For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாக சாதுக்கள் ஏன் உடை அணிவதில்லை?

By SATEESH KUMAR S
|

நம்மில் பலர் கும்ப மேளாவால் கவரப்பட்டவர்கள். கும்ப மேளா என்றதும் நம் நினைவிற்கு வருவது நாக சாதுக்கள். அவ்விடத்திற்கு சென்றவர்களுக்கு நாக சாதுக்கள் ஏன் உடையின்றி அலைகின்றனர் என்று வியக்கத் தோன்றும். அதற்கு பல காரணங்கள் உள்ளன, சிலவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

கும்ப மேளா அன்று ஆயிரக்கணக்கான இந்துக்கள் இந்தியாவின் புனித நதியில் ஒன்று கூடுவர். இது உலகத்தின் பெரிய ரம்யமான நிகழ்வாக கருதப்படுகிறது. லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும். கும்ப மேளாவின் போது அலகாபாத் மற்றும் ஹரித்துவார் பகுதிகள் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும்.

சாது என்பது எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஆன்மீக பாதையில் செல்வது. இங்கே ஆன்மீகம் என்று சொல்லப்படுவது கடவுளை தேடுவது அல்லது பிரபஞ்சத்தின் இறுதியான உண்மையை அறிவது. அந்த உண்மையை கண்டறிந்தவர்கள் ஞானம் பெற்றவர்களாக கருதப்படுவார்கள். மேலும் மற்றவர்கள் ஞானம் பெற்றவர்களை தொழுவதற்கும் இதுவே காரணம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 ‘நாகா’ என்றால் என்ன?

‘நாகா’ என்றால் என்ன?

‘நாகா' என்றால் நிர்வாணம் என்று சிலர் கூறுகின்றனர். சாதுக்கள் பற்றற்று இருப்பவர்கள், எல்லா வகையிலும் பற்றற்று வாழப் பழகிக் கொள்வர்.

அவர்கள் குடும்பத்துடன் வாழ்வார்களா?

அவர்கள் குடும்பத்துடன் வாழ்வார்களா?

இல்லை, முன்பே கூறியது போல அவர்கள் பற்றற்று இருப்பவர்கள். சாதுக்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உறவைப் பிரிந்து வாழ்பவர்கள்.

அவர்கள் வீட்டில் தங்குவார்களா?

அவர்கள் வீட்டில் தங்குவார்களா?

இல்லை, பல இடங்களில் சுற்றித் திரிபவர்கள், ஒரு இடத்தில் தங்குவதில்லை. சொந்தமாக ஒரு வீட்டில் இல்லாமல் சுற்றித் திரிபவர்கள்.

அவர்கள் என்ன சாப்பிடுவார்கள்?

அவர்கள் என்ன சாப்பிடுவார்கள்?

யாத்ரீகர்கள் வழங்கும் உணவை சாதுக்கள் உண்பர். வாழ்வதற்காக உண்பவர்கள்; அதாவது மிகவும் குறைந்த அளவே உண்பர்.

ஏன் அவர்கள் ஆடைகளை அணிவதில்லை?

ஏன் அவர்கள் ஆடைகளை அணிவதில்லை?

ஆடைகளை கைவிடுவது இந்த உலகையே கைவிடுவதாக அர்த்தம். ஆடைகள் நம்மை காப்பவை, நம் நிலையை குறிப்பவை. உடை உடுத்துவதை கைவிடுவதன் மூலம், மிகவும் அடிப்படையான தேவையை அவர்கள் துறக்கின்றனர். அவர்களின் துறப்பிற்கு இதுவே அறிகுறியாகும்.

அவர்கள் என்ன செய்வார்கள்?

அவர்கள் என்ன செய்வார்கள்?

அவர்கள் தியானம் மற்றும் ஆன்மீக பயிற்சியில் ஈடுபடுவர். வானிலைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. எனவே குளிர்ந்த இடங்களிலும் வெப்பமான இடங்களிலும் ஆடையின்றி காண இயலும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Naga Sadhus Don't Wear Clothes

Do you know why naga sadhus don't wear clothes? Well, let us discuss the same here.
Desktop Bottom Promotion