எந்த மாதத்தில் பிறந்தவர்கள் என்ன கல் மோதிரம் அணியவேண்டும்?

Subscribe to Boldsky

மனிதனின் வலிமையும், வல்லமையும் கைகளில் இருக்கிறது. வெற்றி, தோல்விகளை சர்த்தியப்படுத்துவதும் அதுதான். கிரகங்களின் வலிமை குறையும் போது கைகள்கூட உங்களை கைவிட்டு விடுவதாகக் கூறும் ஜோதிட சாஸ்திரம், ராசிக்கற்களைப் பரிந்துரை செய்கிறது.

பிறந்த தேதியுடன் தொடர்புடைய ராசிக்கற்களை அணிந்து கொண்டால், உங்கள் வாழ்க்கை அழகாக மாறிவிடும் என்கிறது. உங்கள் பிறப்புக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் அதிசயங்கள் வெளியாவதற்கு பல்வேறு ராசிக்கற்கள் விற்பனையாகின்றன. 12 மாதங்களில் நீங்கள் எந்த மாதத்தில் பிறந்தீர்கள். இதோ பிடித்துக்கொள்ளுங்கள் இதுதான் உங்கள் ராசிக்கல்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜனவரியில் பிறந்தவர்களா நீங்கள்...

ஜனவரியில் பிறந்தவர்களா நீங்கள்...

கெட்ட கனவுகள் உங்கள் தூக்கத்தைக் கெடுத்தால், குழப்பத்தால் நிம்மதியைத் தொலைந்தால் கார்னெட் கல்லை அணிந்து கொள்ளுங்கள். பாம்பு கடியிலிருந்து பாதுகாக்கும் கவசமாகவும் அது இருக்கும்.கார்னெட்டை அணிந்த உங்களுக்கு இப்போது காதலும், நம்பிக்கையும் ஊற்றெடுக்கும். ஒளிந்து கொண்டிருந்த சக்தி மேலெழுந்து என்ன செய்ய வேண்டும் என்று தட்டி எழுப்பும்

புத்துணர்ச்சியை அதிகரிக்க

புத்துணர்ச்சியை அதிகரிக்க

ரத்தினக் கற்கள் பார்ப்பதற்கு கண்ணைப் பறிக்கும். அழகாக இருக்கிறது என்பதற்காக எல்லா ராசிக்காரர்களும் அணிந்து விடக்கூடாது. ஜோதிட நிபுணர்களின் ஆலோசனையைக் கேட்ட பிறகு ராசிக்கு ஏற்றபடி வடிவம், அளவு, வண்ணங்களை தேர்வு செய்து அணிந்து கொள்ளுங்கள். உங்கள் ஆளுமைத் திறன் அதிகரிக்கும்

ராஜபதவிக்கு பர்பிள்

ராஜபதவிக்கு பர்பிள்

பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்களுக்கு பர்பிளை அணிந்து கொள்ளலாம். ரொம்ப அமைதியா மாறிடுவீங்க.பெரியவங்களைக் கண்டா மட்டையா மடங்கும் தன்னடக்கம் வந்துடும். ராஜபதவிகள் உங்களைத் தேடி வரும்போது, குடிப்பழக்கத்திலிருந்தும் நீங்கள் தூர நிற்பீர்கள்.

ஆரோக்கியமான உடலில் அன்பு தங்கும்

ஆரோக்கியமான உடலில் அன்பு தங்கும்

மார்ச் மாதத்தில் பிறந்தவர்கள் வெளிர் நீலக்கற்களை அணிந்து கொண்டால், உங்களுக்கு இருந்த ஆரோக்கிய குறைபாடுகள் அனைத்தும் நீங்கி விடும்.அன்பும், நம்பிக்கையும் உத்வேகமும் குடிகொள்ளும். விறுவிறுப்பும், தைரியமும் உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்றி விடும்

ஏப்ரலில் பிறந்தவர்களுக்கு வைரம்

ஏப்ரலில் பிறந்தவர்களுக்கு வைரம்

வைரத்தை காதலின் அடையாளம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். ஏப்ரலில் பிறந்தவர்கள் வைரத்தை அணிந்து கொண்டால் துள்ளலான வாழ்க்கை தான். இதுவரை காதலியே இல்லாமல் கனவு மட்டுமே கண்டவர்களுக்கு, அழகான ராட்சஷியின் ஸ்பரிசங்களைப் பெறுவீர்கள். சொல்லாலும், செயலாலும் உங்களை வெல்லவே முடியாது.

