அனுஷ்காவை புறம்தள்ளி, பிரபாஸ்-க்கு மணப்பெண் பார்த்த ராணா - பாகுவை மணக்க போவது யார்?

Posted By:
Subscribe to Boldsky

பாகுபலி ஸ்டார் என்று தான் பிரபாஸ்-ஐ இப்போது அனைவரும் அழைக்கின்றனர். படத்திற்காக திருமணத்தை ஒத்திவைத்த இவருக்கு மணப்பெண் பார்க்கும் படலம் ஏகபோகமாக நடந்து வருகிறது.

அப்போது சுயம்வரம் என்ற பெயரில் எப்படி இளவரசர்கள் ஒரு இளவரசியை மணக்க வரிசைக்கட்டி நின்றனரோ, அப்படி தான், இன்று இளவரசர் மகேந்திர பாகுவை திருமணம் செய்துக் கொள்ள ஒரு பெரிய பட்டாளமே காத்திருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

ராணா!

2016-ல் முதன் முறையாக பல்லாலதேவன் ராணா துவங்கி வைத்த ஆட்டம் இது. தனது ட்விட்டர் அக்கவுண்டில் பாகுபலிக்கு மணப்பெண் தேவை என ஒரு விளம்பரத்தை பதிவு செய்திருந்தார்.

அதில் விளையாட்டாக நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரிகள் உட்பட கொடுத்து கலாய்த்திருந்தார்.

6000 யுவராணிகள்!

6000 யுவராணிகள்!

மேலும், அடுத்தக்கட்டமாக இண்டர்நெட்டில் டிரென்ட் ஆன பாகுபலி மணப்பெண் செய்தி, 6000 பேர் நிராகரிப்பு சம்பவம். ஆமாம், பாகுபலி ஒன்றாம் பாகம் நடிக்க துவங்கியதிலிருந்து, இரண்டாம் பாகம் முடிவடைவதற்குள் ஏறத்தாழ மூன்றரை ஆண்டுகளில் 6000 பேர் பாகுவை திருமணம் செய்ய அணுகியுள்ளனர்.

மருத்துவ மாணவி!

மருத்துவ மாணவி!

இதற்கு இடையே மருத்துவம் படித்த மாணவி ஒருவரை தான் பாகுபலி வீட்டார் தேர்வு செய்துள்ளனர். கூடிய விரைவில் இருவருக்கும் டும்டும்டும் நடக்கும் என கிசுகிசு... பாகுவை பலிவாங்கிய புரளி!

அனுஷ்கா!

அனுஷ்கா!

அதுக்கும் மேல லெவலில், ரசிகர்களின் ஆசையை தூண்டியது இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டின் போது வெளியான அனுஷ்கா, பிரபாஸ் இருவரின் படங்கள். பாகுபலியை தேவசேனா ஆசைப் போங்க பார்க்கும் அந்த பார்வை வேற லெவல் காதலாக தெரிந்தது.

நல்ல ஜோடி தானே!

நல்ல ஜோடி தானே!

மிர்ச்சி, பாகுபலி பாகம் ஒன்று, இரண்டு என இந்த கைக்கோர்த்த போதெல்லாம் வெற்றிக்கனியை தான் தட்டிப் பறித்துள்ளனர். இதே ஜோடியை அடுத்த சாஹோவிலும் சேர்க்க சிலர் யோசித்து வருகிறார்கள். இது இல்லறத்திலும் நடந்தால் நல்லது தானே.

தேவசேனா வாக்கு!

தேவசேனா வாக்கு!

எதுவாக இருந்தாலும், மணப்பெண்ணை கேட்டு தான் முடிவு செய்ய வேண்டும் என்பது தேவசேனா வாக்கு. எனவே, அனுஷ்கா - பிரபாஸ் இருவரும் சேர்ந்து முடிவு செய்துக் கொள்ளட்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Bhallaladeva Posted Matrimonial Ad for Mahendra baahubali, a Hilarious Tweet - Flashback!

Bhallaladeva Posted Matrimonial Ad for Mahendra baahubali, a Hilarious Tweet - Flashback!
Subscribe Newsletter