பிட்சா பாக்ஸ்களில் இந்த சிறிய ஓட்டை எதற்கு தரப்பட்டுள்ளன என தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய நாளில் பிட்சா சாப்பிடுவது என்பது கவுரவத்தின் ஒரு நிலைப்பாட்டை குறிக்கும் செயலாக மாறியிருக்கிறது.

"நீ பிட்சா சாப்பிட்டது இல்லையா?" என யாரும் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக பிட்சா சாப்பிடும் ஆட்களும் இருக்கிறார்கள். பிட்சா இல்லை என்றால் உயிர் வாழ மாட்டேன் என்ற அளவிற்கு பிட்சாவின் மீது காதல் கொண்டிருக்கும் நபர்களும் இருக்கிறார்கள்.

மற்ற உணவுகள் பார்சல் செய்து வருவதற்கும், பிட்சா பார்சல் செய்து டெலிவரி செய்யப்படுவதற்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. பிட்சா பாக்ஸ்களில் மட்டும் எல்லா புறமும் ஓட்டைகள் இருக்கும்.

இந்த ஓட்டைகள் பாக்ஸ் மூடி திறக்க மட்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தால், அது தவறு... பிட்சா நீங்கள் உண்ணும் வரை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி பாக்ஸில் ஓட்டைகளுடன் தயாரிக்கப்படுகின்றன...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காற்றோட்டம்

காற்றோட்டம்

பிட்சா பாக்ஸ்களில் அந்த சிறிய ஓட்டைகள் தரப்பட்டுள்ளதற்கான முதல் காரணம், காற்றோட்டம் இருக்க வேண்டும் என்பதற்காக தான். இந்த ஓட்டை இல்லை எனில், சூடான காற்று உள்ளேயே சுழன்று, பிட்சாவை சொதசொதவென்று ஆக்கிவிடும்.

சுவை!

சுவை!

இப்படி காற்று புகாமல் இருந்து, பிட்சாவில் இருந்து வெளிவரும் சூடான காற்று அந்த பெட்டிக்குள்ளேயே இருந்தால் அதன் உண்மை சுவை மாறிவிடும், உண்பதற்கு நன்றாக இருக்காது என்பதற்காக பிட்சா பாக்ஸின் அனைத்து சைடுகளிலும் ஓட்டைகள் இருக்கும்படி தயாரிக்கிறார்கள்.

சூடு!

சூடு!

பிட்சா டெலிவரிக்கு எடுத்து செல்லும் போது வெப்பமாகவும் இருக்கலாம், குளிராகவும் இருக்கலாம். இந்த இரண்டு நிலைகளிலும் பிட்சாவின் சூட்டை சமநிலையில் வைத்துக் கொள்ளவும் பிட்சா பாக்ஸில் இருக்கும் இந்த ஓட்டைகள் பயன்படுகின்றன.

தாய்மை கேடு!

தாய்மை கேடு!

இப்படி பிட்சா பாக்ஸில் ஓட்டைகள் இருப்பதற்கு மற்றுமொரு காரணமாக கூறப்படுவது, உணவு தூய்மை கேடு ஆகிவிட கூடாது என்பதற்காக.

ஓட்டைகள் இல்லையெனில், காற்று அதே பெட்டிக்குள் இருந்து உணவின் உண்மை நிலையை சீர்குலைய செய்துவிடும். இதை தவிர்க்கவே இப்படி பெட்டிகளில் ஓட்டைகளுடன் தயாரிக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why Your Pizza Box Has These Tiny Holes on the Sides!

Why Your Pizza Box Has These Tiny Holes on the Sides!
Story first published: Thursday, September 14, 2017, 13:06 [IST]
Subscribe Newsletter