For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின் பத்திரிக்கையாளர்கள் கற்றுக் கொண்ட 10 விஷயங்கள்!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு தான் பத்திரிக்கையாளர்களும், தமிழக மக்களும் அதிமுக பற்றி பல விஷயங்கள் கற்றுக் கொண்டனர்.

|

சில நாட்களுக்கு முன்னர் சொப்பன சுந்தரியை யாரு வெச்சுருந்தாங்கிறதையும், இப்போ யாரு அதிமுக'வ வெச்சுருக்காங்ககிறதையும் தெரிஞ்சுக்கிறது ரொம்ப கஷ்டம் என்ற மீம் ஒன்று மிகவும் வைரல் ஆனது.

தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவிலேயே சக்தி வாய்ந்த கட்சியாக எம்ஜிஆர்-ம், ஜெயலலிதாவும் வழிநடத்திய ஒரு கட்சி, இன்று அவலநிலையில் பிளவுப்பட்டு இருக்கிறது.

இதற்கு காரணம், அக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் மற்றும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் மரணம். இவரது மரணத்திற்கு பிறகு தமிழக மக்களும், பத்திரிக்கையாளர்களும் கற்றுக் கொண்ட பத்து விஷயங்கள் பற்றி இங்கே காணலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

செப்டம்பர் 22-ல் தொடங்கிய பிரேக்கிங் நியூஸ் இன்று வரையும் தமிழகத்தை விட்டு விலகாமல் இருக்கிறது. தினம், தினம் புதுப்புது வகையில் டிசைன், டிசைனாக பிரேக்கிங் நியூஸ் தமிழகத்தை சூழ்ந்த வண்ணமே கொண்டே இருக்கிறது. தமிழக மக்களின் வாழ்வில் பிரேக்கிங் நியூஸ் ஒரு தினசரி அங்கமாகிவிட்டது என்பது மிகையாகாது.

#2

#2

அம்மா இறந்த பிறகு சின்னம்மா, சின்ன சின்னம்மா என, தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற நிலை உருவானது. இதில் அம்மாவின் வாரிசு என கிளம்பியவர்களை தனி பட்டியலில் சேர்க்க வேண்டிய நிர்பந்தம் வேறு உண்டானது.

#3

#3

ஜெயலலிதா இருந்தவரை இருந்த தோரணையும், அவர் இறந்த பிறகு அதிமுக பிரமுகர்களிடம் காணப்பட்ட தோரணையும் முற்றிலும் மாறுப்பட்டு இருந்தன. தமிழக மக்களும், பத்திரிக்கையாளர்களும், சிலரை தோரணை மாற்றங்கள் கண்டு வியந்தனர் என்றே கூறலாம்.

#4

#4

தியானம் என்பது மனதை அமைதிப்படுத்த என்பது மற்ற மாநிலத்தவர்களுக்கு தான். தமிழகத்தில் அதிமுக அல்லது ஜெயலலிதா சார்ந்தவர் யாரேனும், அவரது சமாதியில் தியானம் செய்ய போகிறார்கள் என்றால், அன்று இரவு பத்திரிக்கையாளர்களும், மக்களும் தூக்கத்தை தொலைக்க போகிறார்கள் என்று அர்த்தம்.

#5

#5

காலையில் வாய் நிறைய புகழ்ந்த அதே நபரை, மாலையில் தூற்றி துரத்துவார்கள். அது வேற வாய், இது நார வாய் என வடிவேலு சொன்ன டயலாக் தான் ஞாபகம் வருகிறது.

#6

#6

ட்ரைலர் 12.01 க்கு வெளியிடுவதை போல, படங்கள் வெள்ளிகிழமை வெளியாவதை போல, முக்கிய அறிவுப்புகளை இரவு பத்து மணிக்கு மேலாக தான் அறிவிக்க வேண்டும் என்ற வழிமுறையை அறிமுகப்படுத்தினர் அதிமுக தலைவர்கள்.

#7

#7

ஜெயலலிதா இறப்பதற்கு முன்னர், அதிமுக சார்ந்த செய்திகளில் வெளியான, மக்கள் அறிந்த ஒரே பெரிய பெயர் "அம்மா" மட்டும் தான். பிறகு அவ்வப்போது ஓபிஎஸ். இப்போது தான், செங்கோட்டையன், தங்கமணி, வைத்தியலிங்கம் என பல பெயர்கள் அதிகம் செய்திகளில் வெளியாகின்றன.

#8

#8

அதிமுக எம்.எல்.ஏக்கள் மட்டுமே பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்களுக்கு கிடைப்பது போன்ற இன்ப சுற்றுலா பயணங்கள் கிடைக்கும். கூவத்தூர், கப்பலை சுற்றி பார்ப்பது என இஞ்சாய் செய்தனர்.

#9

#9

தினமொரு எண்ணம், நாளொரு பேச்சு, பணத்திற்காக தான் தங்கள் ஆதரவு தருகிறார்கள் என இருக்கும் இந்த கூட்டத்தை வைத்துக் கொண்டு எப்படி அந்த "அம்மா" கட்சியை கட்டிக்காப்பாற்றினார் என்பது வியக்க வைக்கிறது. இது பெரும் சாதனை தான்.

#10

#10

பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர் என திராவிட கட்சிகள் கண்ட தலைவர்கள் எல்லாம் மக்கள் செல்வாக்கு மிக்கவர்களால் திகழ்ந்தவர்கள்.

ஆனால், இன்று மக்களின் வாக்குகளை எப்படி பிடுங்குவது என்ற எண்ணத்தில் இருக்கும் தலைவர்கள் தான் அதிகம் இருக்கிறார்களே தவிர, மக்களுக்காக சிந்திக்கும் தலைவர்கள் காணாமல் போய்வருகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ten Things Journalists Learnt After Jayalalitha's death!

Ten Things Journalists Learnt After Jayalalitha's death!
Story first published: Friday, April 21, 2017, 10:29 [IST]
Desktop Bottom Promotion