For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வில்பர் சற்குணராஜ், இந்தியாவின் முதல் யூடியூப் சென்சேஷனல் - அறிந்தவை, அறியாதவை!

யூடியூப்-ல் முதன் முதலில் தமிழில் வீடியோ பதிவுகள் ஏற்றி பிரபலமானவர் வில்பர் சற்குணராஜ்.

|

மெட்ராஸ் சென்ட்ரல், ஜம்ப் கட்ஸ், ஸ்மைல் சேட்டை, புட் சட்னி, எருமை சாணி என பல தமிழ் யூடியூப் சேனல்கள் இன்று ஒருசில தொலைகாட்சிகளுக்கு நிகராக பார்வையாளர்கள் கொண்டு இயங்கி வருகிறது.

யூடியூப் சேனல்கள் வைத்திருக்கும் சிலர் சின்னத்திரை, வெள்ளித்திரையில் திறமை காட்டும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் நீங்கள் சென்சேஷனல் என்று கூறினால்.... சாரி சார்... அப்போ எங்க வில்பர் சற்குணராஜ் யாரு?

Things To Know About The First Tamil Youtube Vlogger Wilbur Sargunaraj!

இந்தியாவின் முதல் யூடியூப் சென்சேஷனல் தான் இந்த வில்பர் சற்குணராஜ். இவர் வித்தியாசமான குரல், பேசும் விதம், இவர் எடுத்துக் கொள்ளும் தலைப்பு என அனைத்தும் புதுமையாக இருந்தன.

நீங்கள் ஒருவேளை யூடியூப் பிறந்து இந்தியாவில் நடைபோட துவங்கிய காலத்தில் இருந்து வீடியோக்கள் பார்த்துக் கொண்டிருப்பவர் எனில், உங்களுக்கு வில்பர் சற்குணராஜ் பரிச்சயம் ஆனவராக தான் இருப்பார்.

தெரியாதவர்களுக்கு வில்பர் சற்குணராஜ் பற்றிய சில தகவல்கள்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மதுரை காரர்!

மதுரை காரர்!

வில்பர் சற்குணராஜ் மதுரையை சேர்ந்தவர். இவரது தந்தை திருநெல்வேலியையும், தாய் மதுரையையும் சொந்த ஊராக கொண்டவர்கள்.

இவர் தான் இந்தியாவின் முதல் யூடியூப் சென்சேஷன் ஆவார். இவரது யூடியூப் வீடியோக்கள் பலவனவும் டிரென்ட்டிங் என்ற வார்த்தை நமக்கு பரிச்சயம் ஆகும் முன்னரே டிரென்ட் ஆனவை.

இசை, படம்!

இசை, படம்!

வில்பர் சற்குணராஜ் இசை பாடல்கள் மற்றும் படமும் எடுத்துள்ளார். இவர் எடுத்த சிம்பிள் சூப்பர்ஸ்டார் என்ற படம் 2013ல் வெளியானது. இந்த படம் கால்கரி சர்வதேச திரைப்பட விழாவில் 2013ல் திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பாடல்கள்!

பாடல்கள்!

வில்பர் சற்குணராஜ் தனது சொந்த பெயரில் 2009ல் ஒரு இசை ஆல்பமும், 2011 சிம்பிள் சூப்பர்ஸ்டார் என்ற ஆல்பமும், 2015ல் ஃபீலிங் ஜென்கி என்ற ஆல்பமும் இதுவரை வெளியிட்டுள்ளார். இதில் சிம்பிள் சூப்பர்ஸ்டார் ஆல்பம் யூடியூபில் பெரும் வரவேற்பு பெற்றது.

கேலியான தலைப்புகள்!

கேலியான தலைப்புகள்!

இந்தியாவின் முதல் யூடியூப் சென்சேஷன் என கொண்டாடப்பட்ட வில்பர் சற்குணராஜ் யூடியூபில் அன்று முதல் இன்று வரை பதிவு செய்து 90% பதிவுகளின் தலைப்புகள் கேலியாக தான் இருக்கும்.

டி.வி.எஸ். 50 எப்படி ஓட்ட வேண்டும், கரும்பு ஜூஸ் எப்படி குடிக்க வேண்டும், இந்தியன், வெஸ்டர்ன், ஐரோப்பிய கழிவறைகளை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என பல விசித்திரமான, யாரும் எதிர்பாராதபடி தான் வில்பர் சற்குணராஜ் வீடியோக்கள் பதிவு செய்வார்.

உலகம் சுற்றும் வாலிபன்!

உலகம் சுற்றும் வாலிபன்!

இப்போதிருக்கும் பல யூடியூப் சேனல்கள் கிரீன் மேட் பயன்படுத்தி ஒரு ஸ்டுடியோவில் வீடியோ மொத்தத்தையும் பதிவு செய்து கருத்து சொல்லி சென்றுவிடுவார்கள்.

ஆனால், வில்பர் சற்குணராஜ் சற்றே வித்தியாசமாக உலகம் சுற்றும் வாலிபராக திகழ்ந்து வருகிறார். அப்படி என்ன இவர் தொழில் செய்கிறார் என்பது தான் பிடிபடவில்லை.

இசை கலைஞன்!

இசை கலைஞன்!

கலாச்சார இசையில் பெரும் பிரியம் கொண்டவர் வில்பர் சற்குணராஜ். இவர் உலகில் பல இடங்களில் சிம்பிள் சூப்பர்ஸ்டார் என்ற பெயரில் இந்த கலாச்சார இசையை தனது ரசிகர்களுக்கு பிடித்தப்படி விரும்பி செய்து வருகிறார். இவரது இசை பாடல்கள் அமேசான், ஐ-டியூன்ஸ் போன்றவற்றில் கூட கிடைக்கிறதாம்.

பிரபலம்!

பிரபலம்!

யூடியூப் பிறந்த இரண்டே வருடத்தில், அதை கொண்டு தன்னை பிரபலப்படுத்திக் கொண்ட முதல் தமிழன், ஏன் இந்தியன் என்று கூட வில்பர் சற்குணராஜ் அவர்களை குறிப்பிடலாம். இவர் யூடியூப் சேனல் ஆரம்பித்தது ஜூலை 14, 2007.

ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், என அனைத்து சமூக தளங்களிலும் வில்பர் சற்குணராஜ் அவர்களை தொடர்புக் கொள்ள முடியும்.

இந்தியாவின் முதல் யூடியூப் சென்சேஷனாக இருந்தாலும், இப்போதிருக்கும் சேனல்களுடன் ஒப்பிடுகையில் இவரை பின்தொடரும் நபர்கள், வீடியோக்களின் பார்வையாளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக தான் இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things To Know About The First Tamil Youtube Vlogger Wilbur Sargunaraj!

Things To Know About The First Tamil Youtube Vlogger Wilbur Sargunaraj!
Desktop Bottom Promotion