For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தோனி பற்றி உங்களுக்குத் தெரியாத சில உண்மைகள்!

|

தோனி என்றாலே பல இந்திய ரசிகர்களின் மனதில் ஓர் தீப்பொறி பறக்கும். ஏனெனில், இந்தியா வெற்றிபெறுமா என ஏங்கி ஏங்கி கனவுக் கண்ட அனைத்து ஐ.சி.சி கோப்பைகளையும் தன் கைகளால் பெற்று தந்த கூல் கேப்டன் தோனி.

தல தோணி, தல அஜித் இடையேயான வியக்க வைக்கும் ஒற்றுமைகள்!

கேப்டன் பொறுப்பை ஏற்கும் வரை அதிரடியாக ஆடி வந்தவர் தோனி. கேப்டன் ஆன பிறகு, பொறுப்புடன் ஆடி வெற்றியை பெற வேண்டும் என ஆட துவங்கினார். இவரது கடைசி பால் சிக்ஸர் பல காதல் கதைகளை விட இரம்மியமானது, அழகானது, ஆக்ரோஷமானது.

பலரும் அறியாத தோணி - சாக்ஷியின் இரகசியமான காதல் கதை!

இப்போது நமது கேப்டன் கூல் தோனி பற்றி பலரும் அறியாத சில உண்மைகள் பற்றி காண்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை #1

உண்மை #1

தோனி ஒரு மோட்டார் வாகன பிரியர் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். இவரது ஹம்மர் எச்2-வில் பயணிப்பதில் ஓர் அலாதியான பிரியம் உண்டு.

தொடர்களுக்கு இடையே ஊரில் இருக்கும் போது ஹம்மரில் பயணிக்க தோனி அதிகம் விரும்புவார்.

உண்மை #2

உண்மை #2

தோனி ஓர் பைக் பிரியர். இன்றளவும் தனக்கு பிடித்த பைக்குகளை தானே கழுவும் அளவிற்கு அதன் மீது ஓர் காதல் கொண்டுள்ளார்.

தோனியிடம் 23 பைக்குகள் உள்ளன. இதில் இவருக்கு மிகவும் பிடித்தமான பைக் ஹார்லி டேவிட்சன் ஆகும்.

உண்மை #3

உண்மை #3

தோனி கிரிக்கெட் ஆடும் முன்னர் கால்பந்து கோலியாக இருந்தார் என நமக்கு தெரியும். ஆனால், இத்துடன் இறகுப்பந்து ஆடுவதிலும் மிகவும் ஆர்வம் கொண்டுள்ளார் தோனி.

உண்மை #4

உண்மை #4

தோனி மூன்று நாய்களை வளர்த்து வளர்கிறார் அவை சாம் (ஜெர்மன் ஷெப்பர்ட்), ஸாரா (கருப்பு லாப்ரடோர்), சோயா (வெய்மரனர்)

உண்மை #5

உண்மை #5

தான் ஒரு கிஷோர் குமார் ரசிகன் என்பதை தானாக மிக பெருமையாக கூறிக்கொள்பவர் தோனி.

உண்மை #6

உண்மை #6

ஒருநாள் போட்டியில் ஏழாவது விக்கெட்டுக்கு களமிறங்கி சதம் அடித்த ஒரே கேப்டன் தோனி தான். இந்த போட்டி சென்னையில் பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த 2012 ஆண்டு நடந்தது. இதில், தோனி 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

உண்மை #7

உண்மை #7

டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த ஒரே இந்திய விக்கெட்கீப்பர் தோனி தான். 2013-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சென்னையில் நடந்த போட்டியில் தோனி இந்த சாதனையைப் புரிந்தார்.

உண்மை #8

உண்மை #8

கபில் தேவிற்கு அடுத்தப்படியாக கௌரவ பதவியைப் பெற்ற இரண்டாவது இந்தியர் என்றால் அது தோனி தான். அதுவும் 2011 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி, தோனிக்கு லெப்டினன்ட் கேணல் என்ற பட்டத்தை இந்திய பிராந்திய இராணுவம் வழங்கியது.

உண்மை #9

உண்மை #9

தோனி சர்வதேச கிரிக்கெட்டில் பங்கு கொள்ளும் ஆரம்ப காலத்தில் நீளமான தலைமுடியுடனான ஹேர் ஸ்டைலை மேற்கொண்டிருந்தார். இப்படி ஒரு ஹேர் ஸ்டைலை மேற்கொள்வதற்கு முக்கியமானவர் ஜான் ஆப்ரகாம் என ஒருமுறை வெளிப்படுத்தினார்.

உண்மை #10

உண்மை #10

தோனி களத்தில் இறங்கினாலே, ஒருமுறையாவது 'ஹெலிகாப்டர் ஷாட்' அடிப்பார். இந்த ஹெலிகாப்டர் ஷாட்டை கற்றுக் கொடுத்தது, முன்னாள் ஜார்கண்ட் கிரிக்கெட் வீரரான சந்தோஷ் லால் தானாம்.

உண்மை #11

உண்மை #11

தோனிக்கு அடிக்கடி கோவில்களுக்கு செல்ல பிடிக்குமாம். இவரது மிகவும் விருப்பமான கோவில் ராஞ்சியில் தேசிய நெடுஞ்சாலை 33 இல் உள்ள தியோரி கோவில் தானாம்.

உண்மை #12

உண்மை #12

தோனிக்கு இசை என்றால் மிகவும் பிடிக்குமாம். அதிலும் இவருக்கு பழைய கிளாசிங் இந்தி திரைப்பட மெலோடி பாடல்களைத் தான் கேட்க விரும்புவாராம். மேலும் இவர் கிஷோர் குமார் ரசிகரும் கூட.

உண்மை #13

உண்மை #13

தோனிக்கு சிக்கன் என்றால் கொள்ளைப் பிரியமாம். இவர் விரும்பி சாப்பிடும் மற்றொரு பொருள் ஹாட் சாக்லேட் ஃபட்ஜ்.

உண்மை #14

உண்மை #14

தோனி ஒரு WWE ஆர்வலர். இவருக்கு மிகவும் பிடித்தமான மல்யுத்த வீரர்கள் பிரட் 'தி ஹிட்மேன்' ஹார்ட் மற்றும் ஹல்க் ஹோகன் ஆவர்.

உண்மை #15

உண்மை #15

தோனியின் மனைவி சாக்ஷி தோனி எப்போதுமே ஒரு எலக்ட்ரிக்கல் குக்கரை, தன் கணவருடன் செல்லும் கிரிக்கெட் சுற்றுப் பயணத்தின் போது கொண்டு செல்வாராம். இதனால் தோனிக்கு பிடித்த மாதிரியான உணவை அவரால் சமைத்துக் கொடுக்க முடியுமாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Fifteen Lesser Known Facts About Captain Cool Dhoni

Here are some Lesser Known Facts about Captain Cool Dhoni, take a look...
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more