தல தோணி, தல அஜித் இடையேயான வியக்க வைக்கும் ஒற்றுமைகள்!

Posted By:
Subscribe to Boldsky

தல - தல இதில் துவங்குகிறது அஜித் மற்றும் தோணியின் மத்தியிலிருக்கும் ஒற்றுமைகள். இருவருக்குமே பூர்வீகம் தமிழகம் கிடையாது ஆயினும், தங்களது திறமையால் பெரும் ரசிகர் பட்டாளத்தை உண்டாக்கி தமிழக ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கிறார்கள்.

கார்மென்ட்ஸில் வேலை செய்த "தல" அஜீத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா!!!

தன்னம்பிக்கை, காதல் திருமணம், முதல் குழந்தை பெண், தடைகளை தாண்டி வென்றவர்கள், பைக் பிரியர்கள் என தோணி மற்றும் அஜித் மத்தியில் நிறைய தனித்துவ ஒற்றுமைகள் இருக்கின்றன. அவற்றை பற்றி இனிக் காண்போம்....

டோனியின் ஹெலிகாப்டர் ஷாட் இரகசியம் பற்றி உங்களுக்கு தெரியுமா!!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுயம்பு

சுயம்பு

இருவருமே எந்த பின்னணியும் இன்றி தங்கள் திறமையால் முன்னேறியவர்கள். இருவரும் தங்களது ஆரம்பக்கட்ட வாழ்க்கையில் பல கடின சூழல்களை கடந்து பிரபலம் அடைந்தவர்கள்.

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை

தல தோணி, அஜித் இருவரின் வெற்றியின் ரகசியமும் அவர்களது தன்னம்பிக்கை தான். இதை இவர்களை விட, இவர்களை சுற்றி இருப்பவர்கள் மற்றும் போட்டியாளர்களே நிறைய முறை கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விடா முயற்சி

விடா முயற்சி

வெற்றியை அடைய இவர்கள் என்றும் சோர்வுற்றதே இல்லை. தொடர் தோல்விகளை கடந்து வந்து மீண்டும் வெற்றி பயணத்தில் உலா வந்தவர்கள் இவர்கள் இருவரும்.

எளிமை

எளிமை

எத்தனை உயரத்திற்கு சென்றாலும் இன்றுவரை எளிமையை பின்பற்றுபவர்கள் தோணியும், அஜித்தும். இந்த எளிமை தான், இவர்களை கோடிக்கணக்கான இரசிகர்கள் கொண்டாடுவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்து வருகிறது.

வெற்றி, தோல்வி

வெற்றி, தோல்வி

வெற்றியாயினும் சரி, தோல்வியாயினும் சரி அதை நினைத்து பெரிதாக கொண்டாடுவதோ, பெரிதாக வருந்துவதோ இல்லாமல், உணர்வை கட்டுப்படுத்தி சமநிலையில் இருக்க தெரிதவர்கள் தலயும், தலயும்.

ரசிகர் பட்டாளம்

ரசிகர் பட்டாளம்

இவர்களே துவண்டுப் போனாலும் இவர்களது உண்மையான ரசிகர்கள் இவர்களை விட்டு என்றும் நகர்ந்து சென்றதில்லை. தன்னம்பிக்கைக்கு அடுத்து அஜித் மற்றும் தோணியின் பெரிய பலம் இவர்களது ரசிகர்கள் தான்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

அஜித், ஷாலினி காதல் பற்றி நமக்குக் தெரியும். ஆனால், தோணியும் சாக்ஷியை மிக குறுகிய காலத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது பலரும் அறியாதது.

பெண் குழந்தை

பெண் குழந்தை

இருவரின் முதல் குழந்தையும் பெண் குழந்தை. அஜித்தின் முதல் குழந்தை அனோஷ்கா, தோணியின் முதல் குழந்தை ஸிவா.

பைக் பிரியர்கள்

பைக் பிரியர்கள்

இருவர் மத்தியிலும் தனித்துவமாய் இருக்கும் மற்றுமொரு விஷயம் பைக். இருவருமே பைக் பிரியர்கள், இருவரும் பலவகையான பைக்குகளை வீட்டில் வைத்திருக்கின்றனர். மேலும், இருவருமே நேரம் கிடைக்கும் போது தங்களுக்கு பிடித்த பைக்கில் இரவில் உலா வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாஸ்

மாஸ்

சிலரெல்லாம் ஓர் இடத்தில் இருந்தால் தான் மாஸ். ஆனால், அஜித் மற்றும் தோணியின் பெயர் ஒலித்தாலே அந்த இடத்தில் மாஸ் கிளம்பும்.

சென்னையின் செல்ல பிள்ளைகள்

சென்னையின் செல்ல பிள்ளைகள்

அஜித் மற்றும் தோணி இருவருக்குமே சென்னை பூர்வீகம் கிடையாது. ஆனால், இவர்கள் தான் சென்னையின் செல்ல பிள்ளைகளாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Uniqueness Between Thala Dhoni And Thala Ajith

Do you know about the Uniqueness Between Thala Dhoni And Thala Ajith? read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter