For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அகோரிகள் பற்றிய திகைப்பூட்டும் உண்மைகளும், அமானுட சக்திகளும்!

காசி கங்கை ஆறு என்றவுடன் புனித நீராடுதல் என்பதை தாண்டி அனைவரின் மனதிலும் எழும் முதல் விஷயம் அகோரிகள்.

By Staff
|

காசி கங்கை ஆறு என்றவுடன் புனித நீராடுதல் என்பதை தாண்டி அனைவரின் மனதிலும் எழும் முதல் விஷயம் அகோரிகள்.

சிவனை தொழுது வரும் பிணங்களை உண்பது, கஞ்சா இழுப்பது, விபூதி பூசிய நிர்வாணமாக உடலுடன் அலைவது, மூர்க்கத்தனமானவர்கள், கடினமானவர்கள், கடவுளுக்கு இணையானவர்கள் என பலவாறு காணப்படுகிறார்கள்.

இவர்களிடம் இருக்கும் இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட அமானுட சக்தி என்ன? இவர் ஏன் இப்படி இருக்கிறார்கள்? என பலர் மத்தியிலும் பல சந்தேகங்கள், கேள்விகள் எழும். இதோ! அகோரிகள் பற்றிய சில திகைப்பூட்டும் உண்மைகள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிணங்களுடன்!

பிணங்களுடன்!

உடலுறவும் கடவுளை அடையும் ஒரு வழி என அகோர்கள் கருதுகிறார்கள். இவர் "Necrophilia" என குறிப்பிடப்படும் பிணங்களுடன் உறவில் ஈடுபடும் செயல்களில் ஈடுபடுவார்கள் என கூறப்படுகிறது.

மனித உடல் உண்பது!

மனித உடல் உண்பது!

அகோரிகள் தங்களது வினோத உணவு பழக்கத்திற்கு பெயர்போனவர்கள். இவர்கள் இறந்த மனித உடல்களை உண்பார்கள். இவர்கள் பிணங்களை அப்படியேவும், தீமூட்டிய பிறகும் உண்பார்கள் என கூறப்படுகிறது. பிணங்களை உண்பது தங்களை சிவனுக்கு அருகே தங்களை அழைத்து செல்லும் என கருதுகிறார்கள்.

தியானம்!

தியானம்!

அகோரிகள் குறிப்பிட்ட அளவு தான் இறந்த பிணங்கள் உண்பார்கள். உண்ட பிறகு அதன் முன்னே அமர்ந்து தியானம் செய்வார்கள். தாங்கள் கடவுளுக்கு அருகே செல்லும் நிலை என அறிந்த பிறகு தியானம் செய்வார்கள் என கூறப்படுகிறது.

ஆன்மீக சக்திகளுடன் பேசும் சக்தி அகோரிகளுக்கு இருக்கிறது என்றும், அவர்கள் மரணத்திற்கு பிறகான விஷயகளுக்கான பதில்களை அவர்கள் ஆன்மீக சக்திகளிடம் இருந்து கேட்டு பெறுவர் என்றும் கூறப்படுகிறது.

ஆவிகளுடன் பேசுதல்!

ஆவிகளுடன் பேசுதல்!

அகோரிகள் சிவன் மற்றும் காளியை தொழுபவர்கள். இதற்காக பல சடங்குகளில் ஈடுபடுவர். இதற்காக இவர்கள் பிளாக் மேஜிக் எனப்படும் தந்திர வேலைகளிலும் ஈடுபடுவார்கள். இதனால் அவர்களுக்கு சக்தி கிடைக்கும் என கருதுகின்றனர். ஆனால், இந்த தந்திரங்களை யாரும் புண்பட இவர்கள் பயன்படுத்துவது இல்லை. இதன் மூலமாக ஒருவர் உடலில் இருப்பவை பற்றி இவர்கள் அறிகிறார்கள்.

இதன் மூலம் இவர்கள் இறந்த ஆவிகளுடன் கூட பேசுவார்கள் என கூறப்படுகிறது. இதற்காகவே இவர்கள் உடல் முழுக்க சாம்பல் பூசிக் கொள்வதும் உண்டு.

