நிலவில் இறங்கியதாக அமெரிக்கா கூறும் அபோல்லோ 11 மிஷன் குறித்த உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

அப்பல்லோ 11 என்பது நிலாவில் மனிதரை இறக்கிய முதல் பயணமாக கருதப்படுகிறது. ஜூலை 16, 1969இல் 39ஏ ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது அப்பல்லோ 11. ஜூலை 24, 1969ல் இது பூமிக்கு திரும்பியது. நீண்ட காலமாக உண்மையா? பொய்யா என இதுவொரு பெரும் விவாத பொருளாக திகழ்ந்து வருகிறது. 

இந்த பயணத்தின் கமாண்டர் அதிகாரியாக நீல் ஆம்ஸ்ட்ரோங் நியமிக்கப்பட்டிருந்தார். மைக்கேல் கொலின்சும், சந்திரக் கூறு விமானியாக எட்வின் ஆல்ட்ரினும் உடன் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

இன்று வரையிலும் பல இணையதளங்கள், சமூக தளங்களில் அபோல்லோ 11 நிலவில் தரையிறங்கியது குறித்து நடக்கும் விவாதங்களில் பல தகவல்கள் கூறப்பட்டு வருகிறது.

சிலர் அவர்கள் நிலவிற்கு சென்றது உண்மை தான், ஆனால், தரையிறக்க முடியாமல் போனதால் அவர்கள் திரும்பிவிட்டனர். பிறகு அமெரிக்காவின் ஸ்டூடியோ ஒன்றில் காட்சியாக்கப்பட்டது தான் அந்த காணொளிப்பதிவு என்றும் கூறப்படுகிறது.

இப்படி அப்போல்லோ 11 மிஷன் குறித்து பல தகவல்கள் பரவி வருகிறது. இதில் நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய அப்பல்லோ 11 மிஷன் பற்றிய  சில சுவாரஸ்யமான உண்மைகள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜான் எப். கென்னடி

ஜான் எப். கென்னடி

மே 25, 1961ல் முன்னாள் அதிபர் ஜான் எப் கென்னடி தான் நிலாவில் மனிதரை தரையிருக்கும் இலக்கை நிர்ணயம் செய்ததாக அறியப்படுகிறது. நீல் ஆம்ஸ்ட்ராங் தனது குழுவுடன் நிலவுக்கு செல்லும் காணொளியை அப்போது ஐம்பது கோடி பேர் டிவியில் கண்டதாக கூறப்படுகிறது.

Image Credit: wikipedia

பள்ளம்!

பள்ளம்!

அபோல்லோ 11ஐ குறிக்கப்பட்ட இலக்கில் தரையிறக்க முடியாமல் போனது. அருகே பள்ளம் இருந்த காரணத்தால், நாசா குறித்திருந்த இடத்தில் இருந்து நாங்க மைல் தூரம் தள்ளியே அபோல்லோ 11ஐ தரையிருக்க உத்தரவிட்டார் ஆம்ஸ்ட்ராங்.

Image Credit: commons.wikimedia

என்ன பேசினார்கள்...

என்ன பேசினார்கள்...

நிலவில் இறங்கியதும் விண்வெளி வீரர்கள் பேசிய முதல் வார்த்தை என்ன என்ற கேள்விக்கும் சரியான பதில் இல்லை. அல்ட்ரின் காண்டாக்ட் லைட் (Contact Light) என கூறியதாக சில தகவல்கள் மூலம் அறியப்படுகிறது.

Image Credit: wikipedia

நாசா!

நாசா!

ஆனால், நாசா அதிகாரப்பூர்வமாக கூறியுள்ள அறிக்கையில், ஆம்ஸ்ட்ராங் கூறிய "Thats One Small Step for Man, One Giant Leap for Mankind" என்ற வாக்கியம் தான் நிலவில் பேசிய முதல் வார்த்தை என கூறப்பட்டுள்ளது. இந்த வாக்கியத்தில் One Small Step for Man'ல், Manக்கு முன்னாள் "a" வந்திருக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கூறியதில் பிழை உள்ளது என பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

Image Credit: commons.wikimedia

சுயசரிதை விளக்கம்!

சுயசரிதை விளக்கம்!

2006ல் வெளியான ஆம்ஸ்ட்ராங் சுயசரிதையில், ஆம்ஸ்ட்ராங் "a" சேர்த்தே பேசியிருந்தார். ஆனால், அது மக்களால் கேட்க முடியாமல் போனது என்ற தகவல் பகிரப்பட்டிருந்தது.

