மகா சிவராத்திரியின் ஆதியை விளக்கும் புராணக் கதைகள்!

By: Ashok CR
Subscribe to Boldsky

மகா சிவராத்திரி என்பது இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய மிகப்பெரிய விரதமாகும். இந்த விரதமானது ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதியின் இரவில் கொண்டாடப்படும். மகா சிவராத்திரியின் விரதத்தைக் கடைப்பிடிப்போர், நாள் முழுவதும் உணவருந்தாமல், இரவு முழுவதும் சிவனை நினைத்தவாறு, தூங்காமல் அவரின் பாடல்கள் அல்லது கதைகளை கேட்டுக் கொண்டு, மறுநாள் காலையில் குளித்து சிவனை பூஜித்து, உணவருந்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

மகா சிவராத்திரியின் முக்கியத்துவம்...!

இத்தகைய சிறப்பு வாய்ந்த மகாசிவராத்திரியின் ஆதியை விளக்கும் விதமாக புராணத்தில் பல கதைகளும், மரபு வழிக்கதைகளும் உள்ளது. இங்கு மகா சிவராத்திரியுடன் தொடர்புடைய கதைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்துப் பாருங்களேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நஞ்சை விழுங்கிய கதை

நஞ்சை விழுங்கிய கதை

ஒரு கதையின் படி, பாற்கடலை (சமுத்திர மந்தன்) கடைந்த போது, பாற்கடலில் இருந்து ஒரு பானை நஞ்சு வெளிவந்தது. இந்த நஞ்சு உலகத்தையே அழிக்கும் வல்லமையை படைத்திருந்ததால், தேவர்களும் அசுரர்களும் கதி கலங்கி போனார்கள். அதனால் சிவபெருமானின் உதவியை நாடி அவரிடம் சென்றனர். தீய தாக்கங்களில் இருந்து இந்த உலகத்தை காத்திட இந்த கொடிய நஞ்சை சிவபெருமானே குடித்தார்.

நீலகண்டரான சிவபெருமான்

நீலகண்டரான சிவபெருமான்

சிவபெருமான் நஞ்சை விழுங்குவதற்கு பதிலாக தன் தொண்டையிலேயே வைத்துக் கொண்டார். இதனால் அவரின் தொண்டை நீல நிறத்தில் மாறியது. அதனால் தான் அவருக்கு நீலகண்டர் என்ற பெயரே வந்தது. அதற்கு அர்த்தம் நீல நிற தொண்டை உடையவர் என்பதாகும். உலகத்தை காக்க சிவபெருமான் ஈடுபட்ட இந்த நிகழ்வை தான் சிவராத்திரியாக கொண்டாடுகிறோம்.

பிரம்மா விஷ்ணு கதை

பிரம்மா விஷ்ணு கதை

சிவபுராணத்தில் உள்ள மற்றொரு புராணத்தின் படி, மும்மூர்த்திகளில் மற்ற இரு கடவுள்களான பிரம்மனும் விஷ்ணுவும் யார் பெரியவர் என்ற சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்த சண்டையின் தீவிரம் முற்றியதால், இந்த பிரச்சனையில் தலையிடும் படி மற்ற கடவுள்கள் சிவபெருமானிடம் கேட்டுக் கொண்டனர். இந்த சண்டையின் பயனின்மையை அவர்களுக்கு உணர்த்த, பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் நடுவே மிகப்பெரிய தூணாக சிவபெருமான் குறுக்கே உருவெடுத்தார். அதன் அளவை பார்த்து வாயடைத்து போன அவர்கள், அதன் முடிவை யார் முதலில் கண்டு பிடிக்கிறார்களோ அவர்களே பெரியவர் என்று முடிவெடுத்தனர்.

 பிரம்மா விஷ்ணு கதை

பிரம்மா விஷ்ணு கதை

அன்னப்பறவையாக உருவெடுத்த பிரம்மன் மேல் நோக்கி பறந்தார். பன்றி அவதாரம் எடுத்த விஷ்ணு பூமியை நோக்கி சென்றார். ஆனால் அந்த ஒளிக்கே முடிவே இல்லாமல் இருந்தது. ஆயிரக்கணக்கான மைல்களை கடந்து வந்த போதிலும் அவர்களால் அதன் முடிவுகளை கண்டு பிடிக்க முடியவில்லை. தன்னுடைய பயணத்தில், தூணை ஒட்டி மெதுவாக வந்த தாழம்பூ ஒன்றை பிரம்மன் பார்த்தார். எங்கிருந்து வருகிறாய் என அதனை பார்த்து பிரம்மன் கேட்டார். அந்த தூணுக்கு படைக்கப்பட்ட மலரான அது மேலிருந்து கீழே வருவதாக கூறியது. மேலே அந்த தூணின் முடிவு எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியாத பிரம்மன் தன் தேடலை முடித்துக் கொள்ள நினைத்து, அதற்கு அந்த மலரை சாட்சியாக இருக்கும் படி கேட்டுக் கொண்டார்.

சிவனின் கோபத்தால் சாபம் பெற்ற பிரம்மா மற்றும் தாழம்பூ

சிவனின் கோபத்தால் சாபம் பெற்ற பிரம்மா மற்றும் தாழம்பூ

இதை பார்த்து கோபம் கொண்ட சிவபெருமான் தன் சுய ரூபத்தை பெற்றார். பொய் சொன்னதற்காக பிரம்மனுக்கு தண்டனை அளித்தார் சிவபெருமான். அதன் படி பிரம்மனை யாரும் வணங்க மாட்டார்கள் என சிவபெருமான் அவரை சபித்தார். இனி பூஜைக்கு படைக்க தாழம்பூ பயன்பட மாட்டாது என்று அந்த மலருக்கும் சாபம் அளித்தார். சிவபெருமான் முதல் முதலில் பங்குனி மாதத்தில் பௌர்ணமி 14 ஆம் நாளன்று தான் லிங்க உருவை எடுத்தார். அதனால் இந்த தினம் மிகவும் மங்களகரமான நாளாக, சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளன்று சிவபெருமானை மனதாறு வணங்கினால், வாழ்க்கையில் சந்தோஷமும், வளமையும் பெருகும் என நம்பப்படுகிறது.

