For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  அனுஷ்கா ஷர்மாவிற்கே சந்தேகத்தை எழுப்பும் விராட் கோலியின் செராக்ஸ் காப்பி!

  |

  உலகில் ஒருவரை போலவே ஏழு பேர் இருப்பார்கள் என கூறுவதுண்டு. ஆனால், நம்மளை ஆச்சரியப்படுத்தும் வகையில் ஒரு சம்பவத்தை காணும் வரை இதனை நம்மால் நம்ப முடியாது. சில சமயங்களில் வெளியூர் செல்லும் போது நமக்கு தெரிந்தவர்களை போலவே யாரையேனும் காண்போம். பிறகு ஊருக்கு வந்து, யப்பா... உன்ன மாதிரியே ஒருத்தன நான் அந்த ஊருல பாத்தேன் தெரியுமா?அப்படியே அச்ச அசல் உன்ன மாதிரியே இருந்தான் என வியந்து பேசுவோம்.

  யாரோ இருவரை போல அச்ச அசல் ஒருவர் இருந்தால்... பரவாயில்லை. ஆனால், இங்கே இந்திய கிரிக்கெட் அணியின் ஆக்ரோஷ வீரர் விராட் கோலி போல அமித் மிஸ்ரா என்ற நபர் தோற்றமளிப்பது வியப்பின் உச்சமாக இருக்கிறது. நார்த் இந்தியாவில் இப்போது விராட் அளவிற்கு இவரும் ஃபேமஸ் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  கடவுளின் படைப்பு

  கடவுளின் படைப்பு

  கடவுளின் படைப்பில் பல அதிசயங்கள் நடக்கும் என கூறுவார்கள். அதில் ஒரு அதிசயம் தான் இந்த ஒரே மாதிரி உருவ ஒற்றுமைக் கொண்டு பிறக்கும் வெவ்வேறு நபர்கள். பெரும்பாலும், ஒருவரின் மரபணுவில் இருந்து பிறக்கும் அவரது பிள்ளைகள், இரட்டையர்களாக இருந்தால் ஒரே தோற்றம் என்பது அறிவியல் ரீதியாக சாத்தியம். ஆனால், இது எப்படி?

  இப்படியும் வரலாற்றில் இடம் பிடிக்கலாம்...

  இப்படியும் வரலாற்றில் இடம் பிடிக்கலாம்...

  விராட் கோலி வரலாற்றில் இடம்பிடிக்க நிறைய உழைத்துள்ளார். பல இழப்பு, தியாகங்கன்ல், சோதனை காலங்களை தாண்டி தான் இன்று ஒரு சாதனை மன்னனாக திகழ்ந்து வருகிறார் விராட் கோலி. ஆனால், விராட் கோலியின் செராக்ஸ் காப்பியான அமித் மிஸ்ரா அவரை போன்ற முக தோற்றம் கொண்டுள்ளதால் புகழ் அடைந்து வருகிறார். ஏற்கனவே இவரை கண்டு பலர் விராட் என ஏமார்ந்து வருகிறார்கள். அதிலும், விராட் போலவே உடை அணிவது, சிகை அலங்காரம் செய்துக் கொள்வதை காணும் போது, அனுஷ்கா சர்மாவே இவரை கண்டால் விராட் தான் என நம்பி ஏமார்ந்து விடுவார்.

  சொந்த ஊர்!

  சொந்த ஊர்!

  அமித் மிஸ்ராவின் சொந்த ஊர் சுல்தான் பூர். இந்த இடம் உத்திரபிரதேசம் மாநிலத்தில் இருக்கிறது. இவர் ஜி.எல்.எ எனும் பல்கலைகழகத்தில் மெக்கானிக்கல் படித்துள்ளார். இவருக்கு தொகுப்பாளர் ஆகவேண்டும் என்பது பெரிய கனவாக இருந்து வந்துள்ளது.

  கல்லூரி காலம்!

  கல்லூரி காலம்!

  கல்லூரி காலத்தில் அமித் மிஸ்ரா விழாக்களில் தொகுப்பாளாராக இருந்துள்ளார்.ஆனால், ஒரு போதும் தான் ஒரு நடிகர் ஆவேன் என எதிர்பாக்க வில்லை என்கிறார் அமித் மிஸ்ரா.

  பி.ஜே.பி

  பி.ஜே.பி

  உத்திரப்பிரதேச மாநிலத்தில் அமித் மிஸ்ராவின் தந்தை செயலாளர் பொறுப்பில் இருந்து வருகிறார். மிக சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர் அமித் மிஸ்ரா. இவரது தந்தைக்கு தன் மகன் இப்படியொரு நிலைக்கு உயர்வான் என்ற எண்ணமே இல்லை என்கிறார்.

  திருப்பம்

  திருப்பம்

  ஒரு நாள் கல்லூரிக்கு மீண்டும் சென்றுக் கொண்டிருந்த போது, விமான பயணத்தில் அமித் மிஸ்ரா இக்ரம் அக்தரை கண்டுள்ளார். இவர் இந்தியாவின் திரைப்பட எழுத்தாளர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர்கள் இருவரும் மத்தியில் விராட் கோலி பற்றிய பேச்சு எழுந்துள்ளது. தனது எதிர்கால இலட்சியங்கள் பற்றி இக்ரம் அக்தாருடன் பகிர்ந்துக் கொண்டார் அமித் மிஸ்ரா. மேலும், விராட் கோலியின் பெயர் தன்னுடன் எப்படி ஒட்டிக் கொண்டது என்றும், அதனால் தான் என்னென்ன சங்கடங்களை எதிர்கொண்டேன் என்றும் கூறியுள்ளார் அமித்.