Image Credit: wikipedia

அமெரிக்க கொடி

அமெரிக்க கொடி

நிலவில் பறக்கவிட்ட அமெரிக்க கொடியின் பாகங்கள் ஹூஸ்டன், டெக்சாஸ் போன்ற பல்வேறு இடங்களில் வாங்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. ஆனால், கடைசியில், அவை யாவும் Sears எனும் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்டதாக அறியப்பட்டது.

நாசா அந்த நிறுவனத்தின் பெயரை கூற ஒப்பவில்லை. இதன் மூலம் அவர்களை விளம்பரப்படுத்துவதாக இருக்கும் என கருதி நாசா அந்நிறுவனத்தின் பெயரை கூற மறுத்தது.

Image Credit: pixabay

உயிர் காத்த பேனா...

உயிர் காத்த பேனா...

அல்ட்ரின் மற்றும் ஆம்ஸ்ட்ராங் நிலவில் இறங்கும் வியப்பில், தெரியாமல் சர்கியூட் சுவிட்சை உடைத்துவிட்டதகவும். அந்த சுவிட்ச் இல்லாமல், மீண்டும் நிலவில் இருந்து கிளம்ப என்ஜினை ஆக்டிவ் செய்ய முடியாது. அது எலக்ட்ரிக் என்பதால் வெறும் விரல்களை வைக்க தயங்கிய விண்வெளி வீரர்கள் பிறகு தான் வைத்திருந்து டிப்பிடு பேனா மூலமாக ஆன் செய்ததாக கூறியுள்ளனர். (அபோல்லோ 11ல் நிலாவிற்கு சென்ற மூன்று விண்வெளி வீரர்களும் பேனா வைத்திருந்தனர்.)

Image Credit: commons.wikimedia

நிலவில் விட்டு வந்தவை...

நிலவில் விட்டு வந்தவை...

நிலவில் வீரர்கள் வெறும் அமெரிக்க கொடியை மட்டும் விட்டுவரவில்லை. ஒரு ஆலிவ் இலை வடிவிலான தங்கம், 73 உலக தலைவர்கள் மற்றும் அதன் முந்தைய அபோல்லோ மிஷனில் பணியாற்றி பயிற்சியின் போது இறந்த மூன்று வீரர்கள் கூறியிருந்த செய்திகள் மற்றும் சில பொருட்களை விட்டு வந்துள்ளனர்.

Image Credit: commons.wikimedia

மொபலை விடவும் கம்மி தான்...

மொபலை விடவும் கம்மி தான்...

நிலவுக்கு மனிதர்களை அனுப்பிய பிறகு அவர்களுடன் தொடர்பு கொண்டுவந்த கணினியின் பவர் இப்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் மொபைலை காட்டிலும் குறைவு தான் என நாசா அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Image Credit: nasa

பொருளாதாரம்

பொருளாதாரம்

விண்வெளிக்கு சென்ற வீரர்களுக்கு பெரிதாக பயனடையும் இன்சூரன்ஸ் அளிக்க எந்த நிறுவனமும் முன்வரவில்லையாம். ஆகையால் வீரர்கள் பொருளாதார ரீதியாக தங்கள் குடும்பத்திற்கு உதவ, தங்கள் கையொப்பமிட்ட நூற்றுக்கணக்கான கடித உறைகளை தங்கள் நண்பர்கள், உறவினர்களிடம் கொடுத்து அதன் மூலம் லாபமீட்ட கூறியதாக சில தகவல்கள் மூலம் அறியப்படுகிறது.

Image Credit: nasa

சந்தேகங்கள்...

சந்தேகங்கள்...

பிரபஞ்சத்தில் தான் காற்று இல்லையே, எப்படி பிறகு அமெரிக்க கொடிமட்டும் நன்கு பறக்கிறது? நிலவில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படும் படங்கள் மற்றும் வீடியோகாட்சிகளில் ஒரு நட்சத்திரம் கூட தென்படவில்லையே ஏன்? என சமூக தங்களில் இந்த நிகழ்வை பொய் என கூறி சந்தேகத்துடன் இப்படி பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

Image Credit: nasa

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things You May Not Knew About the Historic Apollo 11 Moon Landing!

Things You May Not Knew About the Historic Apollo 11 Moon Landing!