சிவபெருமானின் தீவிர பக்தர் கதை

சிவபெருமானின் தீவிர பக்தர் கதை

சிவராத்திரியின் போது சிவபெருமானை இரவு முழுவதும் வழிபட வேண்டும் என ஒரு புராணம் கூறுகிறது. ஒரு முறை பழங்குடியை சேர்ந்த ஒரு வயதானவர் மிகப்பெரிய சிவபெருமான் பக்தராக விளங்கினார். ஒரு நாள் விறகு எடுப்பதற்காக அடர்ந்த காட்டிற்குள் சென்றார். இருப்பினும் தன் பாதையை தொலைத்த அவர் இருட்டினால் வீட்டிற்குள் திரும்ப முடியாமல் போனார். பொழுது சாய சாய, வனவிலங்குகளின் உறுமல் சத்தங்கள் அவரை நடுங்க வைத்தது. பயந்து போன அவர் விடியும் வரை தங்குவதற்காக அருகில் உள்ள ஒரு மரத்தின் மீது ஏறினார். கிளைகளை பிடித்து கொண்டு இருந்தவருக்கு, பயத்தினால் தூக்கம் வரவில்லை. எங்கே தூங்கினால் கீழே விழுந்து விடுவோமோ என்ற பயத்தினால் விழித்துக் கொண்டே இருந்தார்.

இரவு முழுவதும் பூஜை செய்த பக்தர்

இரவு முழுவதும் பூஜை செய்த பக்தர்

இரவு முழுவதும் விழித்திருக்க, மரத்தில் இருந்து ஒவ்வொரு இலையாக புடுங்கி கீழே போட நினைத்தார். அப்படி செய்யும் போது, ஒவ்வொரு இலைக்கும் சிவபெருமானின் பெயரை உச்சரித்துக் கொண்டே இருந்தார். கீழே இருந்த லிங்கத்தின் மீது ஒரு ஆயிரம் இலையையாவது போட்டிருப்பதை காலையில் தான் அந்த பெரியவர் தெரிந்து கொண்டார். இது வில்வ மரம் என்பதையும் காலையில் தான் அவர் தெரிந்து கொண்டார். தனக்கு தெரியாமலேயே இரவு முழுவதும் சிவபெருமானை குளிர்வித்ததால், அந்த பெரியவருக்கு இறைதன்மையுள்ள ஆசீர்வாதம் அளிக்கப்பட்டது. மகாசிவராத்திரியின் போது விரதம் கடைப்பிடிப்பவர்கள் இந்த கதையை கூறுவார்கள். இரவு முழுவதும் விரதத்தை கடைப்பிடித்த பிறகு, சிவனுக்கு படைத்த பிரசாதத்தை உண்ணுங்கள்.

பலவாறு கொண்டாப்படும் மகா சிவராத்திரி

பலவாறு கொண்டாப்படும் மகா சிவராத்திரி

மகாசிவராத்திரி முடிந்த உடனேயே, ஒரு அதிசயத்தை போல், குளிர் காலம் முடிந்து வசந்த காலத்தில் எப்படி பூக்கள் பூத்து குலுங்குமோ, அதேப்போல் இந்த பூமியும் புத்துயிரை பெறும். அதனால் தான் என்னவோ இந்தியா முழுவதும் லிங்கத்தை ஒரு கருவுறுதல் சின்னமாக வழிபடுகிறார்கள். இந்தியாவின் பல்வேறு பகுதியிலும் இந்த பண்டிகை ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படுகிறது. உதாரணத்திற்கு, தென் கர்நாடகாவில் இந்த தினத்தன்று, குழந்தைகளை அனைத்து விதமான குறும்புகளையும் செய்ய விட்டு, பின் மன்னிப்பு கேட்க வைக்கப்படுவார்கள். பொய் சொன்னதற்காக பிரம்மனுக்கு சிவபெருமான் அளித்த தண்டனையை குறிக்கும் விதமாக இப்படி கொண்டாடப்படுகிறது. வாரணாசியில் உள்ள காசியில் இருக்கும் விஸ்வனத்தா கோவிலில் லிங்கத்தை (ஒளி தூணின் சின்னம்) கொண்டாடுவார்கள், லிங்கத்தை உச்ச அறிவின் ஒளியாக கருதுவார்கள்.

குறிப்பு

குறிப்பு

அதனால் மகாசிவராத்திரி என்பது வெறும் சடங்கு மட்டுமல்ல. ஆனால் இது அண்டத்தை விளக்கும் பிரபஞ்சம் சம்பந்தமான சொற்பொருள் விளக்கமாகும். அறியாமையை சிதறச் செய்து, அறிவுச்சுடரை பரப்பி, அண்டம் என்றால் என்ன என்பதை ஒருவருக்கு உணர்த்தும். மேலும் உச்ச சக்தியை ஊக்குவிக்கவும் செய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Origin And History Of Shivaratri Or Maha Shivratri

Here is the origin and history of shivaratri or mahashivratri. Take a look...
Story first published: Tuesday, February 17, 2015, 12:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter