அபாயகரமான இடங்களில் வித்தை காட்டும் இளம்பெண் - புகைப்படத் தொகுப்பு

Posted By:
Subscribe to Boldsky

ஒருவர் அதிகம் செல்ஃபீ எடுத்தால், "ஏண்டா எப்ப பார்த்தாலும் செல்ஃபீ எடுத்துக்கிட்டே இருக்க..." என திட்டாத நண்பர்கள், பெற்றோரை நாம் காணாமல் இருந்ததில்லை. நிபுணர்கள் புகை, மது, பார்ன் போல செல்ஃபீ எடுப்பதையும் அடிக்ஷன் பட்டியலில் சேர்த்துவிட்டார்கள்.

பல இளைஞர்கள் ரிஸ்க்கான முறையில் செல்ஃபீ எடுக்க முயன்று தங்கள் உயிரை இழந்துள்ளனர். இது போன்ற சம்பவங்கள் அமெரிக்காவில் இருந்து இந்தியா வரை உலகின் பல நாடுகளில் நடந்துள்ளது, நடந்து வருகிறது.

ஆனால், அங்கேலா நிகோலாவ் எனும் ரஷ்ய பெண்ணும், அவரது காதலன் இவானும் சேர்ந்து உலகின் உயரமான அபாயகரமான இடங்களில் நின்று செல்ஃபீ எடுத்து அசத்தி வருகிறார்கள்.

சில படங்களை பார்க்கும் போது நமக்கே தலைசுற்றுகிறது. அவர்கள் எப்படி அச்சம் இன்றி செல்ஃபீ எடுக்கிறார்கள் என்பது தான் ஆச்சரியத்தை வரவழைக்கிறது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

அங்கேலா நிகோலாவ்

செல்ஃபி என்பது மக்கள் மத்தியில் குடி, புகையை காட்டிலும் பெரிய அடிக்ஷனாக மாறியுள்ளது. இந்த அடிக்ஷனில் சிக்கியிருப்பவர் தான் அங்கேலா நிகோலாவ். இவர் ஒரு ரஷ்ய இளம்பெண்.

வேற லெவல்!

செல்ஃபி அடிக்ஷன் என்றவுடன் சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம். படங்களை கண்டவுடன் நீங்களே இது எந்த அளவிற்கு அபாயகரமானது என ஒரு கணக்கிற்கு வந்திருக்கலாம். உலகின் உயரமான இடங்களின் உச்சியில் நின்று வினோதமான போஸ்களில் செல்ஃபீ எடுக்கும் அடிக்ஷன் கொண்டிருக்கிறார் அங்கேலா நிகோலாவ்.

கிரேஸி கண்மணி!

இவரை நெட்டிசன்கள் கிரேஸி செல்ஃபீ கேர்ள் என அழைக்கிறார்கள். அங்கேலா நிகோலாவ் அச்சம் என்பது துளியும் இல்லை. அபாயகரமான இடங்களில் ஒற்றை காலில் நின்றும், நடனம் ஆடியும், தொங்கியும் கூட இவர் செல்ஃபீ எடுத்துள்ளார்.

அட! போயா சிப்ஸ்!!

உலகின் இந்த இடம் மிகவும் அபாயகரமானது, கரணம் தப்பினால் மரணம் என்றும் யாரேனும் ஒரு இடத்தை குறிப்பிட்டு கூறினால், அங்கே உடனே ஓடி சென்று அசால்ட்டாக ஒரு செல்ஃபீ எடுத்து வந்து தனது இன்ஸ்டா முகவரியில் பதிவேற்றிவிடுகிறார் அங்கேலா நிகோலாவ்.

இளம்பெண்!

அங்கேலா நிகோலாவின் வயது 23 தான். தில்லான பெண்மணி மட்டுமல்ல, அழகான பெண்ணும் கூட. அதனால் தான் இவரை பல ஆயிரக்கணக்கான பேர் இன்ஸ்டாவில் பின்தொடர்ந்து வருகிறார்கள். இவரது ஒவ்வொரு படமும், சுவாரஸ்யமாகவும், ஆச்சரியமாகவும், அச்சுறுத்தும் வகையிலும் இருக்கிறது.

ஜோடியாக!

அங்கேலா நிகோலாவ் தனியாகவும் செல்கிறார், தனது துணையுடனும் செல்கிறார். இவர்கள் இருவருமே செல்ஃபீ அடிக்ஷன் கொண்டவர்கள். அதுவும் இப்படி அந்தரத்தில் தொங்கி செல்ஃபீ எடுப்பது என்றால் இவர்களுக்கு கொள்ளை பிரியம். சிலர் இதை கிறுக்குத்தனம் என்கிறார்கள், இவர்கள் வாழ்க்கையை அட்வஞ்சர் டிராவலாக பார்க்கிறோம் என்கிறார்கள்.

கிரியேட்டிவ்!

வெறுமென தைரியம் அழகு மட்டுமில்லை, அங்கேலா நிகோலாவிடம் கிரியேட்டிவ் தினமும் நன்கு உள்ளது. தனது ஒவ்வொரு படத்திற்கும் செம்மையான ஸ்டேட்ஸ் பதிவிட்டு தெறிக்கவிடுகிறார்.

வெறும் கால்!

அவ்வளவு உயரமான இடங்களில் வெறும் காலுடன் நின்று படம் எடுத்து நம்மை விழிபிதுங்க செய்கிறார் அங்கேலா நிகோலாவ். வழுக்காமல் இருக்க ஷூ கூட இவர் அணிவதில்லை. பெரும்பாலான புகைப்படங்களில் வெறும் காலுடன் தான் காட்சியளிக்கிறார் அங்கேலா நிகோலாவ்.

காதலன் க்ளிக்ஸ்!

செல்ஃபீ படங்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் அங்கேலா நிகோலாவின் காதலன் க்ளிக்கிய படங்களின் தொகுப்பும் இருக்கிறது. அந்த படங்கள் எல்லாம் மேலும், அபாயமான இடங்களாக இருக்கின்றன. உயரமான இடம் என்பதை தாண்டி, உச்சி பகுதியில் நுனியில் நின்றெல்லாம் படங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த ஜோடி.

அடுத்த லெவல்...

இப்படி அபாயகரமான இடங்களில் செல்ஃபீ எடுத்து உயிரிழந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால், அங்கேலா நிகோலாவ் மற்றும் இவான் பீர்க்ஸ் ஜோடி கொஞ்சம் காதலும், கலையும் சேர்த்து செல்ஃபீ எடுப்பதை அடுத்த லெவலுக்கு எடுத்து சென்றுள்ளனர்.

பாதுகாப்பு வாசகம் ப்ளீஸ்...

இவர்களது படத்துடன் "ப்ளீஸ் டோன்ட் ட்ரை" என்பது போல பாதுகாப்பு வாசகம் சேர்த்துக் கொண்டால் சிறப்பு. ஏனெனில், இவர்களை தவிர வேறு யாரும் இது போல செல்ஃபீ எடுக்க முடியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Brave Russian Girl Who Takes Pics from World's Highest Points!

Brave Russian Girl Who Takes Pics from World's Highest Points!
Subscribe Newsletter