நம்மை உறைய வைக்கும் சில நரமாமிச வழக்குகள்!

Posted By:
Subscribe to Boldsky

நரமாமிசம் என்றும் சொல்லும் போது நமக்கு நினைவிற்கு வருவது காட்டுவாசிகள் தான். காட்டுவாசிகள் தான் நரமாமிசத்தை விரும்பி சாப்பிடுவார்கள் என்று கேள்விப்பட்டிருப்போம். மேலும் இதெல்லாம் அக்காலத்தில் தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

நெஞ்சை பதைபதைக்க வைத்த சில புகைப்படங்கள்!

ஆனால் நரமாமிசத்தை சாப்பிடும் மனிதர்கள் உலகில் இன்னும் இருக்கத் தான் செய்கிறார்கள் என்பது தெரியுமா? ஆம், உலகின் சில பகுதியில் மக்களோடு மக்களாக வாழ்ந்து வந்த சில மனிதர்கள் நரமாமிசத்தை ருசித்துள்ளதாக வழக்குகள் உள்ளன. அதில் வாழ்க்கைத் துணையை சமைத்து சாப்பிட்ட மனைவி, தன் விரலையே ருசித்த மனிதன் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

உலகில் இன்னும் அழுகாமல் அப்படியே இருக்கும் சடலங்கள்!

இங்கு நம்மை உறைய வைக்கும் படி உலகில் உள்ள சில நரமாமிச வழக்குகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்களேன்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சொந்த பிறப்புறுப்பை சமைத்து பரிமாறிய மனிதன்

சொந்த பிறப்புறுப்பை சமைத்து பரிமாறிய மனிதன்

ஜப்பானின் டோக்கியாவில் உள்ள 22 வயதுடைய Mr. மாவோ சுகியாமா என்பவர், அறுவை சிகிச்சையின் மூலம் பிறப்புறுப்பை நீக்கி உறைய வைத்து, பின் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்து, அதனை சமைத்து ஒரு தட்டு $250 என விற்றார். இதனையும் அப்பார்ட்டியில் கலந்து கொண்ட 6 பேர் சுவைத்தனர்.

Image Courtesy

முன்னாள் கணவரை சமைத்து குழந்தைகளுக்கு பரிமாறியவர்

முன்னாள் கணவரை சமைத்து குழந்தைகளுக்கு பரிமாறியவர்

கேத்ரீன் நைட் ஓர் அற்பமான பிரச்சனைக்காக முன்னாள் கணவரை கொடூரமாக கொலை செய்தார். அதுவும் கசாப்புக் கடைக்காரன் வைத்திருக்கும் கத்தியைக் கொண்டு 37 முறை குத்தி, பின் கொக்கியாலை உடலை தொங்க விட்டு, உடலை துண்டுகளாக வெட்டி பிட்டம், தலை போன்றவற்றை சமைத்து, தன் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்க நினைத்தாராம். ஆனால் போலீஸ் அதற்குள் அதனைத் தெரிந்து கொண்டு, அதனைத் தடுத்துவிட்டனராம்.

Image Courtesy

சொந்த விரலை சமைத்து சாப்பிட்டவர்

சொந்த விரலை சமைத்து சாப்பிட்டவர்

டேவிட் ப்ளேபென்ஸ் என்பவர் விபத்து ஒன்றை சந்தித்தார். இந்த விபத்தில் மருத்துவர்கள் அவரது விரலை நீக்கிவிட்டனர். ஆனால் டேவிட்டோ அந்த விரலை மருத்துவரிடம் கேட்டு வாங்கி தன் வீட்டிற்கு சென்று, சமைத்து சாப்பிட்டார். இவர் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யவில்லை. ஏனெனில் அந்த விரல் அவருக்கு சொந்தமானது என்பதால்.

Image Courtesy

ஆன்லைன் வேட்டைக்காரன்

ஆன்லைன் வேட்டைக்காரன்

அர்மின் மியூவெஸ் என்பவருக்கு சிறு வயதில் இருந்து விசித்திர ஆசையாம். அது நரமாமிசத்தை சுவைப்பது மற்றும் இதற்காக ஒரு பலியாளை ஆன்லைனில் தேடிக் கொண்டிருந்தாராம். அப்போது பெர்லினைச் சேர்ந்த பெர்ண்ட் பிராண்டெஸ் என்பவர் கிடைக்க, அவரும் இதற்கு ஒப்புக் கொண்டாராம். முதலில் அர்மின், அவரது பிறப்புறுப்பை வெட்டி சமைத்து சுவைத்து, பின் அவரைக் கொன்று 7 மாதங்கள் வீட்டிலேயே வைத்து சமைத்து சாப்பிட்டாராம்.

Image Courtesy

மனித முகத்தை மென்று சுவைக்கும் போது கொல்லப்பட்டவர்

மனித முகத்தை மென்று சுவைக்கும் போது கொல்லப்பட்டவர்

ரூடி யூஜின் என்பவர் பார்ப்பதற்கு சாதாரணமாகத் தான் காணப்படுவார். ஆனால் ஒரு நாள் அவர் ஒருவரின் முகத்தை கடித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, போலீஸ் ஒருவர் அக்காட்சியைக் கண்டு அவரை விடுமாறு கூறினார். ஆனால் ரூடியின் வாயில் நரமாமிச துண்டுகள் இருப்பதைக் கண்ட போலீஸ் அவரை அந்த இடத்திலேயே சுட்டுக் கொன்றுவிட்டார்.

Image Courtesy

தன் சகோதரரை கொன்று சுவைத்த ரஷ்ய சகோதரர்கள்

தன் சகோதரரை கொன்று சுவைத்த ரஷ்ய சகோதரர்கள்

28 வயதைச் சேர்ந்த தைமூர் மற்றும் 23 வயதான மாரட் என்பவர்கள், தனது சொந்த சகோதரரான ரஃபீஸை கொலை செய்து, 6 மாதங்கள் சமைத்து சுவைத்துள்ளனர்.

Image Courtesy

இறந்த நண்பனை ருசித்த இருவர்

இறந்த நண்பனை ருசித்த இருவர்

நான்கு ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் இதுவரை யாரும் செல்லாத சைபீரியாவில் உள்ள ஓர் இடத்திற்கு சென்றனர். அப்போது அவர்களுள் இருவர் உயிருடன் திரும்பியதோடு, ஒருவர் இன்னும் எங்குள்ளார் என்பதை தெரியவில்லை, மற்றொருவர் சைபீரியாவின் ஓரிடத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். ஆரம்பத்தில் அங்குள்ள அதிக பனியின் காரணமாகத் தான் இறந்துள்ளார் என போலீஸார் நினைத்திருந்தனர். ஆனால் பின்பு தான் உண்மை புலப்பட்டது. அது இறந்தவரது உடல் தசைகள் யாரோ ஒருவரால் சாப்பிடப்பட்டுள்ளது என்பது தெரிய வந்தது. இதை அவர்கள் தப்பிய இருவரும் மறுத்தனர். பின் அவர்கள் இறந்த உடலைத் தான் உட்கொண்டதாக ஒப்புக் கொண்டனர்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Chilling Cases Of Cannibalism

Check some of the most gruesome cases of cannibalism. Read on about these chilling stories if you are not a weak hearted person.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter