For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஈ.வே ராமசாமி நாயக்கரின் 'பெரியார்' என்ற பட்டத்திற்கு பின்னால் இருக்கும் இவரைப் பற்றி தெரியுமா!!

இந்தியாவின் முதல் தலித்திய பெண் தலைவர், பெண்களுக்காகவும் தலித் மக்களின் விடுதலைக்காகவும் எண்ணற்ற போராட்டங்களை நிகழ்த்தியவர்.

|

இந்த சமூகத்தில் பெண்கள் தங்களுக்கு பிடித்தமான சுதந்திரமான வாழ்க்கை வாழ்கிறார்களா என்றால் நாம் கண்ணை மூடிக் கொண்டு இல்லை என்று சொல்லிவிடலாம்.

பெண்கள் என்றதும் நகரத்தில் அதுவும் மேலை வீடுகளில் வாழும் பெண்களை மட்டும் நினைத்துப் பார்க்காதீர்கள்.

ஈ.வெ. ராமசாமி நாயக்கர் என்று முழுப்பெயரைச் சொல்லி அழைப்பதை விட 'பெரியார்' என்று அழைப்பதும் அந்த பெயரில் அவரை நினைக்கூர்வதும் தான் நமக்கெல்லாம் பரிச்சயமானது.

அவருக்கு பெரியார் என்று பெயர் வைத்தது யார் தெரியுமா?அன்றைய காலத்திலேயே பெண் விடுதலைக்காகவும் தலீத் விடுதலைக்காகவும் போராடிய வீர மங்கை தான் மீனாம்பாள் சிவராஜ் அவரது வாழ்க்கையில் நடந்த சில மறக்க முடியாத நிகழ்வுகளைப் பற்றி பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீதிபதிக்கான கேள்வி :

நீதிபதிக்கான கேள்வி :

மீனாம்பாள் அவர்கள் இளம் வயதிலேயே எழும்பூர் நீதிமன்றத்தில் பதிமூன்று ஆண்டுகள் கவுரவ நீதிபதியாக இருந்தார்.

கவுரவ நீதிபதிக்கான நேர்முகத்தேர்வில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு அப்போதே மிகவும் தைரியமாக பெண் விடுதலையை மையப்படுத்தி பதிலளித்தார்.

கேள்வி இது தான். உங்கள் கணவர் வழக்கறிஞராக இருந்து நீங்கள் நீதிபதியானால் அவர் வாதடுகிற பக்கம் நீங்கள் தீர்ப்பு சொல்ல மாட்டீர்களா?

Image Courtesy

கணவர் என்பது வீட்டோடு தான் :

கணவர் என்பது வீட்டோடு தான் :

அதற்கு மீனாம்பாள் என்ன சொன்னார் தெரியுமா? கணவர் என்பது வீட்டோடு தான். இங்கே நீதிமன்றத்தில் அவர் வழக்கறிஞர் நான் நீதிபதி. கணவன் மனைவி உறவு இங்கே கிடையாது என்று தெளிவாக பதிலளித்தார்.

Image Courtesy

மகாத்மாவும் பெரியாரும் :

மகாத்மாவும் பெரியாரும் :

அன்னை மீனாம்பாள் , நாராயிணி அம்மாள், டாக்டர் தருமாம்மாள் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தபோது, காந்தியாருக்கு மகாத்மா என்ற பட்டம் கொடுத்து அழைக்கிறார்கள்.

நாம் நம் மக்களுக்காக எல்லாவற்றிலும் முன்னின்று பாடுபடுகிற ஈ.வெ.ரா.அவர்களுக்கு ஒரு பட்டம் கொடுத்து அழைக்கவேண்டும் என்று முடிவு செய்து, இனி அவரை பெரியார் என்று அழைக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

பெரியார் :

பெரியார் :

சுயமரியாதை இயக்க மாநாடுகளில் எல்லாம் தலைவராக,சிறப்பு அழைப்பாளராக,வரவேற்புக் குழுத் தலைவராக பங்கேற்று எண்ணற்ற பணிகளை மேற்கொண்டிருக்கிறார்.

நவம்பர் 20,1938 ஆம் ஆண்டு தமிழக பெண்கள் மாநாடு நடைப்பெற்றது. இதில் பங்கேற்ற ஈ.வே.ராமசாமிக்கு பெரியார் என்ற பட்டத்தை வழங்கினார் அன்னை மீனாம்பாள்.

என் தங்கை :

என் தங்கை :

செட்டி நாட்டரசர் சர் முத்தையா அவர்களுடன் மும்பையில் அம்பேத்கர் பேசிக் கொண்டிருக்கும் போது, எனக்கு சென்னையில் ஒரு தங்கை இருக்கிறார் என்றார்.

அதற்கு முத்தையா ஆச்சரியத்துடன் சென்னையிலா? என்று அதிர்ச்சியுடன் கேட்க ஆமாம்,அவர் பெயர் மீனாம்பாள் தலைவர் சிவராஜின் மனைவி என்றாராம்.

