Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
இரண்டு முறை திருமணம் செய்த பிரபல கிரிக்கெட் வீரர்கள்!
யோகராஜ் முதல் ஷோயப் மாலிக் வரை இரண்டு முறை திருமணம் செய்த பிரபல கிரிக்கெட் வீரர்கள்.
காதல் திருமணத்திற்கு முன்னும் வரும், திருமணத்திற்கு பின்னும் வரும். மேலும், இது ஒரே நபர் மீது மட்டும் தான் இருக்கும் என்பதை யாரும் கூற முடியாது. பிரபா கிரிக்கெட் வீரர்கள் சிலர் இரண்டு முறை திருமணம் செய்துள்ளனர். சிலர் மனைவி இறந்த பிறகு, சிலர் வேறு பெண்ணின் மீது காதல் உறவில் சிக்கியதால்.
இதோ! யோகராஜ் (யுவராஜ் சிங்கின் தந்தை) முதல் ஷோயப் மாலிக் வரை இரண்டு முறை திருமணம் செய்த பிரபல கிரிக்கெட் வீரர்கள்...

யோகராஜ்
இந்தியாவிற்காக ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் ஆறு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார் யோகராஜ். இவர் ஷப்னம் (யுவராஜின் தாய்) முதல் திருமான் செய்துக் கொண்டார். பிறகு விவாகரத்தும் செய்தார்.

2வது திருமணம்!
இப்போது யோகராஜ் சத்வீர் கவுர் எனும் பெண்ணை மணந்து வாழ்ந்து வருகிறார். இவர்க்கு இரண்டு பிள்ளைகள். இவர் நிறைய பஞ்சாபி மற்றும் பாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.

தினேஷ் கார்த்திக்!
தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் நிகிதா என்பவரை முதலில் திருமணம் செய்துக் கண்டார். நிகிதா முரளி விஜய் மீது காதலில் விழ. இவர்கள் விவாகரத்து செய்துக் கொண்டனர்.

2வது திருமணம்!
பிறகு 2015-ல்இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகாவை தினேஷ் இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார்.

முகமது அசாருதீன்!
இந்தியாவின் சிறந்த கேப்டன்களில் ஒருவர் முகமது அசாரூதின். இவர் நவ்ரீன் என்பவரை திருமணம் செய்து இரண்டு பிள்ளைகள் பெற்றவர்.

2வது திருமணம்!
1996ல் விவாகரத்து செய்துவிட்டு பாலிவுட் நடிகை சங்கீதாவை இரண்டாவதாக 2010ல் திருமணம் செய்துக் கொண்டார். இவர்கள் இருவரும் நீண்ட வருடங்கள் காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

வாசிம் அகரம்!
வாசிம் அக்ரம் ஒரு சைக்காலஜிஸ்ட் நிபுணரை திருமணம் செய்துக் கொண்டார். எதிர்பாராத விதமாக அவர் 2009ல் பல உறுப்பு செயலிழந்து மரணமடைந்தார்.

2வது திருமணம்!
பிறகு 2013ல் ஷனைர் தாம்சன் எனும் பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது.

ஷோயப் மாலிக்!
2010ல் ஷோயப் மாலிக் மற்றும் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கும் திருமணம் ஆனது. ஆனால், இதற்கு முன்னரே 2002-ல் ஷோயப் ஆயிஷா என்ற பெண்ணை திருமணம் செய்ததாக கூறப்பட்டது.

முதல் திருமணம்!
பிறகு அது பெரும் சர்ச்சையாக, அந்த பெண்ணை விவாகரத்து செய்தார் ஷோயப். ஆகவே, சானியாவை ஷோயப் இரண்டாவதாக திருமணம் செய்தவர்.

வினோத் காம்ப்ளி!
முதலில் வினோத் காம்ப்ளி தனது தோழி நோயெல்லா லூயிஸ் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இந்த திருமணம் நீண்ட நாள் நீடிக்கவில்லை. வினோத் காம்ப்ளி ஆண்ட்ரியா எனும் மாடல் அழகியுடன் ரொமாண்டிக் உறவில் இருந்தார்.

2வது திருமணம்!
விவாகரத்து செய்த பிறகு ஆண்ட்ரியாவை வினோத் காம்ப்ளி திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு 2010-ல் குழந்தை பிறந்தது.



Click it and Unblock the Notifications