தந்திரங்கள்!

தந்திரங்கள்!

அகோரிகள் சில விசித்திரமான சடங்களிலும் தங்களை உட்படுத்திக் கொள்வதுண்டு. இவை மற்றவர்களால் ஈடுபட முடியாத அளவிற்கு கடினமானவையாக இருக்கும். மாய, மந்திரங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் அகோரிகள்.

தங்களை சுற்றி நடக்கும் அனைத்திற்கும் சிவன் தான் காரணம், கடமைப்பட்டவர் என அகோரிகள் எண்ணுகின்றனர். எல்லா நிலைகளையும் கட்டுப்படுத்தி இவர்கள் இருக்கிறார்கள்.

சாம்பல்!

சாம்பல்!

அகோரிகள் உடை என எதையும் உடுத்துவதில்லை. அவர்கள் உடல் முழுக்க சாம்பல் மற்றும் பூசிக் கொள்கிறார்கள். அவர்கள் உடலில் சுற்றியிருக்கும் உடைகளும் கூட பிணத்துடன் விட்டு செல்லப்பட்ட உடைகளாக தான் இருக்கும். அவர்கள் இறந்தவர்கள் சாம்பல் பூசிக் கொள்வது இறந்தவர்களுடன் பேச உதவும் என்றும் இப்படி செய்கிறார்கள்.

ஆயில்!

ஆயில்!

அகோரிகள் இறந்தவர்களின் உடலை பிழிந்து அதில் இருந்து எண்ணெய் எடுப்பார்கள். இதை மருந்தாக பயன்படுத்துகிறார்கள். பிணங்களை நெருப்பில் தீமூட்டி, அதிலிருந்து மருந்து செய்கிறார்கள்.

இதை யாரும் பரிசோதனை செய்து பார்த்தது இல்லை. அதே போல மருத்துவர்களும் அகோரிகள் நோய்வாய்ப்பட்டு பார்த்ததே இல்லை என்றும் கூறுகின்றனர்.

மண்டை ஓடு!

மண்டை ஓடு!

அகோரிகள் தங்களுக்கான ஒரு மண்டை ஓட்டை எடுத்து வைத்துக் கொள்கிறார்கள். இது தான் ஒரு அகோரியின் முதல் அடையாளம். அதை தான் அவர்கள் பாத்திரமாக பயன்படுத்துகிறார்கள். இதன் மூலமாகவே பருகுவது, பூஜைகள் செய்வது, ஆவிகளுடன் பேசுவது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள்.

மக்களுடன் வாழ்வதில்லை ஏன்?

மக்களுடன் வாழ்வதில்லை ஏன்?

அகோரிகள் எப்போதும் மக்கள் வாழும் இடத்தில் வாழ மாட்டார்கள். காடுகள், பாலைவனம், குகைகள், இமாலய மலை போன்ற இடங்களில் தான் வாழ்கின்றனர். மக்கள் வாழ கஷ்டமாக கருதும் இடங்களில் இவர்கள் மிகவும் எளிதாக வாழ்கிறார்கள்.

கஞ்சா!

கஞ்சா!

கடவுள் சிவன் நிலை அடைய கஞ்சா பிடிக்கிறார்கள் அகோரிகள். இதன் பிறகே இவர்கள் மந்திரங்கள் கூறி தியானத்தில் ஈடுபடுகிறார்கள். இதனால் ஆன்மீகத்தில் உச்சத்தை அடைய முடியும் என கருதுகின்றனர். சிலர் அகோரிகள் நிர்வாண நிலை அடையவும், பிளாக் மேஜிக் செயல்களில் ஈடுபட தான் கஞ்சா பிடிக்கிறார்கள் என கூறுகிறார்கள்.

All Image Courtesy: Pinterest

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

All About the Supernatural Powers of Aghori Sadhus!

All About the Supernatural Powers of Aghori Sadhus!
Desktop Bottom Promotion