17 வயது பெண்ணின் முகத்தை நிர்வாண உடலுடன் மார்ஃப் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த கொடூரன்!

Posted By:
Subscribe to Boldsky

நமது நாட்டில் தவறு செய்பவனை தண்டிப்பதை காட்டிலும், பாதிக்கப்பட்ட நபருக்கு ஆறுதலும், அறிவுரை செய்துமே பழகிவிட்டோம். இதனால் தான் பெண் வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன, தவறு செய்தவன் சுதந்திரமாக சுற்றிக் கொண்டே திரிகிறான்.

A Man Morphed 17 YO Face in a Naked Body and Posted in Instagram.

சமூக வலைத்தளம் ஒன்றில் ஒரு பெண் தனது படத்தை பதிவு செய்யும் அளவிற்கு கூட சுதந்திரம் இல்லாத உலகில் தான் நாம் வாழ்ந்து வளர்ந்து வருகிறோம் என்பது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு.

கேட்டால் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது, தடுப்பது கடினம், நீங்கள் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கூறுவர். இந்த சம்பவமும் அப்படிப்பட்ட ஒன்று தான்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

முகநூல் பதிவு!

நிர்வாண உடலுடன் மார்பிங் செய்யப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் அக்கா முகநூலில் ஒரு நீண்ட பதிவொன்று இட்டிருந்தார். அதில் அவரது தங்கைக்கு என்ன நேர்ந்தது, அதை தொடர்ந்து அவர்கள் என்ன செய்தார்கள், அவர்களுக்கு கிடைத்த நீதி என்ன என்பது குறித்து முழுவதுமாக பகிர்ந்திருந்தார்.

அச்சுறுத்தல்!

அச்சுறுத்தல்!

பதிவு செய்தது மட்டுமில்லாமல், அவரது உடல் பக்கத்தை குறித்து அசிங்கமாக குறிப்பிட்டு செய்தி அனுப்பி, நீ எனக்கு வேண்டும், இல்லையேல் உன்னையும் என்னையும் டேக் செய்து முகநூலில் இந்த படத்தை பதிவு செய்வேன் என அச்சுறுத்தலும் கொடுத்துள்ளான்.

எப்.ஐ.ஆர்!

எப்.ஐ.ஆர்!

பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது தந்தையும் உதய்பூர்-ல் உள்ள தண்மண்டி காவல்நிலையம் சென்று எப்.ஐ.ஆர் பதிவு செய்ய சென்றுள்ளனர். அங்கே காவலர்கள் இது போன்ற பதிவுகள் சைபர் செல்லில் மட்டும் தான் எடுப்பார்கள் என கூறியுள்ளனர்.

சுற்றலில் விட்ட போலீஸ்!

சுற்றலில் விட்ட போலீஸ்!

சைபர் செல்லில் இருந்த காவலர் ஒருவர் இங்கு ஏ.டி.எம் சார்ந்து புகார்கள் மற்றும் தான் எடுக்கப்படும் என கூறி அனுப்பியுள்ளார். பிறகு மீண்டும், முன்பு சென்ற காவல் நிலையத்திற்கே சென்றுள்ளனர் அந்த பெண்ணும் தந்தையும்.

ஏப்ரல் -8!

ஏப்ரல் -8!

இரண்டு நாட்களாக சுற்றலில் விடப்பட்ட இவர்கள் ஏப்ரில் 8ம் தேதி சர்கிள் இன்ஸ்பெக்டரை சந்திக்க அனுப்பியுள்ளனர். நடந்ததை எல்லாம் மீண்டும் அங்கே ஒரு வழக்கறிஞரிடம் விவரித்துள்ளனர் அந்த பெண்ணும், அவரது தந்தையும்.

அறிவுரை!

அறிவுரை!

வழக்கு பதிவு செய்து, தவறு செய்த அந்த நபரை கைது செய்வதை விடுத்து, அங்கே வழக்கறிஞர் மற்றும் இன்ஸ்பெக்டர் அந்த பெண்ணுக்கு இனிமேல், சமூக தளத்தில் உன் படத்தை வெளியிடாதே என அறிவுரை கூறியுள்ளனர். மேலும், அந்த சமூக தள அக்கவுண்டை டெலிட் செய்து விடு என்றும் கூறியுள்ளனர்.

செல் போன் வேண்டாம்!

செல் போன் வேண்டாம்!

மேலும், செல்போன் பயன்படுத்த விட வேண்டாம் எனவும் கூறியுள்ளனர். குற்றவாளி என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், கடைசியில் பறிபோவது பெண் சுதந்திரம் மட்டும் தான் என அந்த பெண்ணின் அக்கா தனது கோபத்தை பதிவு செய்திருந்தார்.

ட்விட்டர் ரியாக்ஷன்!

இது குறித்து அந்த பெண் ட்விட்டரிலும் பதிவு செய்திருந்தார். இது மேனகா காந்தியின் பார்வைக்கு சென்றடைய. அவர் உடனடியாக இதுக்குறித்து விசாரணை செய்ய கூறினார்.

மேனகா காந்தி!

உடனடியாக உங்கள் எண்ணை எனக்கு அனுப்புங்கள், நான் உடனே ஆக்ஷன் எடுக்கிறேன் என மேனகா காந்தி கூறியிருக்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

A Man Morphed 17 YO Face in a Naked Body and Posted in Instagram.

A Man Morphed 17 YO Face in a Naked Body and Posted in Instagram.
Subscribe Newsletter