கணக்கு வாத்தியார பிடிக்கும் தான்.....அதுக்காக இப்டியா?

Posted By:
Subscribe to Boldsky

பள்ளியில் ஒன்பதாம் வகுப்பிலிருந்து புது வாத்தியார். அண்ணன் மார்களுக்கு எடுக்கும் அந்த வாத்தியரை எங்கள் வகுப்புத் தோழர்கள் எல்லாருக்கும் பிடிக்கும்.பெயருக்குத் தான் கணக்கு வாத்தியார் ஆனால் அவர் ஒரு கதை சொல்லி. ஒவ்வொரு கணக்கிற்கும் ஒரு கதை,ஒரு புதிர்,ஒரு விடுகதை என எதையாவது சொல்லி நம்மை சிரிக்க வைத்துக் கொண்டேயிருப்பார்.

சரியாக சொல்கிறவர்களுக்கு எதாவது பரிசும் இருக்கும். அதனாலேயே அவருடைய வகுப்பினை தவிற்க வேண்டும் என்று ஒரு நாளும் நினைத்ததில்லை. இதோ அடுத்த வாரம் அவருக்கு பிறந்தநாள். நானும் என் நண்பர்கள் இரண்டு பேரும் சேர்ந்து எதாவது நினைவுப் பரிசு வாங்கிக் கொடுக்கலாம் என்றிருக்கிறோம்.

பரிசுத் தேர்ந்தெடுப்பதில் ஆரம்பித்து, மூன்று பேரும் பணத்தை பங்கிட்டுக் கொள்வது,மிச்சக் காசை பகிர்ந்து கொள்வது வரை பெரும் ரணகளமாகிவிட்டது. இதோ அந்த கதையை நீங்களே கேளுங்கள். ஒரு ரூபாய் தானே என்று எளிதாக கடந்து செல்லாமல் கவனமாக படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
என்ன பரிசு? :

என்ன பரிசு? :

நண்பர்கள் மூன்று பேர் தங்களின் ஆசிரியருக்கு பிறந்த நாள் பரிசுப்பொருளை வாங்க கடைக்குச் செல்கிறார்கள்.என்ன பரிசுப்பொருள் வாங்குவது என்றே தெரியமால் மூன்று பேரும் நீண்ட நேரம் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதைப் பார்த்த கடைக்காரர் விசாரிக்க விஷயத்தை சொல்கிறார்கள். ஆசிரியரின் பிறந்த நாளுக்கு நல்ல புத்தகம் ஒன்றை பரிசாக கொடுக்கலாமே என்று சொல்ல இருவருக்கும் அது சரியென்று பட்டது.

ஐயா... வாத்தியார் ஐயா :

ஐயா... வாத்தியார் ஐயா :

பரிசு வாங்குவது கணக்கு வாத்தியார் ஆயிற்றே.... எத்தனை நாட்கள் நம் வகுப்பறையில் வந்து புதிர் கணக்குகளை அவிழ்த்து விட்டு நம்மை திண்டாட வைத்திருப்பார். இப்போது நாம் அவருக்கு ஒரு புதிர் கொடுக்கலாம் என்று யோசித்தார்கள்.

எளிய கேள்வி :

எளிய கேள்வி :

அவர் தமிழகத்தின் புகழ்ப்பெற்ற கவிஞர், ஒரு நூற்றாண்டில் பிறந்து அடுத்த நூற்றாண்டு மறைந்தார்.பிறந்த ஆண்டில் கடைசி இரண்டு எண்களை திருப்பிப் போட்டால் இறந்த ஆண்டின் முதல் இரண்டு எழுத்து கிடைக்கும். யார் அவர்???

இதற்கு பதில் கண்டிப்பாக சொல்ல வேண்டும்.

விடை :

விடை :

பாரதிதாசன். பிறந்தது 1891 இறந்தது 1964.

விடையை சொல்வதற்கு பதிலாக காண்பித்து விடலாம் என்று சொல்லி பாரதி தாசனின் கவிதை தொகுப்பினை வாங்கினார்கள்.

கிஃப்ட் :

கிஃப்ட் :

சார் இந்த கவிதை தொகுப்பு வாங்குறோம். எவ்ளோ என்று அந்தப் புத்தகத்தை நீட்டினார்கள்.பின்பக்க அட்டையை பார்த்து 75 ரூவா என்றார். மூவரும் தலா 25 ரூபாயை கடைக்காரர் முன்னால் வைத்தனர்.கிஃப்ட் பேக் பண்ணுமா என்று கேட்க ஆமாம் என்றார்கள்.

முன்னாடி கொடுத்து கிஃப்ட் பேக் பண்ணிக்கோங்க உங்களுக்கு 5 ரூவா டிஸ்கவுண்ட் தரேன். என்று சொல்லி ஐந்து ரூவாயை கடைக்காரர் அவர்களிடமே திரும்பக்கொடுத்தார்.

பேக் செய்யும் இடத்திற்கு வந்தார்கள்.புக் பேக் செய்ய வேண்டுமென்றால் இரண்டு ரூபாய் கட்டணம் என்றார். உள்ளே டிஸ்கவுண்டாக கொடுக்கப்பட 5 ரூபாயை இவரிடம் நீட்டினார்கள். தனக்கான இரண்டு ரூபாயை எடுத்துக்கொண்டு மூன்று 1 ரூபாய் காயினை கொடுத்தார். அந்தப் பணத்தையும் கிஃப்ட்டையும் வாங்கிக் கொண்டு மூவரும் கிளம்பினார்கள்.

கணக்கு எங்கேயோ இடிக்கிதே... :

கணக்கு எங்கேயோ இடிக்கிதே... :

பாரதிதாசன் புக் 75 ரூபா.நம்ம மூணு பேரு 25 ரூபா கொடுத்தோமா? எவ்ளோ ஆச்சு.... 3 X 25 =75.

ம்ம்ம்.... சரிடா

அப்பறம் கடக்காரன் நமக்கு 5 ரூவா டிஸ்கவுண்ட் கொடுத்தானா?

ஆமாடா...

இப்போ புக் விலை 70 ரூபா... சரியா?

ம்ம்ம்ம்....

அப்பறம் பேக் பண்ணோமா?

ஆமா, அவர்கிட்ட 2 ரூபாய கொடுத்தோம். அப்பறம் ஆளுக்கு 1 ரூபா மிச்சம் வாங்கிட்டு வந்திட்டோம்.

ம்ம்... கரெக்ட்டு அப்போ நம்ம கொடுத்த 25 ரூபாய்ல இருந்து 1 ரூபாய கழிச்சிடலாம். இப்போ இந்த புக் வாங்க நம்ம ஒவ்வொருதரும் செலவு பண்ணது 24 ரூபா தான.

அதான் கொடுத்த காசுல ஒரு ரூபா கைக்கு வந்திடுச்சுல்ல அப்போ 24 சரிதான்.

மீதி ஒரு ரூபா எங்கடா? :

மீதி ஒரு ரூபா எங்கடா? :

டேய்.... இருங்கடா இன்னும் 1 ரூபா கணக்கு வர்ல...

இன்னும் என்னடா கணக்கு என்று இருவரும் புரியாமல் விழிக்க.... இவன் விளக்க ஆரம்பித்தான்.

நம்ம புக் வாங்கின காசு எவ்ளோடா?

75 ரூபா அதுல 5 ரூபா ஆஃபர்.

ம்ம்ம் நம்ம எவ்ளோ கொடுத்தோம்.

24 ரூவாடா.

மூணு பேருதும் சேத்தா 72 ரூவா வருதா. 24X3 போட்டுப்பாரு.

ம்ம்... ஆமாமா 72 சரிதான்.

கிஃப்ட் பேக் பண்ண 2 ரூபாவா.. அப்டின்னா 72+2 = 74 ரூபா.

கரெக்ட் தான்.

என்ன கரெக்ட் புக் 75 ரூபா சொன்னங்க இப்போ கணக்குப் போட்டு பாத்தா 74 ரூபா தான வருது.நம்மள ஏமாத்திட்டாங்க ஆஃபர் கொடுக்குறேன்னு சொன்னதும் நம்மளும் அப்டியே நம்பிட்டோம் என்று சொல்ல இருவருக்கும் உண்மை விளங்கியது.