மே மாதம் பிறந்தவர்களுக்கு மரகதம்

மே மாதம் பிறந்தவர்களுக்கு மரகதம்

மே மாதத்தில் பிறந்தவர்கள் மரகதத்தை அணிந்து கொள்ள தகுதியானவர்கள். விசுவாசமும், நலமான உடல் நிலையும் கிடைக்கப் பெறுவீர்கள். திருமணமானவர்களுக்கு சந்தான விருத்திக்கு வழிவகுக்கும். உங்களின் ஆக்கப்பூர்வமான செயல்களை எமரால்டு காரிய சித்தியாக்கும்

ஜூன்மாதத்தில் பிறந்தவர்கள் எந்தக்கல் அணியலாம்

ஜூன்மாதத்தில் பிறந்தவர்கள் எந்தக்கல் அணியலாம்

ஜூன் மாதத்தில் பிறந்தும் உங்களுக்கு செல்வாக்குமிக்க பதவிகள் வரவில்லையா. முத்துக்களையும், நீலநில படிகக் கற்களையும் அணிந்து கொள்ளுங்கள். நீங்கள் நினைத்து உடனே கிடைத்து விடும். திருமண பந்தத்தில் மகிழ்ச்சி, அடக்கம், உறுதியான மனநிலை கிட்டும். கிரே, பிளாக், சாக்லேட், வெள்ளை மற்றும் கிரீமி கலர்களில் இந்தக் கற்கள் கிடைக்கிறது

அதிர்ஷ்டத்தை தரும் மாணிக்கக்கற்கள்

அதிர்ஷ்டத்தை தரும் மாணிக்கக்கற்கள்

அதிர்ஷ்டம் உங்களை உதாசீனப்படுத்துகிறது என்று நினைக்கிறீர்களா. ஜூலையில் ஏன் பிறந்தோம் என்று விரக்தியா. இனி அது தேவையில்லை. மாணிக்கற்களை அணிந்து பாருங்கள் அதிர்ஷ்டமும், பெருந்தன்மையும் உங்களை வந்து சேரும்

தனித்துவமாக பிரகாசிக்க பெரிடாட் கற்கள்

தனித்துவமாக பிரகாசிக்க பெரிடாட் கற்கள்

லைட் கிரீன் பெரிடாட் கற்களை ஆகஸ்டு மாதத்தில் பிறந்தவர்கள் அணிந்து கொள்ளலாம். பிசாசுகளோ, மன அழுத்தமோ உங்களை அண்டாது. நீங்கள் தனித்துவமாக பிரகாசிக்கத் தொடங்கி விடுவீர்கள்

புத்தியைக் கூராக்கும் நீலநிற மாணிக்க கற்கள்

புத்தியைக் கூராக்கும் நீலநிற மாணிக்க கற்கள்

தந்திரமான கற்கள் என்று சொல்லப்படும் நீலநிற மாணிக்கற்கள், செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்களுக்கு உரியது. இதனை அணிந்து கொண்டால் சாந்தம், மரியாதை, புத்திக் கூர்மை கைவசப்படும். அவங்கெடக்கான் முட்டாப்பயன்னு யாரும தப்பித்தவறிகூட சொல்லவே முடியாது

கெட்டவர்களை துரத்தும் ஓபெல் கற்கள்

கெட்டவர்களை துரத்தும் ஓபெல் கற்கள்

ஓபல்ஸ் மற்றும் டோர்மலைன் கற்களை அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் அணிந்து கொள்வது பொருத்தமானது. சிந்தனையைத் தூண்டி படைப்பாற்றலை அதிகரிக்கும்.பீடைகளையும், கெட்டவர்களையும் உங்களை விட்டுத் துரத்துவதோடு, வாழ்க்கையில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும்

புஷ்பராகம், சிட்ரைன் கற்கள்

புஷ்பராகம், சிட்ரைன் கற்கள்

புஷ்பராகம் மற்றும் சிட்ரைன் கற்களை அணிந்து கொள்ளும் நபர்கள், நல்ல மூளைத்திறனும், உடல் ஆற்றலும் கிடைக்கப் பெறுவார்கள். நல்ல சிந்தனையோட்டம் உங்கள் வாழ்க்கையை செம்மைப்படுத்த உதவியாக இருக்கும். ஆனால் இதை நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் மட்டுமே அணிந்து கொள்ள வேண்டும் என்பது சாஸ்திர விதி.

டிசம்பரில் பிறந்தவர்களுக்கு 3 கற்கள்

டிசம்பரில் பிறந்தவர்களுக்கு 3 கற்கள்

டிசம்பரில் பிறந்தவர்களுக்கு 3 கற்களை ராசிக்கற்களாக பரிந்துரைக்கிறது ஜோதிட சாஸ்திரம். நீலம் மற்றும் நிறத்தைக் கொண்ட ரத்தினம், நீலப் புஷ்பராகம் மற்றும் டான்சானைட் கற்களை அணிந்து கொள்ளலாமாம். தலைவலியும், வியாதிகளும் உங்களை அண்டாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    discover the hidden meaning of your birthstone

    Every living being on Earth is ruled by a planet or a star. Medieval astrologers as well as astrologers in antiquity knew which minerals
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more