அர்னாப் கோஸ்வாமி பற்றிய பலரும் அறியாத திகைக்க வைக்கும் 10 உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

அர்னாப் கோஸ்வாமி, இப்படி ஒரு ஊடகவியலாளர், இவர் போன்ற வகையில் இவர் தான் முதல் என கூறலாம். இவரது நியூஸ் ஹவர் நிகழ்ச்சி ஒரு எடுத்துக்காட்டு நிகழ்ச்சியாக அமைந்தது. இதை தொடர்ந்து இது போன்ற நிகழ்சிகளை பல செய்தி ஊடகங்களும் பின்தொடர ஆரம்பித்தன.

மக்கள் மத்தியில் தனது தனி பாணியால் ஒரு பிரபலத்தை போன்ற பெரும் பிம்பம் பெற்ற முதல் செய்தி ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமியாக தான் இருக்க முடியும். இவர் மற்றும் அல்ல இவரது குடும்ப பின்னணியும் அரசியல் பிணைப்பு கொண்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

அர்னாப் கோஸ்வாமி ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவர். இவர் 1994-ல் சமூக மானுடவியலில் மாஸ்டர் டிகிரி செயின்ட் ஆண்டனி கல்லூரி, ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் பயின்றார்.

#2

#2

இவர் தனது ஊடகவியலாளர் பணியை 1995-ம் ஆண்டு கல்கத்தாவில் "தி டெலிகிராப்" என்ற நாளேட்டில் தொடங்கினார்.

#3

#3

அர்னாப் ஒரு எழுத்தாளரும் கூட. இவர் 2002-ல் "Combating Terrorism: The Legal Challenge." என்ற இவரது முதல் புத்தகத்தை எழுதினார்.

#4

#4

இவரது தந்தைவழி தாத்தா ராஜானி கண்டா கோஸ்வாமி ஒரு வழக்கறிஞர், காங்கிரஸ் தலைவர் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்.

#5

#5

அர்னாபின் தந்தை மனோராஜன் ஒரு ரிடையர்ட் கர்னல் (Col.Retd). மேலும், இவர் பொது தேர்தலில் பி.ஜே.பி கட்சிக்காக கவுகாத்தியில் போட்டியிட்டும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#6

#6

பிரதமர் நரேந்திர மோடியை அர்னாப் நேர்காணல் கண்ட நிகழ்ச்சி தான் சமூக ஊடகங்களில் பெரிதாய் பிரபலமானதாகும்.

#7

#7

ஸ்ரீ புபேன் ஹசரிகா என்பவர் தான் அர்னாப் கோஸ்வாமியின் ரோல்மாடல். இவர் அசாமை சேர்ந்த பிரபல இசை கலைஞர் ஆவார்.

#8

#8

2012-ம் ஆண்டு இந்தியாவின் பவர்புல் மனிதர்களில் அர்னாப் கோஸ்வாமி 46-வது இடத்தை பிடித்திருந்தார். மேலும், 2015-ம் ஆண்டு பெரும் தாக்கத்தை உண்டாக்கிய நபர் என்ற விருதும் வென்றார்.

#9

#9

2010-ல் இவர் ராம்நாத் கோயங் என்பவரிடம் இருந்து அந்தாண்டின் சிறந்த ஊடகவியலாளர் என்ற விருதும் பெற்றார்.

#10

#10

இவரது ஆக்ரோஷமான பேச்சு, கேள்வி கேட்கும் விதம், எதிரில் அமர்ந்திருப்பவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், தவறை, குற்றத்தை எதிர்த்தால் அதட்டி அமர வைப்பது, அடங்காவிட்டால், ஸ்டுடியோவை விட்டு வெளியேற்றுவது போன்ற சம்பவங்களில் பல முறை ஈடுபட்டுள்ளார் அர்னாப் கோஸ்வாமி. இது தான் இவரை தனித்தன்மை படுத்தி காண்பித்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ten Lesser Known Facts About Arnab Goswami!

Ten Lesser Known Facts About Arnab Goswami!
Story first published: Thursday, April 13, 2017, 10:28 [IST]
Subscribe Newsletter