இந்திய ரூபாய் தாள்களில் காந்தி படம் மட்டும் இருப்பது ஏன்? அப்படத்தை பற்றிய உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

ஏன் காந்தியின் படம் மட்டும் இந்திய ரூபாய் தாள்களில் அச்சிடப்பட்டுள்ளன? ஏன் மற்றவர்கள் யாரும் இந்திய சுதந்திரத்திற்காகப் போராடவில்லையா என்ன? இது ஒரு அநீதியான செயல், அவரவர் மாநிலத்தில் சுதந்திர போராட்டத்தில் போராடிய தலைவர்களின் படங்கள் சேர்த்தால் தான் என்ன? இப்படி பலருக்கும் இந்த கேள்விகள் பலமுறை எழுந்திருக்கும்.

History behind Mahatma Gandhi’s picture on Indian Currency notes!

Image Credits: Commons Wikimedia

சிலர் பாரதி, நேதாஜி, சர்தார் வல்லபாய் பட்டேல் போன்றவர்களின் படங்களை மார்பிங் செய்து இதை வரவேற்றால் லைக் செய்யுங்கள், அதிகம் ஷேர் செய்யுங்கள் என சமூக தளங்களில் பல முறை பகிர்ந்தும் உள்ளனர்.

ஆனால், இந்திய ரூபாய் தாளில் காந்தியின் படம் மட்டும் அச்சிடப்படுவதற்கு கூறப்படும் காரணங்கள் என்னென்ன? மேலும், அந்த படம் எப்போது, எங்கே எடுக்கப்பட்டது என்பது குறித்தும் இந்த தொகுப்பில் அறிந்துக் கொள்ளலாம் வாங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புன்னகை தவழும் காந்தி!

புன்னகை தவழும் காந்தி!

"தேடி பாக்குறேன் காந்தியதான் காணோம்

தேசத்தில நாளும் காந்தியதான் காணோம்

ரூவா நோட்டுல வாழுறாரு காந்தி

வாய் நிறைய ஜோரா புன்னகையை ஏந்தி..."

"காசு மேல, காசு வந்து..." பாடலில் இடம்பெற்றிருக்கும் இந்த வரிகளில் பல அர்த்தங்கள் இருக்கின்றன. அனைவருக்கும் பிடித்தமான அந்த புன்னகை ஏந்திய காந்தியின் படம் எப்போது எங்கே எடுத்தது என்பது யாருக்கும் தெரியாது.

பிரிட்டிஷ் அரசியல்வாதி!

பிரிட்டிஷ் அரசியல்வாதி!

நாம் விருப்பத்துடன் காணும் புன்னகை மன்னன் காந்தியின் படம் பிரிட்டிஷ் அரசியல்வாதி லார்ட் ஃப்ரெடெரிக் வில்லியம் பெத்திக்-லாரன்ஸ் என்பவருடன் எடுத்துக் கொண்ட ஒரு படமாகும். அதில் இருந்து கிராப் செய்யப்பட்டு மிரர் இமேஜ் தோற்றத்தில் தான் நமது இந்திய அரசாங்கம் ரூபாய் தாள்களில் அச்சிட்டு வருகிறது.

Image Credit:Commons Wikimedia

யார் இவர்?

யார் இவர்?

லார்ட் ஃப்ரெடெரிக் வில்லியம் பெத்திக்-லாரன்ஸ் ஒரு பிரிட்டிஷ் அரசியல்வாதி. இவர் பிரிட்டனில் பெண்கள் வாக்குரிமை இயக்கத்தை நடத்திய தலைவர்.

இவர் இந்தியா மற்றும் பர்மாவின் செயலாளராக இருப்பதாம் நூற்றாண்டின் முதல் இரண்டு தசாப்தங்களில் பணியாற்றிவர்.

Image Credits: Commons Wikimedia

யார் எடுத்த படம் இது?

யார் எடுத்த படம் இது?

காந்தி மற்றும் லார்ட் ஃப்ரெடெரிக் வில்லியம் ஒன்றாக இருக்கும் இந்த படம் 1946ல் எடுக்கப்பட்ட படமாகும். இதை யார் எடுத்தார் என்பது அறியப்படவில்லை. இந்த படம் இப்போது ராஷ்டிரபதி பவன் என அழைக்கப்படும் அன்றைய வைஸ்ராய் ஹவுஸ்-ல் எடுக்கப்பட்டது ஆகும்.

1996 முதல்...

1996 முதல்...

ஆரம்பத்தில் இந்திய ரூபாய் தாள்களில் வேறு அடையாளங்கள் தான் அச்சிடப்பட்டு வந்தன. 1996 முதல் தான் ரூ.5 முதல் ரூ. 1000 வரை காந்தி படம் ஆச்சிட துவங்கியது இந்திய அரசு. சமீபத்தில் பழைய ரூ.500, ரூ.1000 செயலிழப்பு செய்யப்ப்பட்ட பிறகு புதிய ரூ.500, ரூ.2000 வரை காந்தியின் படமே அச்சிடப்பட்டு வருகிறது.

Image Credits: State Express India

காரணங்கள்!

காரணங்கள்!

நாம் முன்பு கூறியது போலவே ஏன் வேறு விடுதலை போராட்ட தலைவர்கள் படங்கள் இன்றி காந்தி படம் மட்டும் அச்சிடப்பட்டு வருகிறது என்பதற்கு பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றில் சில,

  • இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பரிச்சயம் ஆனவர் காந்தி.
  • இந்தியா பல மாநிலங்கள், பல வகை மனிதர்களை கொண்டுள்ளது. அதில் அனைவர் மத்தியிலும் சமமாக காணப்படுபவர் காந்தி.
  • சாதி, மத வேறுபாடுகளுக்குள் அடைப்படாதுள்ள நபர் காந்தி.

இது போன்ற காரணங்களுக்காகவே காந்தியின் படம் இந்திய ரூபாய் தாள்களில் அச்சிடப்படுவதாக கூறப்படுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

History behind Mahatma Gandhi’s picture on Indian Currency notes!

History behind Mahatma Gandhi’s picture on Indian Currency notes!
Subscribe Newsletter