மகாபாரதத்தில் திரௌபதியை பற்றி நீங்கள் அறிந்திராத சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

திரௌபதிக்கு அறிமுகம் தேவையில்லை. பூடகமாகவும், உமிழும் தன்மையுடனும் விளங்கினாலும் ஐந்து பாண்டவர்களின் இறக்க குணமுள்ள ராணியாக அவர் திகழ்ந்தார். மகாபாரத போருக்கும் இவர் தான் மூல காரணமாக கருதப்படுகிறார். ஆனால் நம் உடலில் உள்ள ஐந்து சக்கரங்களை பிணைக்கும் குறியீடாக திரௌபதி விளங்குகிறார் என்பது உங்களுக்கு தெரியுமா?

அதனால் தான் மனித முதுகு தண்டில் இருக்கும் குல குண்டலினியாக அவர் குறிப்பிடப்படுகிறார். அத்தகைய திரௌபதியைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஐந்துக்கு பதில் 14 கணவன்களை கொண்டிருக்க வேண்டியவர் திரௌபதி

ஐந்துக்கு பதில் 14 கணவன்களை கொண்டிருக்க வேண்டியவர் திரௌபதி

தன் முன் ஜென்மத்தில் தனக்கு 14 குணங்கள் அடங்கிய கணவன் வேண்டும் என திரௌபதி கேட்டுக் கொண்டிருந்தார். சிவபெருமானும் அவருக்கு அந்த வரத்தை அளித்தார். ஆனால் யாராலும் அந்த அனைத்து குணங்களையும் கொண்டிருக்க முடியாததால், அந்த குணங்களை கொண்டுள்ள ஐந்து பேருக்கு அவர் மனைவியாவார் என சிவபெருமான் கூறியிருந்தார். அதில் தர்மம், பலம், வில்வித்தை, அழகு மற்றும் பொறுமை என சிறந்த ஐந்து குணங்களை கொண்டுள்ள கணவன் தனக்கு கிடைக்குமாறு சிவபெருமானிடம் கேட்டுக் கொண்டார் திரௌபதி.

திரௌபதிக்கு குழந்தை பருவமே கிடையாது

திரௌபதிக்கு குழந்தை பருவமே கிடையாது

பாஞ்சால அரசாட்சியை வென்று அதனை பிரித்திட, தன் மாணவர்களான பாண்டவர்களையும், கௌரவர்களையும் பயன்படுத்திய துரோணாச்சாரியாவை ஆதரித்த குரு குடும்பத்தை அழிக்கும் ஒரே நோக்கத்தில், தன் தந்தை மற்றும் பாஞ்சால அரசாட்சியின் அரசரான துருபதனால் உருவாக்கப்பட்டவரே திரௌபதி. அதனால் வளர்ந்த நிலையில் இருந்த ஒரு மங்கையாகவே அவர் பிறந்தார். ஆகவே குழந்தை பருவம் மற்றும் தாய் தந்தையின் வளர்ப்பை ஆகியவற்றை பார்க்காதவர் திரௌபதி. ஒரு குடும்பத்தையே அழிக்கும் எண்ணத்தோடு வடிவமைக்கப்பட்ட திரௌபதி, வெறுப்பை காட்ட சொல்லி வளர்க்கப்பட்டார்.

காளி அவதாரம்

காளி அவதாரம்

தென் இந்தியாவில் திரௌபதியை மகாகாளியின் அவதாரமாகவும் நம்புகின்றனர். இந்தியாவில் உள்ள கொடுங்கோல் மன்னர்களை அழிக்க ஸ்ரீ கிருஷ்ணருக்கு (விஷ்ணுவின் அவதாரம், பார்வதி தேவியின் சகோதரனும் கூட) உதவிடவே இந்த காளி அவதாரம் என நம்பப்படுகிறது. திரௌபதி அக்னியில் இருந்து உருவானவர் என்றாலும் கூட, அதனால் தான் அவர்கள் சகோதரன் மற்றும் சகோதரியாக கருதப்படுகின்றனர்.

