நாகேஷ் இந்தியாவின் சார்லி சாப்ளின் எல்லாம் இல்லைங்க... அவர் உலகின் ஒரே நாகேஷ்!

Posted By:
Subscribe to Boldsky

தனக்கு கிடைத்த அரை நிமிட வாய்ப்பை வைத்து, அரை நூற்றாண்டுக்கு மேல் திரையுலகில் சிறந்த நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக வலம்வந்த நபர்.

அந்த நாடகத்தில் ஒரு காட்சியில் சாதாரண வயிற்றுவலி நோயாளியாக வந்து செல்ல வேண்டும். அந்த முப்பது நொடி வாய்ப்பை பயன்படுத்தி அரங்கம் அதிர சிரிக்க வைத்த ஆளுமை கொண்ட நபர்.

நடிப்புக்கு திறமை இருந்தால் போதும் அழகு தேவையில்லை என நிரூபித்த நபர், நாகேஷ் பிறந்த தினம் இன்று....

இந்த நாள், அந்த வருடம்: செப்டம்பர் 27

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிறப்பு!

பிறப்பு!

1933 - நகைச்சுவைக் கலைஞர்களுக்கான புதிய சகாப்தத்தையே உருவாக்கியவர் நடிகர் நாகேஷ். சினிமாவில் நடிக்க வேண்டுமானால் அழகான முகம் இருக்க வேண்டும். அழகு தான் பிரதானம் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் மெல்லிய உருவத்துடன் நுழைந்து ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய சிம்மாசனம் இட்டு அமர்ந்துவிட்டார் அவர்.

ரசிகர்கள் மனதில் வாழும் நடிகர் நாகேஷ் அவர்களின் பிறந்தநாள் இன்று.

நாகேஷ் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

கண்டுபிடிப்பு!

கண்டுபிடிப்பு!

1905 - அல்பேர்ட் ஐன்ஸ்டைன் E=mc² என்ற ஃபார்முலாவை அறிமுகப்படுத்திய தினம் இன்று.

1998 - கூகுல் சர்ச் என்ஜின் துவக்கப்பட்ட நாள்.

அசம்பாவிதம்!

அசம்பாவிதம்!

1854 - "எஸ்.எஸ். ஆர்க்டிக்" நீராவிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் மூழ்கியதில் 300 பேர் உயிரிழந்தனர்.

1937 - புலி என்பது பூனை குடும்பத்தை சேர்ந்தது. புலிகளில் பலவகை இருக்கின்றனா. இதில் வரலாற்று சிறப்புமிக்க பாலிப் புலி இனமும் இருந்தது. இந்த இனத்தில் இருந்த கடைசி பாலிப் புலி இறந்த நாள் இன்று.

போர்!

போர்!

1939 - இரண்டாம் உலகப் போர்: வார்சா ஜெர்மனியிடம் சரணடைந்தது.

1940 - இரண்டாம் உலகப் போர்: பேர்லின் நகரில் ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகள் முத்தரப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டன.

1944 - இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகளுக்குப் பெரும் இழப்பை உண்டாக்கிய, ஜெர்மனியின் கெசெல் நகர் மீது கூட்டுப்படைகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நாள்.

நிகழ்வுகள்!

நிகழ்வுகள்!

1777 - ஒரு நாள் மட்டும் ஐக்கிய அமெரிக்காவின் தலைநகராக பென்சில்வேனியாவின் லான்காஸ்டர் நகரம் இருந்தது.

1821 - ஸ்பெயினிடம் இருந்து மெக்சிகோ விடுதலை அடைந்தது.

1825 - உலகின் முதலாவது நீராவி பயணிகள் ரயில் போக்குவரத்து இங்கிலாந்தில் சேவைக்கு துவங்கப்பட்டது.

1928 - ஐக்கிய அமெரிக்கா சீனக் குடியரசை அங்கீகரித்தது.

1938 - ஆர்.எம்.எசு. குயின் எலிசபெத் பயணிகள் கப்பல் கிளாஸ்கோவில் வெள்ளோட்டம் விடப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

This Day That Year: September 27

This Day That Year: September 27