வானத்தில் இருந்து பூமியில் விழுந்த அபூர்வமான பொருட்கள்!

Posted By:
Subscribe to Boldsky

வானில் இருந்து விண்கல் விழுந்தது, ஏலியனின் பறக்கும்தட்டு விழுந்தது என பல செய்திகள் நாம் படித்திருப்போம். சில காணொளிப்பதிவுகளும் கூட இது சார்ந்து வெளியாகி பரபரப்பை ஏற்படத்தி இருக்கின்றன. இதே போல மீன், இரத்தம், தவளை போன்ற மழைகள் பற்றி நம்மில் சிலர் அறிந்திருப்போம்.

ஆனால், அதற்கான சாத்தியங்கள் என்னென்ன? நிஜமாகவே இவை நிகழ்ந்தனவா? இது போன்று வானில் இருந்து மழை போல் கீழே விழுந்த அபூர்வ நிகழ்வுகள் என்னென்ன என்று இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தவளை மழை!

தவளை மழை!

மீன் மழை, தவளை மழை என நாம் இதுபோன்ற விஷயங்கள் நிறையவே கேள்விப்பட்டதுண்டு. இது எப்படி சாத்தியம் என பலர் கேள்வி எழுப்பலாம். சாத்தியம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஆம், ஆனால் பெரிய நீர்நிலை அருகே அமைந்திருக்கும் இடங்களில் தான் இது அதிகம் சாத்தியம்.

சூறாவளி!

சூறாவளி!

பெரிய நீர்நிலை அருகே சூறாவளி, புயல் காற்று அதிகளவில் நடந்து, அது நீர் நிலையை கடக்கும் போது குறைந்த எடை கொண்டுள்ள மீன், தவளை, புழுக்கள் போன்றவை நீருடன் சேர்ந்து காற்றில் மேல் எடுத்து செல்லப்படும். பயலின் வலிமை குறையும் போது அது வேறு இடங்களில் மழை போல கீழே விழும். இதற்கான வாய்ப்புகள் உண்டு என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சிலந்தி மழை!

சிலந்தி மழை!

ஏப்ரல் 6,2007-ல் அர்ஜென்டினாவின் சான் பெர்நார்டோ எனும் மலை அருகே சிலந்தி மழை பெய்தது. ஒவ்வொரு சிலந்தியும் நான்கு அங்குலம் அளவிற்கு பெரிதாக இருந்தன என அதை கண்டவர்கள் கூறியுள்ளனர். அந்த மலையில் அதிகளவில் இதே போன்ற சிலந்திகள் இருந்தன என அப்பகுதியை கடந்து சென்றவர்கள் மேலும் கூறியுள்ளனர்.

இரத்த மழை!

இரத்த மழை!

2008-ல் கொலம்பியாவில் இரத்த மழை பெய்தது. இது கடவுளின் சாபம் என அப்பகுதியை சேர்ந்த ஒரு இன மக்கள் கருதினர். ஆனால், இது போன்ற மழை கேரளத்திலும் கடந்த 2001-ல் ஒருமுறை பெய்தது குறிப்பிடத்தக்கது.

அறிவியல் விளக்கம்!

அறிவியல் விளக்கம்!

மழையுடன் தூசு கலக்கும் போது இது மாதிரி உண்டாகலாம். அதாவது, கடுமையான காற்றுடன் கலக்கும் தூசு நீராவி முகில்களாக ஒடுங்கி மழையாக பெய்யும் போது சிவப்பு நிறமாக மாறலாம்.

சிலர் வேறு சில நுண்ணுயிர்கள் மழையுடன் சேர்ந்து கலக்கும் போது சிவப்பு மழை வரலாம் என கூறுகின்றனர்.

புழுக்கள் மழை!

புழுக்கள் மழை!

அமெரிக்காவில் ஒருமுறை பல்லாயிரக்கணக்கான புழுக்கள் வானில் இருந்து மழை போல கொட்டியது. இதை ஒரு பெண் போலீஸ் நேரில் கண்டதாகவும் கூறியுள்ளார். இது எதனால் ஏற்பட்டது என்பது மர்மமாகவே இருக்கிறது.

பாலைவனத்தில் மீன் மழை!

பாலைவனத்தில் மீன் மழை!

தனாமி எனும் ஆஸ்திரேலிய பாலைவனத்தில் கடந்த 2004-ல் வானில் இருந்து மீன்கள் மழை போல கீழே விழுந்தன என ஒரு செய்தி பதிவானது. இது இந்த ஒருமுறை மட்டும் நடக்கவில்லை. மீண்டும் 2010-ல் பிப்ரவரி மாதம் இரண்டு முறை நடந்தன.

பறவை மழை!

பறவை மழை!

ஐரோப்பியாவில் வேல்ஸ் பகுதியின் அருகே இருக்கும் கொக்ஸ்லே எனும் இடத்தில் ஸ்டார்லிங் எனப்படும் கட்டடங்களின் நடுவே கூடு கட்டும் வகையை சேர்ந்த பறவை இனம் கடந்த மார்ச் 2010-ல் மழை போல வானில் இருந்து இறந்த நிலையில் விழுந்தன. இதற்கான காரணம் சரியாக அறியப்படவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Strangest Things That Have Fallen From The Sky!

Strangest Things That Have Fallen From The Sky!
Story first published: Wednesday, April 5, 2017, 11:55 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter