அட்லாண்டிஸ்! அழிந்து போனதாக கருதப்படும் உலகின் பிரம்மாண்ட நகரின் அறியப்படாத இரகசியங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

உலகில் அழிந்து போனதாக கருதப்படும் பண்டையக் காலத்து நகரங்கள் என பலவன அறியப்படுகின்றன. ஆனால், இலக்கியங்களில், கதைகளில் கூறப்பட்டுள்ள சில பிரம்மாண்ட நகரங்கள் உண்மையிலேயே உலகில் இருந்தனவா? என்பது இன்றளவும் பெரிய விவாத பொருளாகவே இருந்து வருகிறது.

அந்த வகையில் துவாரகாவில் இருந்து அட்லாண்டிஸ் வரை கற்பனையா? உண்மையா? என்ற இடங்கள் பலவன இருக்கின்றன. இந்த பட்டியலில் அட்லாண்டிஸ் நகரம் முதல் இடத்தை பிடிக்கிறது. வெறும் கற்பனை நகர் எனவும், இல்லையில்லை, அதுவொரு பெரும் ஆளுமை கொண்டிருந்த அழகிய தீவு எனவும் பல தியரிகள் கூறப்பட்டுள்ளன.

அவற்றில் சில...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மினோவர்கள்!

மினோவர்கள்!

அட்லாண்டிஸ் பற்றி தியரிகளில் கூறப்பட்டிருக்கும் தகவல்களை காணும் போது, கிரேக்க தீவுகளில் பல ஆயிர வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்து வந்த மினோவர்களின் கதையை பிரதிபலிப்பது போல இருக்கிறது.

அதீத சக்தி, ஆளுமை கொண்ட அந்த மினோவர்கள் இனம் மர்மமான முறையில் மறைந்து போயுள்ளது. சில வரலாற்று கூற்றுகளில், சுனாமி மற்றும் பூகம்பத்தின் தாக்கத்தில் மினோவர்கள் இனம் அழிந்திருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

இதே போல அடுத்தடுத்து வந்த அழிவுகளில் அட்லாண்டிஸ் கடலில் மூழ்கி அழிந்திருக்க வாய்ப்புகள் இருக்கிறது எனவும் கூறப்படுகிறது.

வைகிங் பெர்கன் தீவு!

வைகிங் பெர்கன் தீவு!

ஸ்காட்லாந்து மற்றும் நார்வே நடுவே இருந்ததாக அனுமானம் செய்யப்பட்டிருக்கும் வைகிங் பெர்கன் தீவு பகுதியில் தான் அட்லாண்டிஸ் இருந்திருக்க வேண்டும், கடல் மட்டம் உயரம் அதிகரித்து இந்த நகரம் மூழ்கியிருக்கலாம் என சில தியரிகளில் கூறப்பட்டுள்ளன.

கருங்கடல் வெள்ளம்!

கருங்கடல் வெள்ளம்!

சில தியரிகள் அட்லாண்டிஸ் வெறும் கற்பனை நகரம் தான். உண்மையாக நடந்த சில நிகழ்வுகளை கொண்டு அதன் பால் தழுவி இப்படி ஒரு நகரம் கற்பனையாக உருவாக்கப்பட்டுள்ளது என கூறுகிறார்கள்.

5600 கி.மு.-ல் கருங்கடலில் ஏற்பட்ட வெள்ளத்தில் பெரும்பாலான கடற்கரை மற்றும் மக்கள் வாழ்விடங்களை அழித்துவிட்டது. இந்நிகழ்வை தழுவி அட்லாண்டிஸ் என்ற கற்பனை நகரம் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என கூறுகிறார்கள்.

இஸ்ரேல் (அ) கானான்!

இஸ்ரேல் (அ) கானான்!

அட்லாண்டிஸ் நகரின் தியரிகளில் ஒன்றானது இது. அதாவது, அட்லாண்டிஸ் என்ற நகரம் தீவு அல்ல. அது பழங்குடி மக்கள் கிழக்கு மத்திய தரைக்கடல் கடற்கரை பகுதியில் வாழ்ந்து வந்த இடம் என ஒருசில வரலாற்று கூற்றுகளில் கூறப்பட்டுள்ளன.

தென் அமெரிக்கா!

தென் அமெரிக்கா!

அட்லாண்டிஸ் இப்படி தான் இருந்திருக்கும் என கூறப்படும் அடையாளங்கள் பல தென் அமெரிக்காவில் இருக்கும் ஆண்டிஸ்ஸின் அல்லிப்ரோனோ பகுதியோடு ஒத்துப்போகிறது. ஆகையால், இந்த கூற்றையும் அட்லாண்டிஸ் உண்மையாக இருந்திருக்கலாம் என்பதற்கான ஒரு ஆதாரமாக சேர்த்துள்ளனர்.

அசோர்ஸ்!

அசோர்ஸ்!

நீருக்கடியில் இருக்கும் பெரிய பீடபூமி அசோர்ஸ். அட்லாண்டிஸ் நகரம் இருந்திருக்கலாம் என கருதப்படும் இடங்களில் இதுவும் இடம்பெற்றுள்ளது. பலரும் இந்த இடம் தான் அட்லாண்டிஸ் நகரின் மலை பகுதியாக இருந்திருக்கும் என நம்புகிறார்கள்.

அயர்லாந்து!

அயர்லாந்து!

அட்லாண்டிஸ் என்ற வரலாற்று கற்பனை நகரம் ஒரு தீவு என தான் பெரும்பாலானோர் நம்புகிறார்கள். ஆகையால் உலகின் பல தீவுகளை, அங்கு தான் அட்லாண்டிஸ் இருந்தது என பலரும் தங்கள் தியரிகளில் கூறியுள்ளனர்.

இதில் இருந்து அயர்லாந்தும் தப்பவில்லை. ஆம்! கற்காலத்தில் வாழ்ந்த மனித இனம் இருந்த போது அட்லாண்டிஸ் நகரம் இருந்ததாக கருதப்படுவதால், இங்கே வசித்து வந்திருக்கலாம் என சிலரது தியரிகளில் கூறப்பட்டுள்ளது.

சுண்டாலாந்து!

சுண்டாலாந்து!

இப்போது நடப்பில் இல்லாத, ஒதுக்கப்பட்ட தியரிகளில் ஒன்று இது. சுண்டாலாந்து எனும் இடம் அடிப்படையில் இந்தோனேசியாவாக இருந்தது. கடல் மட்டத்தின் உயரம் குறைவாக இருந்த போது, முதலில் பெரும் நிலபரப்பாக இருந்தது.

பிறகு, கடல் மட்டம் உயர்ந்த பிறகு அந்த நிலபரப்பு சுருங்கிவிட்டது. இந்த இடத்தில் அட்லாண்டிஸ் இருந்திருக்கலாம் என்றும் கருதுகிறார்கள்.

அண்டலூசியா!

அண்டலூசியா!

நேஷனல் ஜியாகிரபிக்கை சேர்ந்த ஒரு குழு, தாங்கள் அட்லாண்டிஸ் இருந்ததற்கான ஆதாரத்தை தென்மேற்கு அண்டலூசியாவில் கண்டுபிடித்துவிட்டோம் என கூறினர். ஆனால், இது பல அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் ஒரு பெரிய விவாத பொருளாக மாறிப்போனது.

சர்டினியா!

சர்டினியா!

சர்டினியா என்பது ஒரு இத்தாலிய தீவு. இந்த இடத்திலும் அட்லாண்டிஸ் சாம்ராஜ்ஜியம் இருந்திருக்கலாம் என சில அட்லாண்டிஸ் வரலாற்று கூற்றுகளில் கூறப்பட்டுள்ளன.

இத்துடன் அட்லாண்டிஸ் நகர் பற்றிய தியரிகள் முடிந்துவிடவில்லை. இன்றும் பலர் அட்லாண்டிஸ் நகர் பற்றிய ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

உலகின் விடை கிடைக்காத மர்மங்களில் இதுவும் ஒன்று!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Astonishing Facts About Historical Lost City Atlantis!

Astonishing Facts About Historical Lost City Atlantis!