Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணக்காரராகும் வாய்ப்பைக் கொண்டவர்களாம்.. உங்களோட பிறந்த தேதி என்ன?

Numerology In Tamil: நியூமராலஜி என்னும் எண் கணிதமானது ஜோதிடத்தின் முக்கிய கிளையாக கருதப்படுகிறது. ஜோதிடத்தில் உள்ள ராசிகளைக் கொண்டு எப்படி ஒருவரது குணாதிசயங்களை அறிய முடியுமோ, அதேப் போல் எண் கணிதத்தில் உள்ள 1 முதல் 9 விதி எண்களைக் கொண்டும் ஒருவரது குணாதிசயங்களை அறிய முடியும்.

மேலும் எப்படி ஒவ்வொரு ராசிக்கும் அதிபதிகள் உள்ளனரோ, அதேப் போல் விதி எண்களுக்கும் அதிபதிகள் உள்ளனர். இந்த விதி எண்களானது ஒருவரது பிறந்த தேதியின் ஒற்றை இலக்க கூட்டுத்தொகை ஆகும்.

Numerology: People Born On These Dates Are Rich In Nature

உதாரணமாக 24 ஆம் தேதியில் பிறந்தவரின் விதி எண் 6 ( 2+4) ஆகும். நிச்சயம் பலருக்கும் எந்த தேதியில் பிறந்தவர்களுக்கு பணக்காரராகும் திறன் உள்ளது என்பதை அறிய விரும்புவோம். உங்களுக்கும் அப்படியொரு ஆவல் இருந்தால், தொடர்ந்து படியுங்கள்.

விதி எண் 4

விதி எண் 4-ஐ கொண்டவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். ஆனால் அதே சமயம் அவர்களிடம் ஈகோ அதிகமாக இருக்கும். இந்த எண்ணைச் சேர்ந்தவர்கள் தங்கள் வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். ஆனால் எப்போதும் இவர்களின் நிதி நிலையில் மட்டும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

ஏனெனில் இவர்கள் பணத்தை சேமிப்பதில் கில்லாடிகள். மேலும் இவர்கள் மிகுந்த பிடிவாத குணத்தைக் கொண்டிருப்பார்கள். இவர்கள் ஒரு விஷயத்தை செய்ய தொடங்கினால், அதை நிச்சயம் வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள். இந்த எண்ணிற்கு உரியவர்கள் எந்த வேலையை நன்கு திட்டமிட்டு செய்வார்கள். இப்படி திட்டமிட்டு செய்வதால் தான், இவர்களுக்கு அனைத்திலும் வெற்றி கிடைக்கிறது.

பணம் நிறைய சம்பாதிக்கும் திறமை

விதி எண் 4-ஐ சேர்ந்தவர்கள் மிகவும் தைரியசாலிகள் மற்றும் இவர்கள் நிறைய பணத்தை சம்பாதிக்கும் திறனைக் கொண்டிருப்பார்கள். ஆனால் இவர்களிடம் சற்று அகங்காரம் இருக்கும். அதாவது சற்று திமிர் பிடித்தவர்களாக இருப்பர். இவர்கள் எப்போதும் மற்றவர்களுடன் சேர்ந்து இருக்க விரும்பமாட்டார்கள். சரியான தனிமை விரும்பிகள்.

இவர்களின் மனதில் இருப்பதை கண்டறிவது என்பது முடியாது. இவர்களுக்கு நண்பர்கள் குறைவாகவே இருப்பர். இவர்கள் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்பவர்களாக இருப்பர். முக்கியமாக இவர்கள் தன் தேவைக்காக எவ்வளவு பணத்தையும் செலவழிப்பார்கள்.

எந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த எண்ணிற்கு உரியவர்கள்?

4, 13 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் தான் 4. எண் 4-ன் அதிபதி ராகு. இது சூரிய பகவானுடன் நேரடி தொடர்புடையது. எனவே இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு சூரிய பகவானின் பரிபூர்ண அருள் இருக்கும். இந்த தேதிகளில் பிறந்தவர்களின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும்.

இவர்கள் மற்றவர்களிடம் நன்கு வேலையை வாங்கும் திறனைக கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்புள்ளது. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் லட்சுமி தேவியின் ஆசியைப் பெற்றிருப்பதால், சமூகத்தில் நல்ல புகழையும், மரியாதையையும் பெற்றிருப்பார்கள்.

இந்த தேதிகளில் பிறந்தவர்கள் எப்போதும் தன்னிடம் உள்ள செல்வத்தினால் மிகவும் பெருமைப்படுவார்கள். மேலும் இவர்கள் மற்றவர்களுடன் பேசுவதையோ, அவர்களுடன் சேர்ந்து வேலை செய்வதையோ விரும்பமாட்டார்கள். இவர்கள் சரியான சுயநலவாதிகளாக இருப்பர்.

திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?

விதி எண் 4-ஐக் கொண்டவர்களின் திருமண மற்றும் குடும்ப வாழ்க்கையைப் பற்றி கூற வேண்டுமானால், அவ்வளவு நன்றாக இருக்காது. இவர்களை திருமணம் செய்பவர்கள் ஆரோக்கிய பிரச்சனைகளை தொடர்ந்து சந்திப்பார்கள். இவர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் கூட பழகமாட்டார்கள். திருமணத்திற்கு பின்னரும் இவர்கள் தனிமையிலேயே இருப்பார்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Thursday, September 21, 2023, 13:40 [IST]
Desktop Bottom Promotion