"எக்ஸ் - மென்" போல வினோதமான உடல்நலத்துடன் உலகில் வாழும் அதிசிய மனிதர்கள்!!

Posted By:
Subscribe to Boldsky

கண்டிப்பாக "எக்ஸ்- மென்" பார்க்காத மக்கள் இருப்பது கடினம். அதில் வரும் கதாப்பதிரங்கள் சில விசித்திரமான உடல்நல குணங்கள் கொண்டிருப்பார்கள். ஒருவருக்கு காயமே ஏற்படாது, புவியீர்ப்பு விசையை கட்டுப்படுத்தும் தன்மை என உலகையே கட்டுப்படுத்தும் வகையிலான அம்சங்கள் கொண்ட சக்தி கொண்டிருப்பவர்கள் அந்த படத்தில் கதாபாத்திரமாக சித்திரிக்கப்பட்டு இருப்பார்கள்.

இந்த அளவுக்கு இல்லையெனிலும், ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை போல நிஜத்தில் நம்பும் வகையில் சில விசித்திர உடல்நல குணங்கள் கொண்ட மனிதர்கள் நமது உலகில் வாழ்ந்து வருகிறார்கள். குளிரை உணர முடியாத மனிதன், தண்ணீரை கண்டாலே அஞ்சும் பெண், ஓர் நாளுக்கு 200 தடவைக்கு மேல் உச்சமடையும் பெண் என இந்த பட்டியல் நீள்கிறது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஓர் நாளில் 200 முறை உச்சமடையும் பெண்

ஓர் நாளில் 200 முறை உச்சமடையும் பெண்

யூ.கே வை சேர்ந்தவர் சாரா கார்மென். 24 வயதே ஆன இந்த இளம் பெண்ணின் உடலில் ஏற்படும் வினோதம் என்னவெனில், இவர் ஓர் நாளில் 200 முறை உச்சமடைகிறாராம். இதை ஒரு கோளாறு என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதை ஆங்கிலத்தில் "Permanent Sexual Arousal Syndrome (PSAS)" என்று குறிப்பிடுகிறார்கள். மிகவும் கடினம் என கருதப்படும் ஒரு விஷயம், இவருக்கு அடிக்கடி நடக்கிறது.

கொழுப்பே இல்லாத மனிதர்

கொழுப்பே இல்லாத மனிதர்

இவரது பெயர் பெர்ரி, வயது 59. இவர் எண்ணற்ற பர்கர், ஐஸ்கிரீம் என சாப்பிட்டாலும் கூட உடலில் கொழுப்பு சேருவது இல்லை. இவருக்கு உடல் எடை அதிகரிக்க வாய்ப்பே இல்லை என கூறப்படுகிறது. இந்த விசித்திரத்தை மருத்துவ முறையில் "Lipodystrophy" என்று கூறுகிறார்கள். அதாவது, இவரது உடலில் சேரும் கொழுப்பு மிக வேகமாக கரைக்கப்பட்டுவிடுகிறது.

குளிரை உணர முடியாத ஆண்

குளிரை உணர முடியாத ஆண்

அண்டார்டிகா பகுதியில் வெறும் உள்ளாடையுடன் நின்றாலும் கூட இவருக்கு குளிர் தெரிவது இல்லையாம். இவரது பெயர் விம் ஹோப், டச்சு நாட்டை சேர்ந்தவர். ஐஸ் கட்டிகள் நிறைந்த தண்ணீரில் கூட ஜாலியாக நிற்கிறார் மனிதர். அண்டார்டிகாவே தூசு. அப்பறம் இது என்ன பெரிசா. இதன் மூலம் இவர் நிறைய உலக சாதனைகள் புரிந்திருக்கிறார் என்பது கொசுறு செய்திகள்.