இதில் யோசிக்க என்ன இருக்கிறது :

இதில் யோசிக்க என்ன இருக்கிறது :

ஒரு நாள் சி.டி.நாயகம் அவர்கள் மீனாம்பாள் வீட்டுக்கு வந்தார்.அப்பொழுது ராஜாஜி பிரதமராக இந்தியைத் திணித்த சமயம்.பார்ப்பனர்கள் சூழ்ச்சியால் இந்தி திணிக்கப்படுகிறது.

இதனை நாம் தடுத்து நிறுத்தாவிட்டால், வரும் காலத்தில் நம் பிள்ளைகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

நாம் பெரியாரோடு சேர்ந்து கொண்டு ஏதாவது செய்தாக வேண்டும் என்று கூறினார்.துணைவர் சிவராஜ் அவர்கள் யோசிக்கலாம் என்றார். மீனாம்பாளுக்கு திருமணம் ஆனபுதுசு.

அப்பொழுது சட்டென்று சொன்னார், இதில் யோசிக்க என்ன இருக்கிறது? தீவிரமாக இந்தியை எதிர்க்கத்தான் வேண்டும் என்றார்.

முதல் கூட்டம் :

முதல் கூட்டம் :

முதலில் சென்னை தியாகராயர் நகரில் பொதுக்கூட்டம் ஏற்பாடாயிற்று.அந்த கூட்டத்தை சுமங்கலிதான் துவக்கிவைக்க வேண்டும் என்றார் சி.டி.நாயகம்.

அந்த முறையிலே முதன் முறையாக மீனாம்பாள் கலந்துகொண்ட பொதுக்கூட்டம் அது. பெண் ஒருவர் பேசுகிறார் என்றவுடன் ஆச்சரியத்துடன் கூடினார்கள்.

ஏனென்றால், அந்தக் காலத்தில் பெண்கள் எல்லாம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதோ பேசுவதோ மிகவும் அதிசயம்.

Image Courtesy

இந்தி எதிர்ப்பு :

இந்தி எதிர்ப்பு :

ராயப்பேட்டை ஆண்டியப்பத் தெருவில் உள்ள மீனாம்பாள் வீட்டிற்கு கி.ஆ.பெ விசுவநாதம் வந்திருந்தார்.அவருடன் ஸ்டாலின் ஜெகதீசன் என்பவரும் உடன் சென்றார்.இந்தியை எதிர்த்து மீனாம்பாள் வீட்டிலேயே உண்ணாவிரதம் இருக்கத்துவங்கினார் ஸ்டாலின்.

Image Courtesy

கைது வேண்டாம் :

கைது வேண்டாம் :

சென்னைக் கடற்கரையில் பெரியார் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. பெரியாரைக் கைது செய்விட்டார்கள். பட்டுக்கோட்டை கே.வி.அழகிரிசாமியையும் கைது செய்துவிட்டார்கள்.

அந்த நேரத்தில் நான் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு

பேசினார் அன்னை மீனாம்பாள். ஆனால் ராஜாஜி அவரைக் கைது செய்யவில்லை.

காரணம் இது தான் :

காரணம் இது தான் :

அந்தக் காலகட்டத்தில் வெள்ளைக்காரர்கள் வீட்டில் எல்லாம் சமையல்காரர்களாக பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்கள் இருந்தார்கள்.

அவர்கள் எல்லாம் ராஜாஜியிடம் சென்று,மீனாம்பாள் அம்மாவை எந்தக் காரணத்தை முன்னிட்டும் கைது செய்யக்கூடாது. மீறி கைது செய்தால் நாங்கள் வேலைக்குப் போகமாட்டோம் என்று கூறிவிட்டார்கள்.

அதனால் ராஜாஜியும் மீனாம்பாளைக் கைது செய்யவேண்டாம் என்று கூறிவிட்டார்.

Image Courtesy

பிறப்பு :

பிறப்பு :

மீனாம்பாள் அன்றைய காலத்திலேயே மிகவும் செல்வ செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்தவர்.அவரது தாத்தா மதுரைப்பிள்ளை பெரும் வணிகர். ரங்கூன் மாநகரில் கப்பலில்

வணிகத்தில் ஈடுப்பட்டிருந்தார்.

அப்போதே சொந்தமாக கப்பல் வைத்திருக்குமளவுக்கு செல்வந்தராக விளங்கினார்.அப்பா வாசுதேபிள்ளைக்கும் அம்மா மீனாட்சிக்கும் இதே நாள் 1904 ஆம் ஆண்டு பிறந்தவரை இன்று நினைவு கூர்வோம்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync life this day that year
English summary

This Day That Year December 26

This Day That Year December 26
Story first published: Tuesday, December 26, 2017, 7:58 [IST]
Desktop Bottom Promotion