, அதேப் போல் எண் கணிதத்தில் ஒருவரின் பிறந்த தேதி, வருடம், மாதம் ஆகியவற்றை கொண்டு, அந்நபரைப் பற்றிய விஷயங்கள் கணிக்கப்படுகின்றன.
அதுவும் எண் கணிதத்தில் விதி எண்ணிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இது ஒருவரது பிறந்த தேதியில் இருந்து கணக்கிடப்படுகிறது. உதாரணமாக, ஒருவர் 24 ஆம் தேதி பிறந்திருந்தால், அந்நபரின் விதி எண் 6 (2+4) ஆகும். ஒவ்வொரு விதி எண்ணும் ஒருவரது குணாதியங்கள், தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் வாழ்க்கை, எதிர்காலம், காதல் வாழ்க்கை போன்றவற்றை வெளிப்படுத்தும்.

நீங்கள் திருமணமாகாதவராக இருந்து, உங்கள் வாழ்க்கைக்கு ஒரு சிறந்த துணையை தேடிக் கொண்டிருக்கிறீர்களானால், விதி எண் 2 கொண்ட பெண்களைத் தேர்ந்தெடுத்துங்கள். இந்த விதி எண் 2 ஆனது 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களுக்கு உரியதாகும். இந்த தேதிகளில் பிறந்த பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள் அதிர்ஷ்டசாலிகள். ஏனெனில் இந்த பெண்களை திருமணம் செய்து கொண்டால், வாழ்வில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படும். சொல்லப்போனால், இந்த பெண்கள் அதிர்ஷ்ட தேவதைகள்.
வாழ்வில் மாற்றத்தை கொண்டு வருவார்கள்
எண் கணிதத்தின் படி, எண் 2 ஆனது சந்திரனால் ஆட்சி செய்யப்படுகிறது. இந்த எண்ணைக் கொண்ட பெண்கள் தங்களின் கணவரின் வாழ்வில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வருவார்கள். ஏனெனில் இந்த 2 ஆம் எண்ணின் அதிபதியான சந்திரன், இந்த எண்ணைக் கொண்ட பெண்களுக்கு உணர்ச்சி, புத்திசாலித்தனம் மற்றும் உணர்திறன் ஆகியவற்றை வழங்குகிறார்.
அதிகம் உணர்ச்சிவசப்படுவார்கள்
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுவார்கள். உறவுகளுக்கு அதிக முக்கியத்துவத்தைக் கொடுப்பார்கள். இந்த தேதிகளில் பிறந்த பெண்களை திருமணம் செய்து கொண்டால், எந்த ஒரு சூழ்நிலையிலும் இப்பெண்கள் தங்கள் கணவருக்கு ஆதரவாக இருப்பார்கள். முக்கியமாக கடினமான காலங்களில் தங்கள் கணவரை விட்டு பிரியாமல், உறுதுணையாக இருப்பார்கள்.
கணவரை புரிந்து நடப்பார்கள்
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்கள் தங்கள் கணவரின் மனம் புண்படாமல், எப்போதும் அவர்களை புரிந்து நடப்பார்கள். இந்த புரிதல் இவர்களை மிகச்சிறந்த வாழ்க்கை துணையாக வெளிக்காட்டுகிறது. மேலும் இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் தங்கள் கணவரை மட்டுமின்றி, குடும்ப உறுப்பினர்களையும் அனுசரித்து நடந்து கொள்வார்கள். பெரியோர்களுக்கு மரியாதை கொடுப்பார்கள். எப்போதும் வீட்டை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முயற்சிப்பார்கள்
இந்த தேதிகளில் பிறந்தவர்களின் பலம்
* விதி எண் 2-ஐ கொண்டவர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுவார்கள். இது மற்றவர்களை நன்கு புரிந்து கொள்ளவும், அவர்களுடன் நல்ல பிணைப்பை உருவாக்கவும் உதவுகிறது.
* எதையும் சரியாக ஒழுங்காக செய்யக்கூடியவர்கள்.
* முக்கியமாக இவர்கள் மாற்றத்தை விரும்புவார்கள். ஒரே சூழ்நிலையில் இருக்க விரும்பமாட்டார்கள்.
* மிகவும் ரொமான்டிக்கானவர்கள்.
* எளிதில் மன்னிக்கக்கூடியவர்கள்.
பலவீனம்
* எண் 2 ஐ விதி எண்ணாக கொண்டவர்கள், சற்று குறைவான தன்னம்பிக்கையைக் கொண்டிருப்பார்கள்.
* சில சமயங்களில் அளவுக்க அதிகமாக உணர்ச்சிவசப்படக்கூடியதால், இது அவர்களை சுற்றியுள்ளவர்களுடனான உறவை முறிக்க வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
