5 ஆண்டு கப்பல் பயணத்தில், மனித இன இரகசியங்களை போட்டுடைத்த சார்ல்ஸ்!

Posted By:
Subscribe to Boldsky

சார்லஸ் டார்வின், மனிதன் குரங்கில் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்றவன் என்பதை உலகில் முதன் முறையாக கண்டறிந்து கூறிய இயற்கையியல் அறிஞர்.

தி ஆரிஜின் ஆப் ஸ்பீசிஸ் என்ற பெயரில் இவர் வெளியிட்ட புத்தகத்தில், இவர் கண்டறிந்த புரட்சிகரமான அறிவியல் கொள்கைகள் பற்றியும், படிம வளர்சிக் கொள்கைகள் பற்றியும் விவரித்து கூறியிருந்தார். இந்த நூல் உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

எச்.எம்.எஸ். பீகிள் எனும் கப்பலில் இவர் உலகம் முழுக்க பயணம் மேற்கொண்டு பல உயிரின கண்டுபிடிப்புகள் அறிந்து வியப்பை உண்டாக்கினார். காலபாகசுத் (Galápagos) தீவுகளில் இவர் நடத்திய ஆய்வுகள் மற்றும் வெளியிட்ட அறிக்கைகள் பிரபலமானவை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிறப்பு!

பிறப்பு!

டார்வின் இங்கிலாந்தில் 1809ம் ஆண்டு பிப்ரவரி 12 தேதி பிறந்தவர். இவரது தந்தை ராபர்ட் ஒரு மருத்துவர், இவரது தாத்தாவும் மருத்துவரே. தனது குழந்தை பருவத்திலேயே தாயை இழந்தவர் சார்லஸ் டார்வின். இவர் தனது சிறுவயது முதலே புழு, பூச்சிகள் மீது மிகுதியான ஆர்வம் கொண்டிருந்தார்.

Image Credit: wikipedia

தந்தையின் ஆசை!

தந்தையின் ஆசை!

சார்லஸ் டார்வினின் தந்தை ராபர்ட், தன்னை போலவே தனது மகனும் ஒரு மருத்துவர் ஆகவேண்டும் என விரும்பினார். இதற்காக இவரை எடின்போ பலகலைகழகத்தில் சேர்த்தார். ஆனால், சார்லஸ்'க்கு இயற்கை மற்றும் நிலம் குறித்து படிக்கவே ஆர்வம் இருந்தது. இவற்றில் சிறந்த மாணவராகவும் திகழந்தார் சார்லஸ். இதனால், மருத்துவத்தில் நாட்டத்தை இழந்தார்.

Image Credit: wikipedia

செடி, கொடி மீதான காதல்...

செடி, கொடி மீதான காதல்...

எடின்பர்க் சென்ற பிறகும் கூட, தனது காதலான புழு, பூச்சி, செடிகொடிகள் மீதே தொடந்தது. இவற்றை மிகவும் விரும்பி சேமிக்க ஆரம்பித்தார். தான் மருத்துவம் படித்துக் கொண்டிருந்த போது, அறுவை சிகிச்சையின் போது மயக்க மருந்து இன்றி சிகிச்சை மேற்கொள்ளும் போது, அதை கண்டு மிகவும் மனம் வருந்தினார் சார்ல்ஸ்.

Image Credit: wikipedia

ஜான் ஹென்ஸ்லோ!

ஜான் ஹென்ஸ்லோ!

சார்லஸின் 22வயதில் ஜான் ஹென்ஸ்லோ என்ற தாவரவியல் துறை அறிஞரின் நட்பு கிடைத்தது. பிறகு, கேப்டன் ராபர்ட் உடன் நட்பு கூடியது. இதன் மூலமாக அமெரிக்க கடலோர பகுதிகளில் அராய்ச்சி மேற்கொள்ள எச்.எம்.எஸ். பீகிள் கப்பலில் பயணிக்க கேப்டன் ராபர்டின் நட்பு உதவியது. இரண்டு ஆண்டுகளில் முடியவேண்டிய பயணம், ஐந்தாண்டுகள் நீடித்தது. இது தான் இவரது வாழ்வில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.

Image Credit: wikipedia

குரங்கு - மனித பரிணாமம்!

குரங்கு - மனித பரிணாமம்!

இந்த பயணத்தின் போது தான் சார்ல்ஸ் பரிணாம வளர்ச்சி கொள்கை உருவாக்க வித்தாக அமைந்தது. இந்த ஐந்தாண்டில் கப்பல் உலகையே ஒரு வலம் வந்தது. பல சிக்கல், பிரச்சனைகளை தாண்டி, அந்த கடல் பயணத்தை சார்லஸ் முடித்தார்.

