லண்டன் ராயல் சமூகத்தையே வியப்பில் ஆழ்த்திய அசத்தல் இந்தியர் - #UntoldStory

Posted By:
Subscribe to Boldsky

ஜகதீஷ் சந்திர போஸ், தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை கண்டறிந்து இந்த உலகிற்கு பெரும் உண்மையை விளக்கிய இந்திய அறிவியலாளர். வானொலி அறிவியலில் முன்னோடியாக திகழ்ந்தார் ஜகதீஷ் சந்திர போஸ். IEEE அதிகாரப் பூர்வமாக அறிவித்திருக்கிறது.

முழுப்பெயர் ஜகதீஷ் சந்திர போஸ் என்ற போதும், இவரை போஸ் என்றால் தான் பலரும் அறிவார்கள். இந்தியா கண்டெடுத்த முத்தான இரண்டு போஸ்களில் இவருக்கும் பெரும் பங்குண்டு.

இவர் 1859ல் நவம்பர் 30ம் நாள் அன்றைய இந்தியாவில் இடம் பெற்றிருந்த டாக்கா (இன்றைய பங்களாதேஷ்) மாவட்டத்தின் மைசென்சிங் என்ற ஊரில் பிறந்தவர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இளம் வயது!

இளம் வயது!

கல்வியில் சிறந்து விளங்கிய போஸ், கொல்கத்தா, கேம்ப்ரிட்ஜ் போன்ற இடங்களில் தனது உயர் கல்விகளை கற்று தேர்ந்தார். ஆரம்பக் காலக்கட்டத்தில் துணை பேராசிரியராக வேலைக்கு சேர்ந்த போஸ், அங்கே பணியாற்றியப்படியே தனது ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். இவரது மனைவி அபலா போஸ் சமூக செவகியாவர்.

தந்தை!

தந்தை!

போஸின் தந்தை பகவான் சந்திர போஸ் இந்தியாவை ஆண்ட ஆரசின் கீழ் உயர் அலுவலராக பணிபுரிந்து வந்தார். ஆயினும், அவருக்கு தேசப்பற்று அதிகமாக இருந்தது. மாணவர்களுக்கு தொழில் முறை கல்வி மிகவும் அவசியம் என கருதிய அவர், பல தொழில்நுட்ப பள்ளிகளை துவங்கினார்.

இதன் காரணத்தால் ஜகதீஸ் சந்திர போஸ்-க்கும் நாட்டப்பற்று அதிகமாக இருந்தது. மேலும், இதன் காரணத்தால் தொழில்நுட்பங்களின் மீது அதிக ஆவலும் கொண்டிருந்தார்.

சிறந்த கல்வி!

சிறந்த கல்வி!

தனது மகனுக்கு சிறந்த கல்வி அளிக்க வேண்டும் என பகவான் போஸ் கருதினார். இதன் மூலமாக தனது மகன் ஜாதி - மதம், ஏற்றத்தாழ்வு, ஏழை - பணக்காரன் என்ற பாகுபாடு பாராமல் வளர்வான் என்பது அவரது கருத்தாக இருந்தது. அது போலவே போஸ் உயர்ந்தவன் - தாழ்ந்தவன், விவசாயி, மீனவன், தொழில் அதிபர் என எந்த பாகுபாடும் காணாமல் வாழ்ந்து வந்தார். இதன் மூலமாக போஸும் சுற்றுப்புறத்தை நன்கு உணர்ந்து வாழ வாய்ப்பு கிடைத்தது.

வேலை!

வேலை!

கொல்கத்தாவில் இயற்பியல் விரிவுரையாளர் வேலை கிடைத்தது. ஆனால், ஆங்கிலயார்களுடன் ஒப்பிடுகையில் மூன்றில் இரண்டு பங்கு தான் ஊதியம் தருவார்கள். இந்தியர்கள் அறிவியலில் பின்தங்கி உள்ளனர் என காரணம் காட்டி இப்படி ஒரு வழக்கத்தை பின்பற்றி வந்தனர் ஆங்கிலேயர்கள்.

ஊதியம்!

ஊதியம்!

ஆனால், போஸ் தனது அறிவியல் திறனை வெளிப்படுத்தி, தனது ஆய்வுகள் மூலம் ஆங்கிலேயர்களை திணறடித்து. முழு ஊதியத்தை அவர்களே தரும்படி செய்தார். மேலும், ஏற்கனவே பணிசெய்த காலத்திற்கும் முழு ஊதியம் அளிக்க சொல்லி ஆணையிட்டது ஆங்கிலேயே நிர்வாகம்.

