இந்தியாவை பற்றி இந்தியர்களுக்கே தெரியாத வியப்பூட்டும் விஷயங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

பக்கத்துக்கு வீட்டை பற்றி பேசும் முன்னர், நம் வீட்டில் என்ன நடக்கிறது என நாம் முழுமையாக அறிந்து வைத்திருக்க வேண்டும். அது போல தான் அமெரிக்காவில் அது இருக்கிறது, ஜப்பானில் இது இருக்கிறது என பேசும் முன்பு, நமது நாட்டில் என்ன இல்லை, என்ன இருக்கிறது என அறிந்து வைத்திருக்க வேண்டும்.

உலகையே கலக்கிய இந்திய கடத்தல்காரர்கள் பற்றிய திகிலூட்டும் உண்மைகள்!!!

நம் நாட்டிலும் வசதிகள் இருக்கின்றன, சுவாரஸ்யங்கள் நடக்கின்றன, சாதனைகள் படைக்கப்படுகின்றன. ஆனால், நாம் லியோனார்டோ டிகாப்ரியோ ஆஸ்கர் வாங்கியதை பற்றி தான் பெருமையாக பேசுவோம். நம் நாட்டு தேசிய விருது வாங்கிய படங்களை பற்றி மறந்துவிடுவோம்.

இந்தியா பற்றி பொய்யாக பரப்பப்பட்டு இன்றுவரை உண்மையென நம்பப்படும் 10 விஷயங்கள்!!!

இது மனித குணாதிசயங்களின் இயல்பு. நம்மிடம் இருப்பதை மறந்துவிட்டு, மாற்றான் விஷயத்தை பற்றியே சிந்தித்து பேசி நாட்களை கடத்துவோம். நமது நாட்டை பற்றி, இதுவரை நாமே பெரிதாக அறியாத சில விஷயங்கள் இருக்கின்றன, அதைப் பற்றி இனிக் காண்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்னேப்டீல் நகர்

ஸ்னேப்டீல் நகர்

உத்தரப்பிரதேசத்தில் ஸ்னேப்டீல் நகர் என்ற ஒரு ஊர் இருக்கிறது. முன்பு சிவநகர் என்று அறியப்பட்டு வந்த இந்த நகர் இப்போது ஸ்னேப்டீல் நகர் என அழைக்கப்படுகிறது. இதற்கு காரணம், ஸ்னேப்டீல் ஈ-காமர்ஸ் நிறுவனம் இந்த ஊருக்கு 15 கையடி பம்புகள் அமைத்துக் கொடுத்தது தான் என கூறப்படுகிறது.

கங்கா சுறா

கங்கா சுறா

சுறா வகைகளில் கங்கை சுறா என ஒரு சுறா வகை இருப்பதாக கூறப்படுகிறது. இது உண்மையாகவே கங்கையில் இருப்பவை தான், ஆனால், இப்போது இவை அழிந்து வருகிறது எனவும் கூறப்படுகிறது.

தாஜ்மஹால்

தாஜ்மஹால்

இரண்டாம் உலகப் போரின் போது சேதமைடைந்துவிடக் கூடாது என தாஜ்மஹால் சகப் ஹோல்ட் மூலம் பாதுகாக்கப்பட்டது.

ராக்கெட்

ராக்கெட்

இந்தியாவின் முதல் ராக்கெட் சைக்கிளில் வைத்து எடுத்து சென்றனர்.

முதல் மருத்துவ ரயில்

முதல் மருத்துவ ரயில்

உலகிலேயே முதல் மருத்துவ ரயில் தொடர்வண்டி இந்தியாவில் தான் துவங்கப்பட்டது.

உலகின் மிக பழமையான பிராண்ட்

உலகின் மிக பழமையான பிராண்ட்

உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் ச்யவன்பிராஷ் (Chyawanprash) தான் உலகின் மிகவும் பழமையான பிராண்ட் என கூறப்படுகிறது. இது இன்றளவும் விற்பனையில் இருந்து வருகிறது.

இசிசாராஸ் (Isisaurus)

இசிசாராஸ் (Isisaurus)

இசிசாராஸ் எனும் இந்த டைனசோர் வகை உயிரினம் இந்திய துணைக் கண்டத்தில் தோண்டி எடுக்கப்பட்டது ஆகும். இது மகாராஷ்டிராவில் உள்ள டான்கர்கான் மலையில் வாழ்ந்திருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்திய சாலைகள்

இந்திய சாலைகள்

இந்தியாவில் உள்ள ஒட்டுமொத சாலையில் நீளம் 4.7 மில்லியன் கிலோமீட்டர் ஆகும். இதன் மூலம் நமது உலகை 117 முறை சுற்றி வரலாம்.

உலகின் விலையுயர்ந்த வீடு

உலகின் விலையுயர்ந்த வீடு

பிளாட்பாரத்தில் வாழும் மக்கள் அதிகமுள்ள நமது நாட்டில் தான் உலகிலேயே விலையுயர்ந்த வீடும் இருக்கிறது. அது அண்டிலா எனும் முகேஷ் அம்பானியின் இல்லம் ஆகும்.

சமஸ்கிரத மொழி

சமஸ்கிரத மொழி

கணினி மென்பொருள் மேம்பாட்டிற்கு மிகவும் பொருத்தமான மொழி சமஸ்கிரதம் என கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Facts About India That Will Blow Your Mind

Facts About India That Will Blow Your Mind, take a look.
Subscribe Newsletter