24 மணி நேரமும் தூங்காமல் இருக்கும் சிறுவன்

24 மணி நேரமும் தூங்காமல் இருக்கும் சிறுவன்

ரெட் லாம்ப் (Rhett Lamb) என்பது இந்த சிறுவனுடைய பெயர். வெறும் மூன்று வயதே ஆன இச்சிறுவன் தூங்குவதே கிடையாது, இதனால் சோர்வடைவதும் கிடையாது. இது மிகவம் அரிதான செயல்பாடு என மருத்துவர்கள் கூறுகிறார்கள். மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்கள் தான் இதற்கு காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தண்ணீர் என்றாலே அலறும் பெண்

தண்ணீர் என்றாலே அலறும் பெண்

ஏஸ்லெய்ஜ் மொர்ரிஸ் எனும் இளம் பெண்ணால் நீச்சலடிக்க முடியாது. குளிப்பதும் கடினம். காரணம் தண்ணீரில் இவருக்கு மெய்யாலுமே கண்டம். நீர் பட்டாலே இவருக்கு உடலில் தடுப்பு மற்றும் சிவந்து காணப்படுகிறதாம். வியர்வை வெளி வருதல் கூட இவருக்கு உடலில் எரிச்சல் ஏற்படுத்துகிறதாம்.

மறதியே இல்லாத பெண்

மறதியே இல்லாத பெண்

பொதுவாகவே பெண்கள் எதையும் லேசில் மறக்க மாட்டார்கள். ஆனால், ஏ.ஜே எனும் பெண்ணால் எதையுமே மறக்க முடிவதில்லையாம். இவருக்கு வயது 40, திருமணமானவர். சாதரணமாக இவர் சாலையில் செல்லும் விஷயத்தை கூட மறக்க முடிவதில்லையாம். இவரது மூளை அனைத்தையும் நினைவில் வைத்துக்கொள்கிறது. 25 வருடத்திற்கு முன்பு ஏதேனும் ஓர் நாளில் நடந்ததை கேட்டால் கூட சொல்கிறார் ஏ.ஜே.

 டிக்டாக் மட்டும் உண்ணும் பெண்

டிக்டாக் மட்டும் உண்ணும் பெண்

எதை சாப்பிட்டாலும் அலர்ஜி ஏற்படுகிறது நடலி கூப்பர் எனும் 17 வயது பெண்ணுக்கு. கடைசியில் இவருக்கு டிக்-டாக் மின்ட் சாப்பிட்டால் மட்டும் எந்த அலர்ஜியும் ஏற்படுவது இல்லை என கண்டறிந்து அதையே தனது உணவை உண்டு வருகிறார்.

விக்கல் எடுப்பதில் சிக்கல்

விக்கல் எடுப்பதில் சிக்கல்

ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் இவருக்கு விக்கல் எடுக்கிறதாம். இவர் ஒரு இசையமைப்பாளர். இவரது பெயர் க்றிஸ் சான்ட்ஸ். இதற்காக எவ்வளவோ முயற்சிகளும், சிகிச்சைகளும் மேற்கொண்டும் இவரது விக்கல் சிக்கலுக்கு எந்த தீர்வும் இதுவரை கிடைக்கவில்லை.

சிரித்தால் மயங்கும் இளம்பெண்

சிரித்தால் மயங்கும் இளம்பெண்

கே அண்டர்வூட் எனும் யூ.கே-வை 20 பெண் சிரித்தல் மயங்கிவிடுகிறார். இதை உணர்வு சார்ந்த ஓர் கோளாறு என மருத்துவர்கள் கூறுகிறார்கள். பயம், கோவம், ஆச்சரியம், என அனைத்து உணர்ச்சி வெளிபாடுகளிலும் பயன்கிவிடுகிறார் இந்த இளம்பெண்.

 டெக்னாலஜி ஓர் அலர்ஜி

டெக்னாலஜி ஓர் அலர்ஜி

மொபைல், மைக்ரோவேவ்-அவன், கார் ஓட்டுவது போன்ற விஷயங்களால் கூட அலர்ஜி ஏற்படுகிறது டெப்பி பேர்ட் எனும் பிரிட்டின் பெண்ணுக்கு. 39 வயதாகும் இவருக்கு எலக்ட்ரோமேக்னடிக்வினால் தான் பிரச்சனையாம். இதனால் தான் இவருக்கு இவ்வாறான அலர்ஜிகள் ஏற்படுகிறது. இதனால் சருமத்தில் எரிச்சல் மற்றும் ரேஷஸ் போன்றவை ஏற்படுகிறது இவருக்கு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ten People with Unbelievable Medical Conditions

Everyone should know about this ten people who were living with unbelievable medical conditions. Take a look.
Subscribe Newsletter