இந்த பயணத்தின் போது பல புதிய உயிரினங்கள், எலும்புகள், ஊர்வன, பறப்பன, நடப்பன என பல ஒற்றுமை, வேற்றுமைகளை அறிந்தார் சார்ல்ஸ். இது முன்னோர்களின் வழித்தோன்றல்கள் பற்றி ஆராய இவருக்கு பெரும் உதவியாக அமைந்தது.

அப்போது தான் உயிரினங்கள் மத்தியில் ஏற்படும் மாற்றங்கள் எப்படி உருவாகிறது என்ற கேள்வி சார்ல்ஸ் டார்வினிடம் பிறந்தது.

Image Credit: wikipedia

ஆய்வுகள்!

ஆய்வுகள்!

இப்போது நாம் காண முடியாத பல அழிந்த உயிரினங்கள் மற்றும் பரிணாம வளர்ச்சி பெற்று இப்போது உலகில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் உயிரினங்கள், அவற்றுக்கு மத்தியில் இருக்கும் எலும்புகள் சார்ந்த ஒற்றுமைகள் குறித்து ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டார் சார்ல்ஸ். தான் சேகரித்த எலும்புகள் கொண்டிருந்த விலங்குகள் சில முற்றிலும் அழிந்து போயிருக்கலாம் என அப்போது தான் யூகித்தார் சார்ல்ஸ்.

Image Credit: wikipedia

முடிவு!

முடிவு!

காலபாகசுத் (Galápagos) தீவுகளில் மேற்கொண்ட ஆய்வுக்கு பிறகு தான் பல தாவர, பறவை மற்றும் விலங்குகள் குறித்த பரிணாம வளர்ச்சி பற்றி அறிந்து, தனது ஆய்வின் முடிவுக்கு வந்தார் சார்ல்ஸ் டார்வின். அந்த ஐந்தாண்டு கப்பல் பயணத்தை முடித்து திரும்பிய பிறகு தனது ஆய்வு கட்டுரியை தி வாயேஜ் ஆப் தி பீகிள் என்ற புத்தகமாக வெளியிட்டார் சார்ல்ஸ்.

Image Credit: wikipedia

இல்வாழ்க்கை!

இல்வாழ்க்கை!

சார்ல்ஸ் டார்வின் எம்மா வெட்ஜ்வுட் என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார். இவர் சார்லஸின் உறவுக்கார பெண் என்பது குறிப்பிடத்தக்கது. சார்ல்ஸ் டார்வினுக்கு ஏழு குழந்தைகள். திருமணத்திற்கு பிறகும் கூட, சார்லஸின் காதல் இயற்கை மீது தான் அளவு கடந்து இருந்தது.

தனது நண்பருடன் சேர்ந்து அமெரிக்க கடலோர பகுதிகளில் ஆராய்ச்சி நடத்து அதன் மூலம் சேகரித்த ஆதாரங்களை புத்தகங்களாக வெளியிட்டார்.

Image Credit: wikipedia

பரிணாம வளர்ச்சி கொள்கை!

பரிணாம வளர்ச்சி கொள்கை!

தான் திரட்டிய மொத்த ஆதாரங்கள் மற்றும் தகவல்களை கொண்டு லண்டனில் இருக்கும் லின்னின் கழகத்தில் வெளியிட்டு, இதுவே பின்னாளில் பரிணாம வளர்ச்சிக் கொள்கையாக மாறியது.

மேலும், 1859ம் ஆண்டு "The Origin of Species by Natural Selection" என்ற பெயரில் உலகையே வியப்பில் ஆழ்த்தும் படி புத்தகம் ஒன்று வெளியிட்டார். பல உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி குறித்து அவர் குறிப்பிட்டிருந்தார். அப்போது இந்த பரிணாம வளர்ச்சி வெறும் செடிகளுக்கும், விலங்குகளுக்கும் மட்டுமே பொருந்தும் என கருதியது உலகம்.

அதில் சார்ல்ஸ் மனித பரிணாம வளர்ச்சி பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

Image Credit: wikipedia

டாக்டர் பட்டம்!

டாக்டர் பட்டம்!

இவரது இந்த பரிணாம வளர்ச்சி கொள்கைகள் மற்றும் புத்தகங்கள், இவர் உயிருடன் இருக்கும் போதே உலகம் முழுவதும் பரவியது. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் சார்ல்ஸ் டார்வினுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.

இவர் ஏப்ரில் 19, 1882 அன்று உயிரிழந்தார். இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அப்பேயில் சார்லஸின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Image Credit: wikipedia

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Facts To Know About Charles Darwin

Facts To Know About Charles Darwin
Story first published: Thursday, October 26, 2017, 10:06 [IST]