  இந்த ஒன்லைனை கொண்டு இக்ரம் அக்தார் ஒரு கதை எழுதியுள்ளார்.

  எப்படி?

  எப்படி?

  கல்லூரியின் கடைசி ஆண்டில் படித்து வந்த அமித் மிஸ்ராவுக்கு எப்படி நடிப்பு கற்றுக் கொள்வது என்பதில் பெரிய சந்தேகம். இக்ரம் அக்தார் நேர்த்தியான திரைப்பட இயக்குனர். இக்ரமின் உதவியோடு,, நடிப்பு, நடனம் மற்றும் நடிப்புக்கு தேவையான அனைத்தும் கற்றுள்ளார் அமித்.

  விராட்!

  விராட்!

  அமித் மிஸ்ராவை வைத்து விராட் என்ற பெயரில் திரைப்படம் எடுக்க முயற்சி செய்து வருகிறார்கள். விராட் கோலியிடம் இருந்து நான் ஒன்றை கற்றுக் கொண்டுள்ளேன். "இன்று நீ 90ராக இருக்கிறாய் என்றால். நன்கு முயற்சி செய்து நாளை 90.1க்கு முன்னேறு. எக்காரணம் கொண்டும். 89.9க்கு கீழே இறங்கிவிடாதே." இதை பின்பற்றி தான் நான் உழைத்துக் கொண்டு வருகிறேன் என்கிறார் அமித்.

  மக்கள் கூட்டம்!

  மக்கள் கூட்டம்!

  ஒருமுறை பெங்களூர் சென்ற போது, மக்கள் பலர் இவரை விராட் கோலி என நினைத்து சூழ்ந்துக் கொண்டார்களாம். பிறகு பத்து காவலர்களின் உதவியுடன் தான் அந்த கூட்டத்திடம் இருந்து அமித் மிஸ்ராவை காப்பாற்றியுள்ளனர். அமிஷ் மிஸ்ரா சில விளம்பரங்களிலும், படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என கூறப்படுகிறது.

  சமூக ஊடகம்!

  சமூக ஊடகம்!

  அமித் மிஸ்ரா எந்த ஒரு சமூக ஊடகத்திலும் இல்லை. இவர் தனது நண்பர்கள் மற்றும் குழுவிடம் இருந்தே பல தகவல்களை பெறுகிறார். தான் ஒரு சாதரணமான வாழ்க்கை வாழ விரும்புகிறேன் என கூறுகிறார். அதனால் தான் சமூக தளங்களில் இருக்க விருப்பமில்லை என்றும் கூறுகிறார் அமித்.

  திறமை!

  திறமை!

  விராட் போன்ற தோற்றம் கொண்டிருந்தாலும். தனக்கென கடவுள் தனி திறமைகள் கொடுத்துள்ளான். அதை வைத்து எப்படி சாதிக்க வேண்டும் என்றே நான் கருதுகிறேன் என கூறுகிறார் அமித் மிஸ்ரா.

  அமித் மிஸ்ரா ஏற்கனவே ஸ்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். விராட் பற்றிய ஒரு தொகுப்பில், ஒரிஜினல் விராட் வைத்து சில முக்கிய காட்சிகள் எடுத்துவிட்டு. அவர் விளையாடுவது போன்ற காட்சிகளை அமித் மிஸ்ராவை வைத்து படமாக்கியுள்ளனர் என கூறப்படுகிறது.

  அட!

  அட!

  விராட் கோலி போலவே ஆரோக்கியம் மற்றும் பிட்னஸ் மீது அதிக கவனம் கொண்டுள்ளார் அமித். தினமும் தவறாமல் இரண்டில் இருந்து மூன்று மணி நேரம் கடும் உடல் பயிற்சி செய்கிறார். அதனால் தான் என்னவோ, விராட் போன்ற தோற்றம் அப்படியே இருக்கிறது அமித்திடம்.

  மேலும், தானாக எதாவது சாதித்தாலும், அதனுடன் விராட் கோலியின் செராக்ஸ் காப்பி என பெயரை சேர்ப்பதை கண்டு எரிச்சல் அடைகிறார் அமித். எனது வெற்றியில் ஏன் விராட் பெயரை சேர்க்கிறீர்கள் என கேள்வி எழுப்புகிறார்.

  எத்தன தடவை!

  எத்தன தடவை!

  பலமுறை விமான நிலையங்களில் விராட் என நினைத்து மக்கள் என்னை சூழ்ந்து கொள்வார்கள். ஆட்டோகிராப், போட்டோ என நச்சரிப்பார்கள். நான் விராட் இல்லை என்று கூறினாலும், பலமுறை அவர்கள் நான் அவாயிட் செய்ய இப்படி கூறுகிறேன் என கருதி என்னை விடவே மாட்டார்கள். சிலர் நான் பந்தா காண்பிக்கிறேன் என கருதி திட்டியதும் உண்டு என்கிறார் அமித் மிஸ்ரா.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Meet Amit Mishra, Who Looks Exactly Like Virat Kohli!

  Meet Amit Mishra, Who Looks Exactly Like Virat Kohli!
  Story first published: Monday, November 27, 2017, 16:30 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more