சார் ஐசாக் நியூட்டன் பற்றிய விந்தையான தகவல்கள்!!!

Posted By: John
Subscribe to Boldsky

உலகின் அடிப்படையான புவி ஈர்ப்பு சக்தியைக் கண்டறிந்து பெரும்பாலான அறிவியல் ஆராய்சிகளுக்கு வித்திட்டவர் சார் ஐசாக் நியூட்டன். இவர் வெறும் ஆராய்ச்சியாளர் மட்டுமல்ல, கணிதவியலாளர் மற்றும் தத்துவஞானியும் கூட. அறிவியல், கணிதம், இயந்திரவியல் ஈர்ப்பு விசை என நிறைய துறைகளில் பெரும் ஆராய்சிகளை செய்தவர்.

உலகையே கலக்கிய இந்திய கடத்தல்காரர்கள் பற்றிய திகிலூட்டும் உண்மைகள்!!!

உலக அறிவியல் ஆராய்ச்சியாளர்களில் அதிக செல்வாக்கும் அறிவியல் புரட்சியும் செய்த முக்கிய நபர்களில் இவரும் ஒருவர் ஆவார். பெரும்பாலும் நிறைய அறிவுடையவர்கள் சிற்சில விஷயங்களில் முட்டாள்தனமாகவும், சிறுப்பிள்ளைதனமாகவும் செயல்படுவர் என நாம் வரலாற்றில் பல முறைக் கண்டுள்ளோம்.

நாடி ஜோதிடத்தின் வரலாற்று இரகசியங்கள் மற்றும் உண்மை தகவல்கள்!!!

அந்த வகையில், உலகம் போற்றும் அறிவியல் ஞானியான சார் ஐசாக் நியூட்டன் பற்றிய சில விந்தையான தகவல்களைக் குறித்து இனிக் காணலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிறந்த போதே இறந்துவிடுவார் என எண்ணினர்

பிறந்த போதே இறந்துவிடுவார் என எண்ணினர்

சார் ஐசாக் நியூட்டன் பிறக்கும் போது மிகவும் வலுவின்றி பிறந்தாராம். இதன் காரணமாக இக்குழந்தை விரைவில் இறந்துவிடும் என்று இவரது தாய் உட்பட அனைவரும் எண்ணினர். தண்ணீர் ஊற்ற பயன்படும் ஜாடியுனுள் அகப்படும் அளவு தான் இருந்தாராம் பிறந்த குழந்தையாக இருந்த நியூட்டன்.

விவசாயியான நியூட்டன்

விவசாயியான நியூட்டன்

நியூட்டன் பிறக்கும் மூன்று மாதங்களுக்கு முன்னரே அவரது தந்தை இறந்துவிட்டார். இவரது குடும்பம் ஓர் விவசாயக் குடும்பம். இவர் பதினேழு வயது வரை பள்ளிக்கு சென்று வீடு திரும்பியதும் விவாசாயம் செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தார் அம்மாவின் கட்டாயத்தின் பேரில். அப்போது கிட்டத்தட்ட முற்றிலும் ஓர் முழு விவசாயியாக மாற்றும் தருணத்தில் அவர் இருந்த போது தான், அவரது மாமா நியூட்டனை கேம்பிரிட்ஜ், டிரினிடி கல்லூரியில் சேர்த்துவிட்டார்.

ஆப்பிள் விழுந்த கதை உண்மையா?

ஆப்பிள் விழுந்த கதை உண்மையா?

உலகின் சிறந்த மற்றும் புகழ்பெற்ற கதைகளில் ஒன்று நியூட்டனின் ஆப்பிள் விழுந்து புவி ஈர்ப்பை கண்டறிந்த கதை. ஆனால், சிலர் இதை கட்டுக்கதை என்றும் கூறுகிறார்கள். உண்மையில், நியூட்டனே, ஒருமுறை நண்பரிடம், ஜன்னல் வழியாக மரத்தில் இருந்து ஆப்பிள் விழுவதை முறைத்து, உன்னித்து கவனித்துக் கொண்டிருந்தார் என்றும், அது தான் புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடிக்க அடிப்படையாய் இருந்ததாகவும் கூறியிருக்கிறார்.

