கட்டபொம்மனை ஆங்கிலேயரிடம் ஒப்படைத்த புதுப்பேட்டை விஜய ரகுநாத தொண்டைமான்!

Posted By:
Subscribe to Boldsky

ஆங்கிலேயனின் கண்களில் அச்சத்தை விதைத்த அரசன் கட்டபொம்மன். கட்டபொம்மனின் வீரத்தை இன்றைய தலைமுறை அறிய செய்த பெரிய ஆதாரம் நடிகர் திலகம் சிவாஜி கணேஷனின் கட்டபொம்மன் படமும், அதில் அவர் பேசிய, "எங்களோடு வயலுக்கு வந்தாயா..." எனும் வீர வசனமும்.

This Day That Year: September 24!

இதே தேதியில் (செப்டம்பர் 24) 1799ம் ஆண்டு கட்டபொம்மன் மற்றும் அவருடன் 6 போரையும் புதுக்கோட்டை அரசர் விஜயரகுநாத தொண்டைமான் கைது செய்து, பின் செப் 29-ல் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த நாள், அந்த வருடம்: செப்டம்பர் 24!

பிறப்பு!

1777 - இரண்டாம் சரபோஜி, தஞ்சாவூர் மராத்திய மாமன்னர்!

சரபோஜி மாமன்னர், மராத்திய போன்சலே வம்சத்தைச் சேர்ந்த தஞ்சாவூர் மராத்திய இராச்சியத்தின் மன்னர்களுள் ஒருவராவார். இவர் இராச்சியத்தின் கடைசி சுதந்திர மன்னன் ஆவார். இவர் தஞ்சையின் பிரபலமான சரஸ்வதி மகால் நூலகத்தை அமைத்தார்.

1941 - தெ. ஞானசுந்தரம், தமிழ்ப் பேராசிரியர்!

நாகப்பட்டின மாவட்டத்தின் தேரழுந்தூரை அடுத்துள்ள குழையூர் சிற்றூரில் பிறந்தவர் தெ. ஞானசுந்தரம் அவர்கள். கும்பக்கோணம் அரசுக் கல்லூரியில் பொருளியல் இளங்கலைப் பட்டமும், சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் இவர் பெற்றுள்ளா. இவர் பேராசிரியர் மு. வரதராசனாரின் மாணவர் ஆவார்.

இறப்பு!

2006 - நடிகை பத்மினி!

திருவனந்தபுரத்தில் பூஜாப்புர பகுதியில் பிறந்தவர் பத்மினி. இவரது மூத்த சகோதரி லலிதா, இளையவர் ராகினி இருவரும் புகழ்பெற்ற நாட்டிய நடிகைகள். இவர்களை "திருவாங்கூர் சகோதரிகள்" என பிரபலமாக அழைத்து வந்தனர்.

சோவியத் ஒன்றியம் நடிகை பத்மினிக்கு அஞ்சல் தலை வெளியிட்டு கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் செப்டம்பர் 24, 2006 அன்று இரவு மாரடைப்பால் சென்னையில் காலமானார்.

வரலாறு!

0622 - முகமது நபி மெக்காவில் இருந்து மதினாவுக்கு (ஹிஜ்ரா) இடம்பெயர்ந்த தினம் இன்று.

1674 - பேரரசர் சிவாஜியின் 2வது முடிசூட்டு விழா (தாந்திரீக சடங்கு) நடைபெற்றது.

1789 - அமெரிக்க உச்சநீதி மன்றம் நிறுவப்பட்ட நாள்.

1799 - கட்டபொம்மன் மற்றும் அவருடன் 6 போரையும் புதுக்கோட்டை அரசர் விஜயரகுநாத தொண்டைமான் கைது செய்து, பின் செப் 29-ல் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

1979 - உலகின் முதலாவது மின்னஞ்சல் சேவையை ஆரம்பமான நாள்.

இணைப்பு!

1664 - நெதர்லாந்து நியூ ஆம்ஸ்டர்டாமை இங்கிலாந்துக்குக் கொடுத்தது.

1968 - சுவாசிலாந்து ஐநாவில் இணைந்தது.

English summary

This Day That Year: September 24!

This Day That Year: September 24!
Story first published: Sunday, September 24, 2017, 10:00 [IST]