அன்றும், இன்றும் - கடந்த 100 வருடத்தில் உலகம் கண்ட மாற்றம் - புகைப்பட தொகுப்பு!

Posted By:
Subscribe to Boldsky

கடந்த நூறு ஆண்டுகளில் தான் உலகில் பல மாபெரும் மாற்றங்கள் உண்டாகி இருக்கின்றன. அறிவியல் வளர்ச்சி, புவியியல் மாற்றங்கள் என மனிதனின் கண்டுப்பிடிப்பால் உலகம் தன்னில் பல ஆறாத காயங்கள் கொண்டு வருந்தி வருகிறது.

இரண்டு உலகப்போர், எண்ணிலடங்கா அணு ஆயுத சோதனைகள், எண்ணெய் கிணறுகள் அனைத்துக்கும் மேலாக சுற்றுப்புற மாசு, தண்ணீர் மாசு, கடலையே கூவமாக்கிய தனிப்பெருமை மனிதனை மட்டுமே சேரும்...

These Then And Now Pictures Unveil The Impact Of Climate Change On Glaciers In 100 Years!

All Image Credits: Christian Photography

கடந்த எந்த நூற்றாண்டிலும் பதிவாகாத அளவிற்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிக வெப்ப நிலை பதிவாகியிருக்கிறது. சென்ற நூறு வருடத்தில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால், எப்படி இருந்த உலகம், எப்படி மாறியுள்ளது என்பதை காட்டும் ஒரு புகைப்பட தொகுப்பு தான் இது.

அன்றும், இன்றும் உலகின் நிலை...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
க்லேஸியர்!

க்லேஸியர்!

க்லேஸியர் எனப்படும் பனிப்பாறைகள் அதிகளவில் உருகி வருவதற்கு காரணம் உலகளவில் மாறியுள்ள காலநிலை மாற்றம் தான். இதனால், கடல் அளவு மிகுதியாக அதிகரிக்கும். இதன் தாக்கத்தால் கடலோர பகுதிகள் நீரில் மூழ்கலாம்.

தூய்மையான நீர்!

தூய்மையான நீர்!

பனிப்பாறைகளில் தான் தான் உலகின் 68.7% தூய்மையான நீர் தேங்கி இருக்கிறது. உலகில் பத்து சதவீத நிலப்பரப்பு பனிப்பாறைகளால் சூழப்பட்டிருக்கிறது. ஆனால், இது காலநிலை மாற்றத்தால் மெல்ல, மெல்ல குறைந்து வருகிறது.

மூழ்கிய தீவுகள்!

மூழ்கிய தீவுகள்!

தொடர்ந்து பனிப்பாறைகள் உருகி வருவதால் கடல் நீர் அளவு வேகமாக அதிகரித்து வருகிறது. ஏற்கனவே மனித உயிர்கள் வாழாதிருந்த இந்திய பெருங்கடல், அண்டார்டிகா பெருங்கடல் பகுதிகளில் இருந்த பல சின்ன, சின்ன தீவுகள் மூழ்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் உலக போர்!

மூன்றாம் உலக போர்!

வட கொரியா, அமெரிக்கா பிரச்சனை, தீவிரவாதம், மதவாதம் என உலகில் பல பிரச்சனைகள் தலைதூக்கி மூன்றாம் உலக போருக்கு தயாராகி வருகிறது. ஆனால், இயற்கை ஏற்கனவே நம் மீது ஒரு பெரும் இயற்கை சீற்றம் மூலம் மூன்றாம் உலக போர் தொடுக்க தயாராகிவிட்டது. இதை தடுக்க, உலகம் வெப்பம் அடைந்து வருவதை தடுப்பது குறித்து உலக நாடுகள் ஒன்றுகூடி நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

அபாயம்!

அபாயம்!

ஆர்டிக், அண்டார்டிகா, கிரீன்லாந்து போன்ற இடங்களில் ஏற்கனவே பல பனி பாறைகள், பனி குன்றுகள் மொத்தமாக உருகி கடலில் கலந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்தான்புல் முதல் சென்னை வரை!

இஸ்தான்புல் முதல் சென்னை வரை!

நியூயார்க், லண்டன், இஸ்தான்புல், சிட்னி, மும்பை, சென்னை, சிங்கபூர், ஜப்பான் என உலகின் பல முக்கிய பகுதிகள் இன்னும் 30 - 40 ஆண்டுகளில் பெரும் தாக்கத்தை காணவிருக்கின்றன என்பது மட்டுமே இப்போதைக்கு கூற முடியும் சாத்தியக்கூறு.

திட்டங்கள்?

திட்டங்கள்?

ஆனால், அந்த தாக்கத்தினால் அங்கு வாழ்ந்துக் கொண்டிருக்கும் மக்களின் வாழ்வாதாரம், அப்பகுதியை சார்ந்த பொருளாதார, வர்த்தக இடமாற்றம் குறித்து தற்போதைய அரசியல்வாதிகள் என்ன திட்டங்கள் கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்பினால் சுழியம் என்பதை தவிர வேறு எந்த பதிலும் இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: pulse, insync, world
English summary

These Then And Now Pictures Unveil The Impact Of Climate Change On Glaciers In 100 Years!

These Then And Now Pictures Unveil The Impact Of Climate Change On Glaciers In 100 Years!
Subscribe Newsletter