அமெரிக்கா பொத்திப் பொத்தி பாதுகாக்கும் அளவிற்கு அந்த தீவில் என்ன தான் இருக்கிறது?

Posted By:
Subscribe to Boldsky

பண்டைய காலக்கட்டத்தில் பல சமூகங்கள் வாழ்ந்து வந்தன. அவற்றில் சிலவன குறிப்பிடும் வண்ணம் புகழ்பெற்று திகழ்ந்தனர். அதில் சமோரோ சமூகத்தினரும் சேருவர்.

இந்த சமூகத்தில் நான்கு பிரிவுகள் இருந்தன. சமொரி - தலைவர்கள்; மட்டுவா - மேல்குடி மக்கள்; அச்சோட் - மத்திய வகுப்பு மக்கள்; மனாச்சங்கு - கீழ்பிரிவு மக்கள் .

Facts About America's Most Precious Island Guam!

Image Credits: BBC, Tamil Oneindia

இதில் மட்டுவா எனும் மேல்குடியினர் மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தவர்கள். இவர்கள் கரையோர பகுதிகளில் வாழ்ந்து வந்தனர். இவர்களை காட்டிலும் கீழ்ப் பிரிவினர் குவாமின் உட்பகுதியில் வாழ்ந்து வந்தனர்.

இவர்கள் மருத்துவத்தில் மேம்பட்டு காணப்பட்டதாக அறியப்படுகிறது. இவர்களை மக்கானா என அழைத்து வந்துள்ளனர். இவர்கள் குவாம் சமூகத்தை தாய்வழியாக கொண்டவர்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வல்லரசு!

வல்லரசு!

உலகில் பெரும் வலிமை கொண்ட நாடாக திகழும் அமெரிக்க வல்லரசு இவ்வளவு ஆதிக்கம் செலுத்தி காணப்படுவதற்கு இந்த குவாம் தீவும் ஒரு பெரும் காரணம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

பசுபிக் சமுத்திரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் இடம் குவாம் தான். இதை மெக்கல்லன் தனது உலகளாவிய சுற்று பயணத்தின் போது கண்டுபிடித்தார்.

அமெரிக்காவில் சூரிய உதயத்தை காணும் முதல் இடம் குவாம் எனப்படுகிறது. இது அமெரிக்காவின் மேற்கு நிலபரப்பில் இருந்து 11 ஆயிரம் கி.மீ தொலைவில் இருக்கிறது.

ஸ்பெயின்!

ஸ்பெயின்!

ஸ்பெயினின் ஆதிக்கத்தில் இருந்த இந்த தீவை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. இரண்டாம் உலக போரின் போது ஜப்பானின் வசத்தில் இது கொஞ்ச காலம் இருந்தது. 48 கிலோமீட்டர் நீளம் மற்றும் 13 கிலோ மீட்டார் அகலம் பரப்பளவு கொண்டிருக்கும் இந்த தீவு பல பண்டுபாடுகளின் கலவையாக காணப்படுகிறது.

விசா தேவை இல்லை!

விசா தேவை இல்லை!

அமெரிக்கர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த தீவிற்கு செல்ல அமெரிக்கர்களுக்கு விசா அவசியம் இல்லை. மேலும், அமெரிக்காவின் வசம் இருக்கும் இந்த தீவில் அமெரிக்க டாலர்கள் தான் பண மதிப்பாக இருந்துவருகிறது. இங்கிருக்கும் பவள பாறைகள் சுற்றுலா பயணிகளை கவரும் முக்கிய காரணியாக இருக்கிறது.

கடல்வாழ் உயிரினம்!

கடல்வாழ் உயிரினம்!

மலை, கடல், காடுகள், பவள பாறைகள் போன்ற இயற்கை அழகுகளும் கடல்வாழ் உயிரினங்களும் தான் குவாம் தீவின் பொருளாதார ஆதாரம். எனவே, இவை இரண்டையும் பாதுகாப்பதில் இவர்கள் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.

முப்படை!

முப்படை!

அமெரிக்காவின் முப்படைகளின் தளங்கள் மற்றும் பயிற்சி இடங்கள் இங்கே அமைந்திருக்கின்றன. குவாம் தீவின் பெரும்பகுதி அமெரிக்க படைகளால் நிரம்பி இருக்கிறது.

பாதுகாப்பு வளையமும் அமைக்கப்பட்டுள்ளது. தனது முப்படையை அங்கே வைத்துக் கொள்ள வருடா வருடம் பெரும் தொகையை வாடகையாக வழங்கி வருகிறதாம் அமெரிக்கா.

வட கொரியா!

வட கொரியா!

வட கொரியா ஏவுகணை தாக்குதல் நடத்த வட்டத்தில் இருக்கும் ஒரே அமெரிக்க இடமும் இந்த குவாம் தீவுதான். இதனால், வட கொரியா, அமெரிக்கா மத்தியில் போர் மூண்டால் முதலில் பாதிப்பிற்குள்ளாகும் இடமாக கூட குவாம் தீவு அமையலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Facts About America's Most Precious Island Guam!

Facts About America's Most Precious Island Guam!
Subscribe Newsletter