அறிவியல் கூடம்!

அறிவியல் கூடம்!

ஆங்கிலேயர்களிடம் இருந்து பெற்ற பணத்தை வைத்து ஒரு அறிவியல் ஆய்வுக் கூடத்தை நிறுவினார் போஸ். அங்கே தாவரவியல், இயற்பியல் துறைகள் சார்ந்து பல ஆய்வுகளை மேற்கொண்டார் போஸ். அப்போது தான் வானொலி குறித்து ஆய்வுகள் செய்தார். மார்கோனிக்கு முன்னரே கம்பிகள் இல்லாமல் ஒலிபரப்புவது குறித்த அமைப்பை கண்டுபிடித்தார் போஸ்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக அது உலகால் கவனிக்கப்படாமல் போனது.

ஒளிப்படக் கோட்பாடு!

ஒளிப்படக் கோட்பாடு!

போஸ் மிகக் குறைந்த அலை நீளமுடைய நுண்ணிய அலைகளை உருவாக்கும் ஓர் கருவியை உலகிற்கு முதன் முதலாக அறிமுகப்படுத்திய பெருமையும் பெற்றார்.

மேலும், மூலக்கூறுகளின் பண்புகளில் மேற்கொண்ட ஆய்வின் மூலம் புதியதோர் ஒளிப்படக் கோட்பாட்டை (photographic theory) அவர் உருவாக்கினார். கணிப்பொறி அறிவியலின் துவக்க கால ஆய்வாளர்களில் போஸின் பங்கும் பெருமளவு இருக்கிறது.

புத்தகங்கள்!

புத்தகங்கள்!

போஸ் "Response in the Living and Non-Living" மற்றும் "The Nervous Mechanism of Plants" என்ற இரு நூல்களை எழுதி உலக புகழ் பெற்றார். இந்த இரு நூல்கள் மூலமாக வெப்பம், குளிர், ஒலி, ஒளி போன்றவை மனிதர்கள் மற்றும் இதர உயிரினங்களின் மீது எப்படிப்பட்ட தாக்கங்களை ஏற்படுத்துகிறதோ, அதே போல தாவரங்கள் மீதும் தாக்கங்கள் உண்டாக்குகிறது என்பதைக் கண்டுபிடித்து, தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை உலகறிய செய்தார்.

புரோமைடு!

புரோமைடு!

புரோமைடு எனும் நச்சை எலி மற்றும் தாவரம் மீது செலுத்தி, இரண்டும் எப்படி இறப்பின் விளிம்புக்கு செல்கிறது என்பதை விளக்கு உலக அறிவியல் ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தினார் போஸ். உலக அறிவியல் விஞ்ஞானிகள் இதை கண்டு ஆர்பரித்து, கைத்தட்டி போஸ் அவர்களை பாராட்டினார்கள்.

லண்டன் ராயல் கழகம்!

லண்டன் ராயல் கழகம்!

"புறத்தூண்டுதல்களுக்குத் தாவரங்கள் எவ்வாறு பொறுமையுடன் நடந்து கொள்ளுகின்றன" என்பது குறித்து 1915ல் லண்டன் ராயல் கழகத்தில் உலக ஆராய்ச்சியாளர்கள் முன்னணியில் பேசிப் பாராட்டு வாங்கினார். மேலும், 1920ல் லண்டன் ராயல் கழகத்தில் உயர்நிலை உறுபினராகப் பதவிப் பெற்று இந்தியாவை பெருமைப்படச் செய்தார்.

உண்டு, உறங்கும்!

உண்டு, உறங்கும்!

மனிதர்களைப் போலவே தாவரங்களும், உண்டு செறித்து, உறங்கி எழுந்து, பிறந்து, இறக்கும் தன்மைக் கொண்டுள்ளது. தாவரங்களுக்கும் உணர்வு இருக்கிறது. அவைக்கும் மகிழ்ச்சி, துன்பம் ஆகிய உணர்வுகள் இருக்கிறது என்பதைக் கண்டறிந்துக் கூறினார் போஸ்!

ஐன்ஸ்டீன், தாமஸ் ஆல்வா எடிசன், நியூட்டன் பற்றி அறிந்த நம்மில் பலருக்கு ஜகதீஸ் சந்திர போஸ் பற்றி பெரியளவில் அறியாமல் போனது அவலத்தின் உச்சம்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Jagadesh Chandra Bose, Who Invented Radio Even Before Marconi!

Jagadesh Chandra Bose, Who Invented Radio Even Before Marconi!