பல்வேறு வழிகளில் கொண்டாடப்படும் தசரா திருவிழா !

Posted By: Staff
Subscribe to Boldsky

பாரத தேசம் இந்த உலகிற்கு எண்ணற்ற கொடைகளை வழங்கியுள்ளது. அவற்றுள் பெண்களை தெய்வமாக நினைத்து வழிபடும் சாக்த வழிபாடு மிகவும் முக்கியமானது. உலகெங்கிலும் பெண்களை போகப் பொருளாகவும், குழந்தை பெற்றுத் தரும் ஒரு ஜந்துவாகவும் கருதிய முற்காலத்தில், பெண்களை தெய்வமாக கருதி வழிபடச் சொல்லிய சாக்தம் உண்மையிலேயே அதி அற்புதமானது.

அந்த சாக்தத்தின் உச்சம் நவராத்திரி திருவிழா. இந்தத் திருவிழாவில் நாம் அனைவரும் அன்னை துர்க்கையை வணங்கி அவளுடைய அருளை வேண்டி நிற்கின்றோம். நவராத்திரியானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ஒரு விழா மற்றும் இந்தத் திருவிழா, பத்தாம் நாள், தசரா பண்டிகையுடன் முடிவடைகிறது. பொதுவாக, இந்த திருவிழா செப்டம்பர்-அக்டோபர் மாதத்தில் இந்தியா முழுவதிலும் அதீத பக்தியுடன் கொண்டாடப்படுகிறது.

Ways of Dasara Doll Festival is Celebrated

தசரா பண்டிகையானது தீமையை தோற்கடித்து நன்மை வெற்றி பெற்றதை நினைவு கூறுகின்றது. இந்தியாவில் பல்வேறு கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் கொண்ட பல்வேறு மாநிலங்கள் உள்ள காரணத்தினால் இந்தத் திருவிழாவும் வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு வழிகளில் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் அந்த மண்ணிற்கே உரிய கலாச்சாரம் மற்றும் நம்பிக்கைகள் உள்ளது. தென் இந்தியாவில் நவராத்திரி திருவிழாவானது கொலு பொம்மைகளுடன் சிறப்பாக கொண்டாடப் படுகின்றது.

கர்நாடக மாநிலத்தின் தசரா கொழு பொம்மை திருவிழா மிகவும் பிரபலமானது மற்றும் அங்குள்ள ஒவ்வொரு வீட்டிலும் வெவ்வேறு பொம்மைகள் அழகுடன் காட்சிப் படுத்தப்படுகின்றன. உண்மையில் தசரா என்பது கொழு திருவிழா ஆகும். இந்தத் திருவிழாவின் பொழுது கொழு பொம்மைகள் அந்த மண்ணுக்குரிய பாரம்பரியத்தின் படி அழகுபடுத்தப்பட்டு காட்சிப் படுத்தப்படுகின்றன. கொழு திருவிழாவின் பொழுது கடவுளர்கள், தேவதைகள், அரசர்கள், ராணிகள், விலங்குகள் மற்றும் பறவைகள் போன்றவை பிற அலங்காரங்களுடன் காட்சிப்படுத்தப்படும்.

Ways of Dasara Doll Festival is Celebrated

கர்நாடகாவில் இந்தத் திருவிழா அந்த மண்ணுக்குரிய தனித்த பண்பாடு மற்றும் பாரம்பரியத்துடன் கொண்டாடப்படுகின்றது. இது ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் பிணைப்பை அதிகரிக்கின்றது. குடும்ப உறுப்பினர்கள் பல்வேறு ஏற்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் அவர்களுக்கு இடையேயான பிணைப்பு வலுப்படுகின்றது. தசரா திருவிழாவின் போது, கர்நாடக மாநிலம் முழுவதும் உங்களுடைய கண்களை கவரும் வண்ணம் வண்ணமயமாக அலங்கரிக்கப்படுகின்றது.

கர்நாடக மாநிலத்தின் தசரா திருவிழாவானது விஜயநகர பேரரசின் காலத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டதாக வரலாறு தெரிவிக்கின்றது. அன்னை துர்கா மகிஷாசுரனுடன் ஒன்பது நாட்கள் போரிட்டு பத்தாம் நாள் வெற்றி பெற்றதை நினைவு கூறும் விதமாக தசரா திருவிழா கொண்டாடப்படுகின்றது எனவும் ஒரு கதை நிழவுகின்றது.

அன்னை துர்கா அசுரனுடன் போரிடும் பொழுது அனைத்து ஆண், பெண் தெய்வங்களும் அன்னை துர்க்கைக்கு தங்களின் சக்தியை கொடுத்து ஒரு அணியில் நின்றனர். எனவே இந்த திருவிழாவானது அவர்களின் அவர்களின் தியாகத்துக்கு மரியாதை தரும் ஒரு ஒரு பண்டிகை எனவும் கருதப்படுகின்றது.

