கொரிய நாட்டு கடவுள் கன்னியாகுமரியில் பிறந்த தமிழ் பெண்ணா? வரலாறும், மர்மங்களும்!

Posted By:
Subscribe to Boldsky

ஹியோ ஹாங் ஒக் என்பவர் தென் கொரிய நாட்டு ராணி. இவர் காயா நாட்டு மன்னரான சுரோவை திருமணம் செய்துக் கொண்டார். இதில் என்ன ஆச்சரியம் என கேட்கிறீர்களா? இங்கே தான் புதைந்திருக்கிறது பல வரலாற்று மர்மங்கள்.

Is Korean Queen Heo Hwang-ok is a Tamil Woman Sempavazham? A Mystery Behind History!

ஹியோ ஹாங் ஒக் கடல் வழியே காயாவை அடைந்து மன்னர் சுரோவை திருமணம் செய்துக் கொண்டார். ஹியோ ஹாங் ஒக் எவ்வழியே வந்தார்? எப்படி காயாவை அடைந்தார்? அவரது பூர்வீகம் என்ன? எதற்காக சுரோவை மணக்க இவர் கடல் பயணம் மேற்கொண்டார்? என பல கேள்விகள் இங்கே எழுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆயுஹுத்தா!

ஆயுஹுத்தா!

தென் கொரிய வரலாற்றில் ஹியோ ஹாங் ஒக் ஆயுஹுத்தா எனும் இடத்தில் இருந்து வந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை சில அகழ்வாராய்ச்சி ஆய்வளர்கள் அது அயோத்தியா என கூறி, ஹியோ ஹாங் ஒக் அயோத்திய இளவரசி என கூறுகின்றனர்.

சுரிரத்னா (Suriratna)

சுரிரத்னா (Suriratna)

ஹியோ ஹாங் ஒக் அன்றைய அயோத்தியா இளவரசி சுரிரத்னா என சில ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவர் 48 ADல் ஒரு படகில் கடல்வழி பயணம் மேற்கொண்டார் என சிலர் குறிப்பிடுகிறார்கள்.

நினைவிடம்!

நினைவிடம்!

அயோத்தியாவில் இருக்கும் இவரது நினைவிடத்திற்கு ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான கொரியர்கள் வந்து செல்கின்றனர் என கூறப்படுகிறது.

2015ல் இருநாட்டு பேச்சுவார்த்தையில் இவருக்கான பெரிய நினைவிடம் அமைக்கவும் பேச்சுகள் எழுந்தன என கூறப்படுகிறது.

Image Source

மறுப்பு!

மறுப்பு!

ஆனால், வேறுசில ஆய்வாளர்கள் அயோத்தியாவில் தான் கடலே இல்லையே? அவர் எப்படி சென்றிருப்பார் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு காரணம், ஹியோ ஹாங் ஒக் சுரோவை மணக்கும் முன் தான் எப்படி படகில் கடல்வழி பயணம் மேற்கொண்டு வந்தேன் என கூறியதாக தென்கொரிய நாட்டு குறிப்புகளில் கூறப்பட்டுள்ளன.

தமிழ் பெண்!

தமிழ் பெண்!

இது தவறான ஆய்வு ஹியோ ஹாங் ஒக் அயோத்தியாவை சேர்ந்தவர் இல்லை என நிரூபிக்க சில தமிழ் ஆய்வாளர்கள் பெரிய ஆய்வு நடத்தினர்.

அந்த ஆய்வின் முடிவுகளில் தான் ஆயுத்த என தென்கொரியாவில் குறிப்பிடப்படும் இடம், முன்னாளில் ஆயுத்த என அழைக்கப்பட்டு வந்த கன்னியாகுமரி என்றும், அந்த பெண் செம்பவழம் என்பவர் என்றும் தெரிவித்தனர்.

மொழி கலப்பு!

மொழி கலப்பு!

தென் கொரியாவில் கடவுளாக கருதப்படும் ஹியோ ஹாங் ஒக் ஒரு தமிழ் பெண் என இவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதே போல இரு நாடுகளுக்கு மத்தியில் மொழி கலப்பு உள்ளது. பல தமிழ் வார்த்தைகள் தென்கொரிய மொழியில் இருப்பது இதற்கான சான்று என்றும் சிலர் கூறியுள்ளனர்.

தென்கொரியா என்ன சொல்கிறது?

தென்கொரியா என்ன சொல்கிறது?

தென்கொரியாவை சேர்ந்த ஆய்வாளர்கள் சிலர் ஹியோ ஹாங் ஒக் தாய்லாந்தில் இருந்த ஆயுஹுத்தாஅரசை சேந்தவர் தான் ஹியோ ஹாங் ஒக் என்றும்.

இவர் இந்தியாவில் இருந்து தான் வந்தார் என்பதற்கு வரலாற்று சான்று எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளனர்.

முடியாத புதிர்!

முடியாத புதிர்!

தென்கொரிய வரலாற்றில் முக்கியமான இடம் பிடித்துள்ள ஹியோ ஹாங் ஒக் எங்கிருந்து வந்தார் என்பது இன்றுவரை ஒரு புதிராகவே இருந்து வருகிறது.

சுரோவுடன் திருமணம் ஆகும் போது இவரது வயது 16. திருமணம் ஆனபோது தான், நான் எப்படி வந்தேன், எதற்காக வந்தேன் என்ற விபரங்களை கூறியிருக்கிறார் ஹியோ ஹாங் ஒக்.

Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Is Korean Queen Heo Hwang-ok is a Tamil Woman Sempavazham? A Mystery Behind History!

Is Korean Queen Heo Hwang-ok is a Tamil Woman Sempavazham? A Mystery Behind History!
Subscribe Newsletter