ஆப்பிள் மரம்

ஆப்பிள் மரம்

நியூட்டன் படித்த பள்ளியை சேர்ந்தவர்கள், புவி ஈர்ப்பு விசையை நியூட்டன் கண்டுபிடிக்க காரணமாக இருந்த அந்த ஆப்பிள் மரத்தை வாங்கி அவர்களது பள்ளி தோட்டத்திற்கு இடம் மாற்றி கொண்டு சென்றுவிட்டார்களாம்.

இரகசியம் காப்பவர்

இரகசியம் காப்பவர்

நியூட்டன் கண்டுபிடித்த பெரும்பாலானவை அவரது 21 - 27 வயதிற்கு இடைப்பட்டு அவரால் கண்டறியப்பட்டது. ஆனால், அவற்றை அவர் அப்போதே வெளியிடாமல் மிகவும் இரகசியமாக வைத்திருந்தார். முக்கியமாக அலைக்கற்றை நிறங்கள் (spectrum of colors) பற்றி அவர் கண்டறிந்ததை கூட சில ஆண்டுகள் கழித்து தான் உலகிற்கு கூறினார்.

ஊசியால் கண்ணை குத்திக் கொண்டார்

ஊசியால் கண்ணை குத்திக் கொண்டார்

ஒரு முறை தனது கண் குழியை தானே ஊசியை வைத்துக் குத்திக் கொண்டார் நியூட்டன். இவ்வாறு செய்வதால் கண்ணின் நிறம் பார்க்கும் திறனில் ஏதேனும் மாற்றம் ஏற்படுகிறதா என உணர செய்தாராம் நியூட்டன்.

ரசவாதம் மற்றும் இறையியல்

ரசவாதம் மற்றும் இறையியல்

புவி ஈர்ப்பு விசை மற்றும் ஒளி சார்ந்து செய்த ஆராய்ச்சியை விட தனது ரசவாதம் மற்றும் இறையியல் (alchemy and theology) ஆராய்ச்சிக்கு தான் நிறைய நேரம் செலவழித்தார் நியூட்டன்.

தந்தை மகன் ஒரே பெயர்

தந்தை மகன் ஒரே பெயர்

சார் ஐசாக் நியூட்டனின் தந்தை பெயரும் ஐசாக் நியூட்டன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவராக இருந்து நியூட்டன்

தலைவராக இருந்து நியூட்டன்

1703 - 1727 ஆகிய இடைப்பட்ட காலங்களில் ராயல் சோசைட்டி (Royal Society) என்ற இயற்கை அறிவியல் என்ற அமைப்பிற்கு இவர் தலைவராக இருந்தார்.

ஆராய்ச்சிக் கூடத்தை தீக்கிரையாக்கிய நாய்

ஆராய்ச்சிக் கூடத்தை தீக்கிரையாக்கிய நாய்

நியூட்டனின் நாய் ஒன்று, அவர் இருபது வருடங்களாக ஆராய்ச்சி செய்துவந்த ஆராய்ச்சிக் கூடத்தைத் தீக்கிரையாக்கியது. இதில், அவரது பல்வேறு ஆராய்சிகள் அழிந்து போயின என்று கூறப்படுகிறது

தனிமையில் இருந்த நியூட்டன்

தனிமையில் இருந்த நியூட்டன்

1678ஆம் ஆண்டு அவரது தாய் இறந்த பிறகு ஏறத்தாழ ஆறு வருடங்கள் தனிமையில் இருந்தார் நியூட்டன். இந்த ஆறு ஆண்டு காலத்தில் தான் நிறைய அறிவியல் சார்ந்தவற்றை நியூட்டன் எழுதியதாக கூறப்படுகிறது.

நரம்பு தளர்ச்சி

நரம்பு தளர்ச்சி

1678 ஆம் ஆண்டு நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டார் நியூட்டன். ரசவாதம் (alchemy) குறித்த ஆராய்ச்சியில் இவர் ஈடுபட்டதன் விளைவாகவே இவ்வாறு ஆனதாகவும் கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Unknown Facts About Sir Issac Newton

    Do you know about the unknown facts about Sir Issac Newton? read here.
    Story first published: Monday, June 22, 2015, 13:41 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more