பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பற்றி யாரும் அறிந்திடாத சில சுவாரஸ்யமான தகவல்கள்!!

Posted By: John
Subscribe to Boldsky

பிக் 'பி' என்று செல்லமாக பாலிவுட்டில் அழைக்கப்படும் அமிதாப்பச்சன், இந்திய திரையுலகின் மாபெரும் சூப்பர்ஸ்டார். 1980'களில் இவர் ஹிந்தியில் நடத்த பல வெற்றிப் படங்களை தமிழில் ரீமேக் செய்து, நடித்து வெற்றியும் கண்டுள்ளார் நமது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

நடிகர் "இளையதளபதி" விஜய் பற்றி யாரும் அறிந்திராத சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

அமிதாப்பச்சன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். "எந்திரன்" படத்தில் நடிக்கும் போது கூட அமிதாப்பச்சனிடம் உங்கள் மருமகளுக்கு (ஐஸ்வர்யா ராய் பச்சன்) எந்த இடையூறும் ஏற்படாமல் பத்திரமாக தான் பார்த்துக்கொள்வேன் என்று உறுதியளித்தார் ரஜினிகாந்த்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

பாலிவுட் மட்டும் அல்லாது ஒட்டுமொத்த இந்தியாவின் சூப்பர்ஸ்டாராக திகழும் அமிதாப்பச்சனுக்கு இந்த இடம் அவ்வளவு எளிதாக கிடைத்துவிடவில்லை. முதலில் திரையுலகில் இவர் நடிகராகவே உள்ளே வரவில்லை....

ஆரம்பக் காலகட்டத்தில் இவர் என்னவாக இருந்தார், எப்படி நடிகரானார் என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்ள தொடர்ந்துப் படியுங்கள்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டப்பிங் ஆர்டிஸ்ட்

டப்பிங் ஆர்டிஸ்ட்

1969ஆம் ஆண்டு புவன் சோமே என்ற மரினால் சென் (Mrinal Sen) என்பவரது படத்தில் பின்னணி குரல் பேசுபவராக தான் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார் அமிதாப்பச்சன்.

சத்யஜித்ரே படத்திலும்...

சத்யஜித்ரே படத்திலும்...

அடுத்து 1977ஆம் ஆண்டு சத்யஜித்ரே கூட அவரது "ஷத்ராஞ்சி கே கில்லாடி" (Shatranji Ke Khilladi) படத்தில் அமிதாப்பச்சன் அவர்களது குரலைப் பயன்படுத்தியிருந்தார்.

பொறியியலாளர் ஆக விருப்பம்

பொறியியலாளர் ஆக விருப்பம்

ஆரம்பக் காலகட்டத்தில் அமிதாப்பச்சன், தான் ஒரு பொறியியலாளராக வேண்டும் என்று விரும்பினார். இந்திய விமானப் படையில் சேர மிக ஆர்வமாக இருந்தார்.

வானொலி நிலையத்தில் வேலை மறுப்பு

வானொலி நிலையத்தில் வேலை மறுப்பு

அமிதாப்பச்சன், அவரது சிம்மக் குரலுக்கு பெயர் போனவர். ஆனால், அந்நாளில் இவர் அகில இந்திய வானொலி நிலையத்தில் வேலைக் கேட்டு சென்ற போது, இவரது குரலை காரணம் காட்டி, வேலை மறுக்கப்பட்டதாம்.

முதல் சம்பளம்

முதல் சம்பளம்

அமிதாப்பச்சனின் முதல் சம்பளம் 300 ரூபாய் தான்.

நடிகராக அறிமுகம்

நடிகராக அறிமுகம்

அமிதாப்பச்சன், ஒரு நடிகராக அறிமுகமாகிய திரைப்படம் "சாட் ஹிந்துஸ்தானி" (Saat Hindustaani)

தங்குவதற்கு வீடு இன்றி தவித்த அமிதாப்

தங்குவதற்கு வீடு இன்றி தவித்த அமிதாப்

சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்துக் கொண்டிருந்த சமயத்தில் அமிதாப் தங்குவதற்கு வீடு கூட இல்லாத சூழ்நிலை எல்லாம் ஏற்பட்டிருக்கிறது.

தொடர்ந்து தோல்வி படங்கள்

தொடர்ந்து தோல்வி படங்கள்

அமிதாப்பச்சன் ஓர் சமயத்தில் தொடர்ந்து 12 தோல்வி படங்களை கொடுத்துள்ளார். அதன் பிறகு தான் "சான்ஜீர்" (Zanjeer) என்ற படம் வெற்றியடைந்தது.

உண்மை பெயர்

உண்மை பெயர்

அமிதாபின் உண்மையான குடும்பப் பெயர் "ஸ்ரீவஸ்தவா". ஆனால், இவரது தந்தை "பச்சன்" என்ற புனைப் பெயரை வைத்துக் கொண்டமையால். பச்சன் என்ற பெயரே இவரது குடும்பப பெயராக மாறிவிட்டது.

இந்திராகாந்தி பாராட்டு

இந்திராகாந்தி பாராட்டு

அமிதாப்பச்சனின், "ரேஷ்மா அவுர் சேரா" என்ற திரைப்படத்தைக் கண்டு பாராட்டிக் கடிதம் எழுதியிருந்தாராம் அன்றைய பிரதமர் மறைந்த இந்திராகாந்தி அம்மையார்.

உலக அழகி தேர்வாளர்

உலக அழகி தேர்வாளர்

கடந்த 1995ஆம் ஆண்டு நடந்த உலக அழகி போட்டிகளின் அலங்கார அணிவகுப்புப பிரிவில் தேர்வாளராக இருந்தாராம் அமிதாப்.

அதிகமான இரட்டை வேடங்கள்

அதிகமான இரட்டை வேடங்கள்

மற்ற நடிகர்களை விட அதிகமாக இரட்டை வேடங்கள் ஏற்று நடித்தவர் அமிதாப்பச்சன். மற்றும் "மஹான்" என்ற படத்தில் மூன்று வேடங்களிலும் நடித்துள்ளார்.

விசித்திர நோய்

விசித்திர நோய்

அமிதாப்பச்சனுக்கு தசைக்களைப்பு (Myasthenia gravis) எனப்படும் விசித்திர நோய் தாக்கம் உள்ளது. மற்றும் இவர் ஒரு ஆஸ்துமா நோயாளியும் கூட.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Unknown Facts About Amitabh Bachchan

    Big 'B' Amitabh is the biggest super star of Indian film industry. Do you know about the Unknown facts about Amitabh Bachchan? read here.
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more