எழுத்தாளர் சுஜாதா பற்றி பலரும் அறியாத திகைப்பூட்டும் உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

சென்னையில் பிறந்திருந்த போதிலும், தனது தந்தைக்கு அடிக்கடி வேலை காரணமாக இடமாற்றம் ஏற்பட்டுக் கொண்டிருக்கவே, தனது 7வது வயதில் இருந்து திருச்சியில் பாட்டி வீடுகளில் தங்கி படிக்க ஆரம்பித்தார் ரங்கராஜன். இவர் தனது கல்லூரி படிப்பு முடிக்கும் வரையிலும் அங்கு தான் இருந்தார்.

அப்பா வழி பாட்டி கோதை அம்மாள் என்கிற ருக்மிணி அம்மாள் தான் சுஜாதா அவர்களுக்கு மிகவும் பிடித்த பாட்டி. தனது பிரபலமான 'ஸ்ரீரங்கத்துக் கதைகள்' தொகுப்பை இந்தப் பாட்டிக்குத் தான் அர்ப்பணம் செய்திருந்தார் சுஜாதா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் சுஜாதா 1954-ல் செயின்ட். ஜோசப் கல்லூரியில் பி.எஸ்.சி பிசிக்ஸ் படித்தார். இங்கு இவருடன் சேர்ந்து படித்த நபர் யார் தெரியுமா? மாணவர் ஜனாதிபதி அப்துல் கலாம் ஐயா அவர்கள்.

#2

#2

பிறகு, எலக்ட்ரானிக் என்ஜினியரிங்கை எம்.ஐ.டி-யில் பயின்றார். இதே சமயத்தில் தான் டாக்டர் அப்துல் கலாம் ஐயா ஏரோஸ்பேஸ் என்ஜினியரிங் பயின்றார். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர்கள்.

#3

#3

நாம் அனைவரும் இன்று மின்னணு வாக்கு இயந்திரத்தில் வாக்களித்து கொண்டிருக்கிறோம் என்றால், அதற்கு முழு காரணம் சுஜாதா அவர்கள் தான். இவர் தான் மின்னணு வாக்கு இயந்திரம் தயாரித்த குழுவிற்கு தலைமை வகித்தவர்.

#4

#4

சுஜாதா என்பது இவரது மனைவியின் பெயர். இதை விகடனின் ஆசிரியர் வழங்கிய ஆலோசனையின் பெயரில் மாற்றிக் கொண்டாதாக சிலர் கூறுகின்றனர். இதற்கு காரணம், ஏற்கனவே, அங்கு ரங்கராஜன் என்ற பெயரில் வேறு ஒரு நபர் வேலை செய்துக் கொண்டிருந்தார்.

#5

#5

சுஜாதா என்பது இவரது மனைவியின் பெயர். இதை விகடனின் ஆசிரியர் வழங்கிய ஆலோசனையின் பெயரில் மாற்றிக் கொண்டாதாக சிலர் கூறுகின்றனர். இதற்கு காரணம், ஏற்கனவே, அங்கு ரங்கராஜன் என்ற பெயரில் வேறு ஒரு நபர் வேலை செய்துக் கொண்டிருந்தார்.

#6

#6

கணையாழி எனும் இதழில் சுஜாதா அவர்கள் "கடைசிப் பக்கங்கள்" என்ற பெயரில் ஒரு கட்டுரைத் தொடரை ஸ்ரீரங்கம் எஸ். ஆர் என்ற பெயரிலும் எழுதி வந்தார்.

#7

#7

எ.டி.சி எனப்படும் Air Traffic Control center -ATC -ல் இவர் பணிபுரிந்துள்ளார். மேலும் இங்கு சுஜாதா அவர்கள் அடிப்படை பைலட் பயிற்சியும் பெற்றுள்ளார். தனது ஜே.கே எனும் நாவலில் இந்த அனுபவத்தை வெளிக்காட்டியிருப்பார்.

#8

#8

அறிவியலை ஊடகம் மூலமாக மக்களிடம் எளிதாக எடுத்து சென்றதற்காக, சுஜாதாவை பாராட்டி தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம் இவருக்கு 1993ம் ஆண்டு விருது வழங்கியது.

#9

#9

சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி தமிழக அரசு இவருக்கு "கலைமாமணி" விருதும் வழங்கியுள்ளது.

#10

#10

சுஜாதா அவர்கள், புதினம், குறும் புதினம், சிறுவர் இலக்கியம், சிறுகதை தொகுப்பு, நாடகம், கவிதை தொகுப்பு, சிறு கதைகள், கட்டுரை தொகுப்புகள் என எழுத்தில் பல பணிகள் செய்துள்ளார்.இவரது பல கதைகள் படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. மேலும், இவர் பல திரைப்படங்களில் திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக பணியாற்றியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Interesting Facts About Writer Sujatha: Birthday Special!

Interesting Facts About Writer Sujatha: Birthday Special!
Subscribe Newsletter