தன் கணவன்களின் மீது திரௌபதி நம்பிக்கை கொள்ளவில்லை

தன் கணவன்களின் மீது திரௌபதி நம்பிக்கை கொள்ளவில்லை

பழி தீர்க்கும் எண்ணத்தோடு திரௌபதி விளங்கினாலும், தன் ஐந்து கணவன்களும் அவருக்கு அவமரியாதை தேடி தந்து விடுவார்களோ என்ற சந்தேகம் இருந்தது. தன் கொழுந்தியின் கணவனான ஜெயத்ரடா, தன் ஆசை நாயகியாக வைத்துக் கொள்ள அவரை வீட்டை விட்டு வெளியே தன் தேருக்கு இழுத்து வந்த போது அவனை பாண்டவர்கள் கொல்லவில்லை. அதேப்போல் தங்களின் கடைசி வருட வனவாசத்தில் திரௌபதியை கிச்சகா சாடிய போது, எங்கே தங்களின் அந்தரங்க ரகசியங்களை வெட்ட வெளிச்சம் ஆக்கி விடுவானோ என்ற பயத்தில் அவனை கொல்ல பாண்டவர்கள் தயங்கினார்கள்.

திரௌபதியின் வாகனம்

திரௌபதியின் வாகனம்

திரௌபதியின் வாகனம் லக்ஷ்மி தேவியின் அக்ஷய பாத்திரம் (எப்போதும் நிரம்பி வழியும் உணவோடு) போல் இருந்தது. இந்தியாவில் "திரௌபதியின் வாகனம்" என்றால் சமயலறை சிறந்த உணவுகளால் குவிந்துள்ளது என்பதை குறிக்கும். அப்படிப்பட்ட சமையலறையே ஒரு நல்ல இல்லத்தரசிக்கு அடையாளமாகும். அப்படிப்பட்டவரை பொதுவாக அன்னபூர்ணா என அழைப்பார்கள். ஒரு நல்ல இல்லத்தரசி எப்படி இருக்க வேண்டும் என்பதையும், பெண் என்பவளை காமத்தின் சின்னமாக பார்க்க கூடாது என்பதையும் மகாபாரதம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

மகரிஷி துர்வாசரால் திரௌபதி காப்பாற்றப்பட்டாரா?

மகரிஷி துர்வாசரால் திரௌபதி காப்பாற்றப்பட்டாரா?

திரௌபதி துகிலுரிக்கப்பட்ட போது அவரை துர்வாசர் காப்பாற்றிய சுவாரசியமான கதை ஒன்றும் உள்ளது. துர்வாசர் அளித்த வரத்தினால் தான் திரௌபதி அதிசயமாக காப்பாற்றப்பட்டார் என சிவபுராணம் கூறுகிறது. ஒரு முறை மகரிஷியின் கோவண துணி கங்கை நதியோடு அதித்து செல்லப்பட்டது. உடனே தன் ஆடையை கொஞ்சம் கிழித்து துர்வாசருக்கு மூடி விட்டார் திரௌபதி. உடனே திரௌபதிக்கு ஒரு வரம் அளித்தார் அந்த மகரிஷி. அதன் படி, துச்சாதனன் திரௌபதியை துகிலுரிக்கும் போது, திரௌபதியின் ஆடை முடிவில்லாமல் வந்த படி இருந்தது.

கடோத்கஜனை சபித்த திரௌபதி

கடோத்கஜனை சபித்த திரௌபதி

தன் தந்தையின் ராஜ்யத்திற்கு கடோத்கஜன் முதல் முறை வருகை தந்த போது, தன் தாயின் (ஹிடிம்பா) ஆணையால் திரௌபதிக்கு அவன் மரியாதை கொடுக்கவில்லை. இதனால் அவமானமடைந்த திரௌபதி கடும் கோபமுற்றார். தான் ஒரு அபூர்வமான பெண், தான் யுதிஷ்டிராவின் ராணி, தான் ஒரு பிராமண அரசரின் புதல்வி, பாண்டவர்களை விட தன் அந்தஸ்து உயர்ந்தது என அவனை பார்த்து திரௌபதி உரக்க கூறினார். பொல்லாத தன் தாய் தனக்கு பக்க பலமாக இருந்ததால் பெரியவர்கள், முனிவர்கள் மற்றும் அரசர்கள் இருந்த சபையில் இப்படி நடந்து கொள்ள அவன் துணிந்தான்.

ஹிடிம்பாவின் பழிதீர்த்தல்

ஹிடிம்பாவின் பழிதீர்த்தல்

கடோத்கஜனின் ஆயுள் குறைந்து போகும், அவன் போரிடாமலேயே கொல்லப்படுவான் (ஷத்ரிய வம்சத்திற்கு மிக மோசமாக கருதப்படும் நிகழ்வு) என திரௌபதி மோசமான சாபத்தை அளித்தார். திரௌபதியின் இந்த சாபத்தை கேள்விப்பட்ட ஹிடிம்பாவால் தன்னை கட்டுப்படுத்த முடியவில்லை. திரௌபதியிடம் சென்ற அவள், திரௌபதியை இழிவான மற்றும் பாவப்பட்ட பெண் என அழைத்தார். அவர் திரௌபதியின் குழந்தைகள் மீது சாபமளித்தார். இந்த இரண்டு பெண்களால் பாண்டவர்களின் வம்சமே இல்லாமல் போனது.

திரௌபதியின் பல அவதாரங்கள்

திரௌபதியின் பல அவதாரங்கள்

நாரத புராணம் மற்றும் வாயு புராணத்தின் படி, திரௌபதி என்பவர் ஷ்யாமளா தேவி (தர்மனின் மனைவி), பாரதி (வாயுவின் மனைவி), சாச்சி (இந்திரனின் மனைவி), உதா (அஸ்வினின் மனைவி) மற்றும் பார்வதி தேவியின் (சிவபெருமானின்) கலவை அவதாரமாவார். அதற்கு முன் அவர் ராவணனுக்கு சாபமிட்ட வேதவதியாக அவதாரம் எடுத்திருந்தார். பின் சீதாவாக பிறந்து ராவணனின் மரணத்திற்கு காரணமாக விளங்கினார். அவருடைய மூன்றாவது அவதாரம் தமயந்தி மற்றும் அவள் மகளான நளாயனி என பகுதிகளாக இருந்தது. அவருடைய ஐந்தாவது அவதாரம் திரௌபதியாகவே இருந்தது.

திரௌபதியின் உட்கூறு

திரௌபதியின் உட்கூறு

ஒரு சாதாரண மனைவியாக இருக்க திரௌபதி ஒத்துக்கொண்ட போது, தன்னுடைய வீட்டுப்பொருட்களை வேறு எந்த ஒரு பெண்ணுடனும் பகிர்ந்து கொள்ள மாட்டேன் என்ற நிபந்தனையை விதித்திருந்தார். அதாவது அக்காலத்து பழக்கவழக்கங்கள் படி கூற வேண்டுமானால், பாண்டவர்கள் தங்களின் பிற மனைவிகளை இந்திரா பிரசாதத்திற்கு அழைத்து வர முடியாது. இருப்பினும் அர்ஜுனன் தன்னுடைய இன்னொரு மனைவியை வெற்றிகரமாக கொண்டு வந்தான். அவள் தான் கிருஷ்ணரின் தங்கையான சுபத்ரா. கிருஷ்ணரின் சிறு அறிவுரையோடு, அவள் ஒரு தந்திரத்தை கொண்டு இதை சாத்தியமாக்கினாள்.

திரௌபதியின் சுயம்வரத்தில் துரியோதனன் கலந்து கொள்ளவில்லை

திரௌபதியின் சுயம்வரத்தில் துரியோதனன் கலந்து கொள்ளவில்லை

திரௌபதியின் சுயம்வரத்தில் துரியோதனன் கலந்து கொள்ளாததற்கு ஒரு காரணம் உள்ளது. அதற்கு காரணம் கலிங்க நாட்டு இளவரசியான பானுமதியை அவன் ஏற்கனவே மணந்திருந்தான். வேறு ஒரு பெண்ணை அவன் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என வாக்களித்திருந்தான். அதை நிறைவேற்றியும் காட்டினான்.

நாய்களுக்கு சாபம் அளித்த திரௌபதி

நாய்களுக்கு சாபம் அளித்த திரௌபதி

பஞ்சாப் மாநில நாட்டுப்புறக் கதை ஒன்று இப்படி கூறுகிறது: திரௌபதியின் அறைக்குள் ஒரு நேரத்தில் ஒரு சகோதரன் மட்டுமே நுழைய வேண்டும் எனவும் அந்நேரத்தில் மற்ற சகோதரர்கள் அங்கே நுழையக் கூடத்து எனவும் பாண்டவர்கள் ஒத்துக் கொண்டிருந்தனர். அவரின் அறைக்குள் நுழையும் சகோதரன் தன் செருப்பை கதவிற்கு வெளியே விட்டு விட்டு செல்ல வேண்டும். இந்த நிபந்தனையை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும். அதன் படி அவர்கள் ஒரு வருட காலத்திற்கு வனவாசம் செல்ல வேண்டும்.