விழா பொம்மைகள்:

பாரம்பரியமாக திருவிழா பொம்மைகள் அல்லது தசரா பொம்மைகள் மரத்தால் செய்யப்பட்டவை. மேழும் அவைகள் வண்ணமயமான காகிதங்கள் அல்லது பட்டுத் துணிகளால் அலங்கரிக்கப்படுகின்றன. இப்பண்டிகையின் போது, கர்நாடக மாநிலம் முழுவதும் மிகவும் வண்ணமயமாகக் காணப்படும். மேழும் நீங்கள் பெரும்பாலான வீடுகளில் ஆண் மற்றும் பெண் தெய்வங்களின் சிறிய வடிவத்தை கண்டு தரிசிக்க முடியும்.

Ways of Dasara Doll Festival is Celebrated

பட்டாட பொம்மை அல்லது பொம்மைகள்:

கர்நாடக தசரா திருவிழாவின் போது வைத்து வணங்கப்படும் பொம்மைகளில் இது மிகவும் முக்கியமானதாகும். பட்டாட பொம்மை என்பது கணவன் மனைவியை பிரதிபலிக்கும் ஒரு ஜோடி பொம்மைகள் ஆகும். ஒவ்வொரு புதிய மணமக்களும் தங்களுடைய திருமணத்தின் பொழுது தன்னுடைய பிறந்த வீட்டில் இருந்து இந்த பட்டாட பொம்மைகளை எடுத்துச் செல்வர்.

ஏற்பாடுகள்:

கர்நாடக தசரா பொம்மை திருவிழாவின் பொழுது கொழு பொம்மைகள் பாரம்பரியத்தின் படி காட்சிப்படுத்தப்படுகின்றன. மக்கள் படிகள் அல்லது வரிசையின் படி ஒரு குறிப்பிட்ட நியதியின் படி காட்சிப்படுத்தப்படுகின்றன. பொதுவாக, ஒன்பது வரிசை அல்லது படிகளில் பொம்மைகள் வைக்கப்படுகின்றன.

ஒன்பது படிகள் அல்லது வரிசை:

ஒன்பது வரிசை அல்லது படிகளில் தசரா பொம்மைகள் காட்சிப்படுத்தப்படவேண்டும். முதல் மூன்று அடுக்குகள் அல்லது படிகளில் , பெண் தெய்வங்கள் இடம் பெற வேண்டும். அடுத்த மூன்று படிகளில் அதாவது நான்கு முதல் ஆறு படிகளில் அரசர்கள், ராணிகள், உப மற்றும் பரிவார தேவதைகள், பெரிய ஞானிகள், போன்றவைகள் இடம் பெற வேண்டும். ஏழாவது படியில் இந்து மதம் பாரம்பரியம் மற்றும் விழா கொண்டாட்டங்களை காட்சிப்படுத்தும் பொம்மைகள் இடம் பெற வேண்டும். எட்டாவது படியில் வழக்கமாக கடைகள், வீடுகள், பூங்காக்கள் மற்றும் இன்னும் போன்ற அன்றாட வாழ்க்கை காட்சிகளை பிரதிபலிக்கும் பொம்மைகள் இடம் பெற வேண்டும். கடைசி படியான ஒன்பதாவது படியில் வாழ்க்கை விஷயங்களை பிரதிபலிக்கும் பொம்மைகள் இடம்பெற வேண்டும்.

Ways of Dasara Doll Festival is Celebrated

கருப்பொருள்:

பொதுவாக, மக்கள் தசரா பொம்மை திருவிழாவின் போது பொம்மைகளை காட்சிப்படுத்த சில கருப்பொருட்களைப் பின்பற்றுவார்கள். சில பேர் பழமையான கருப்பொருளையும் மற்றும் சிலர் புதிய கருப்பொருளுடன் புதிய பொம்மைகளைப் பயன்படுத்துவார்கள். இப்போதெல்லாம், நீங்கள், ராமாயணம் அல்லது மகாபாரதம், மைசூர் வரலாறு, பூமியை காத்தல், நீர் சேமிப்பு, மற்றும் மாசு நீக்குதல் போன்ற கருப்பொருள்களை பார்க்க முடியும்.

பொம்மைகள் சேகரிப்பு:

ஒவ்வொரு ஆண்டும் புதிய பொம்மைகள் சேகரிக்கப்படும். பொதுவாக பொம்மைகள் ஒரு குடும்பத்தின் அடுத்த தலைமுறைக்கு கொடுக்கப்படும். கர்நாடகாவில், நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழைய பொம்மைகளை சில குடும்பங்களில் நாம் இன்றும் காணலாம்.

English summary

Ways of Dasara Doll Festival is Celebrated

Ways of Dasara Doll Festival is Celebrated
Story first published: Sunday, October 23, 2016, 10:00 [IST]
Subscribe Newsletter