எங்கே அந்த ஒரு ரூபாய்.... யோசித்துக் கொண்டே இவரைப் பற்றியும் சுருக்கமாக தெரிந்து கொள்ளுங்கள். கட்டுரையின் முடிவில் இவர்களது ஒரு ரூபாய் கணக்கு சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டிருக்கும்.

கணித மேதை :

கணித மேதை :

இந்தியாவின் கணித மேதை என்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஸ்ரீனிவாச ராமனுஜரின் பிறந்த தினம் இன்று. சிறு வயதிலேயே கணிதத்தின் மீது ஏற்பட்டுள்ள பற்றினாள் ஏராளமான கணக்குப் புதிர்களை கற்று... புதிய கணக்குகளை கண்டுபித்தார்.

இவர் கண்டுபிடித்த பல்வேறு ஃபார்முலாக்கள் தான் இன்று நமக்கு அடிப்படையாக இருக்கிறது.

 விழா :

விழா :

ஈரோடு மாவட்டத்தில் பிறந்து உலகமே வியந்து பார்க்கும் படி ஆற்றல் கொண்ட இந்த தமிழரின் 125வது பிறந்த நாள் விழா கடந்த 2012 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

இந்த விழாவின் துவக்கத்தில் அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன் சிங் , இனி ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீனிவாச ராமனுஜர் பிறந்த நாளான டிசம்பர் 22 உலக கணித நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார். இன்று உலக கணித நாள்.

கடைக்காரரிடம் நேரடி விளக்கம் :

கடைக்காரரிடம் நேரடி விளக்கம் :

கடைக்காரரிடமே திரும்பச் சென்று 1 ரூபாய் குறைவதைக் கூற கடைக்காரர் முதலில் குழம்பினார். பின்னர் அவர்கள் எங்கே தவறு செய்தார்கள் என்பதை கச்சிதமாக கண்டுபிடித்துவிட்டார். அவர்கள் போக்கிலேயே சென்று புரியவைக்க நினைத்தார் அந்த கடைக்காரர்.

புக் எவ்ளோ சொன்னேன்...?

75.

நீங்க எவ்ளோ கொடுத்தீங்க?

75 தான்.

ஒவ்வொருதரும்?

25 ரூவா

ஆஃபர் 5 ருவா கொடுத்தேனா? அப்பறம் போய் 2 ரூபா கொடுத்து கிஃப்ட் பேக் பண்ணிங்களா?

ம்ம்... ஆமாமா திரும்ப மூணு பேரும் ஒரு ரூவா வாங்கிட்டோம்.

ஹ்ம்... இப்போ உங்க கணக்குப்படி பாத்தா 24 ரூவா தான் செலவழிச்சிருக்கீங்க. சரி தான?

 இதோ அந்த 1 ரூபாய் :

இதோ அந்த 1 ரூபாய் :

சற்று யோசித்தபடி... ஆமா. அப்போ 24X3=72 ரூபா என்றார்கள்.

ம்ம்.. இதோ கணக்கு வந்துருச்சே. இப்போ உங்க கையில 3 ரூவா சில்ற இருக்கா? நீங்க மொத கொடுத்து 75 அதுல 3 கழிச்சா 72. சரிதான.

புக் விலை 70. கிஃப்டே பேக்கிங் 2 ரூவா. சரியா???

மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி முழித்துக் கொண்டனர்.

அடேய் பசங்களா.... நீங்க எங்க தெரியுமா தப்பு பண்ணியிருக்கீங்க கிஃப்ட் பேக் பண்ணதும் சேத்து தான் 72 ரூவா. அதோடு மறுபடியும் கிஃப்ட் பேக் பண்ண காசுன்னு தனியா ரெண்டாவது வாட்டி சேத்த கணக்கு எப்டி சரியா வரும்..?

அட ஆமால்ல என்று சிரித்துக் கொண்டார்கள் அவர்களுக்குப் புரிந்தது. உங்களுக்கும் புரிந்தது தானே?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse this day that year
English summary

This Day That Year December 22

This Day That Year December 22