குற்றவாளியான அர்ஜுனன்

குற்றவாளியான அர்ஜுனன்

ஒரு நாள் யுதிஷ்டரன் திரௌபதியின் அறையில் இருந்தான். அப்போது கதவிற்கு வெளியே இருந்த அவன் செருப்பை நாய் ஒன்று திருடி விட்டது. இதை அறியாத அர்ஜுனன், அறைக்குள் நுழைந்தான். உள்ளே த்ரௌபதியுடன் தன் அண்ணன் இருந்ததை கண்டான். அவர்களின் ஒப்பந்தத்தின் படி, அர்ஜுனன் வனவாசத்திற்கு செல்ல வேண்டியாயிற்று. தர்மசங்கடமாக உணர்ந்த திரௌபதி செருப்பை திருடிய அந்த நாயின் மீது கடும் கோபத்திற்கு ஆளானார். அதனால் அனைத்து நாய்களுக்கும் இந்த சாபத்தை அளித்தார் - "நீங்கள் உடலுறவில் ஈடுபடுவதை இந்த உலகமே பார்க்கும். இதனால் நீங்கள் அவமானமடைவீர்கள்"

திரௌபதியின் மறுபக்கம்

திரௌபதியின் மறுபக்கம்

துரோணரின் மகனான அஸ்வத்தாமா கருணையே இல்லாமல் தூங்கிக் கொண்டிருந்த திரௌபதியின் ஐந்து மகன்களை நடு ராத்திரியில் கொன்றான். அர்ஜுனனும் பீமனும் அஸ்வத்தாமாவை சிறை பிடித்தனர். திரௌபதியே அவன் மீது இறுதி முடிவை எடுக்கட்டும் என அவர் முன்பு அவனை ஒப்படைத்தனர். தன் தலையை தொங்கப்போட்டு உட்கார்ந்திருந்த அஸ்வத்தாமாவை பார்த்த திரௌபதி இரக்கம் அடைந்தார். இப்படிப்பட்ட கொலைகாரனை கொள்வதில் எந்த பாவமும் இல்லை என கிருஷ்ணர் கூறியிருந்தாலும் கூட, தன் மகனின் இழப்பு துரோணரின் மனைவிக்கு எப்படி இருக்கும் என்ற வலியை திரௌபதியால் உணர முடிந்தது.

கற்புடன் இருக்க ஆசீர்வதிகக்ப்பட்டார்

கற்புடன் இருக்க ஆசீர்வதிகக்ப்பட்டார்

தன் அடுத்த கணவரிடம் செல்லும் முன்பு, தன் கற்பையும் புனிதத்தையும் மீண்டும் பெற, திரௌபதி அக்னி வழியாக நடப்பார். பல கணவன்களை கட்டுவதற்கு முன்னாள், இம்மாதிரியான விதிமுறைகள் எல்லாம் இருந்ததில்லை. பாண்டவர்கள் அனைவருக்கும் பிற மனைவிகள் இருந்தனர். ஆனால் இந்த மனைவிகள் தங்களின் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். திரௌபதி தங்களின் மற்ற சகோதரர்களுடன் வாழும் அந்த நான்கு வருடமும் தங்களின் மற்ற மனைவிகளை பார்ப்பதற்கு பாண்டவர்கள் நகரத்தை விட்டு வெளியே செல்ல வேண்டியதாயிருந்தது.

கிருஷ்ணர் மட்டுமே திரௌபதியின் ஒரே நண்பர்

கிருஷ்ணர் மட்டுமே திரௌபதியின் ஒரே நண்பர்

திரௌபதி எப்போதுமே கிருஷ்ணரை மட்டுமே தன்னுடைய நெருங்கிய நண்பராக நினைத்திருந்தார். அவர் கிருஷ்ணரை சகா என்றும், கிருஷ்ணர் அவரை சகி என்றும் அழைத்து வந்தனர். இது திரௌபதி மற்றும் கிருஷ்ணருக்கு இடையேயான தெய்வீக அன்பை வெளிக்காட்டியது. தன்னை புரிந்து கொண்ட ஒரே உண்மையான நண்பனாக விளங்கியது கிருஷ்ணர் மட்டுமே. ஒவ்வொரு முறை ஆபத்தில் இருந்த போதும், தன்னை காப்பாற்ற வந்ததும் கிருஷ்ணரே. தன் வாழ்க்கை முழுவதும் கிருஷ்ணர் தன்னுடனேயே இருப்பதை தெய்வீகமாக உணர்ந்தார் அவர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Unknown Facts About Draupadi From Mahabharata

Here are some unknown facts about draupadi from mahabharata. Take a look... 
Please Wait while comments are loading...
Subscribe Newsletter