அகோரி சாதுக்கள் பற்றிய விந்தையான 10 உண்மைகள்!

Posted By: Ashok CR
Subscribe to Boldsky

மனித வரலாற்றில் பின்பற்றப்பட்டு வந்த வழிபாட்டுச் சடங்குகள் எதுவும் குழப்பங்கள், வெறுப்பு, பயம், அருவெறுப்பு போன்றவைகள் சரிசமமான அளவில் நமக்கு ஏற்படுத்தியிருக்காது. அப்படி ஏற்படுத்தும் சடங்குகளைப் பின்பற்றுபவர்கள் தான் இந்தியாவில் உள்ள நரமாமிசம் உண்ணும் அகோரிகள் (அகோரி சாதுக்கள்) ஆவார்கள்.

அகோரிகள் யார்?

நர மாமிசம் உண்ணுவது மட்டுமல்லாது, இறந்த பிணங்களுடன் உடல் உறவு கொள்வதற்காகவும் அகோரிகள் அறியப்படுபவர்கள். அதேப்போல் பல வித சடங்குகளுக்கு மனித மண்டை ஓடுகளையும் பயன்படுத்துபவர்கள் அவர்கள். ஆனால் அகோரிகளைப் பற்றி சொல்ல வேண்டுமானால் இதோடு நின்று விட முடியாது.

சிவபுராணத்தின் படி ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

அவர்களைப் பற்றி பேச இன்னும் ஏராளமான விஷயம் உள்ளது. அவற்றைத் தான் நாம் பார்க்கப் போகிறோம். அகோரிகளைப் பற்றிய 10 விந்தையான தகவல்களைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை: 1

உண்மை: 1

அகோரிகள் அழிக்கும் கடவுளான சிவபெருமான் அல்லது அவருடைய துணைவியான காளி தேவி அல்லது சக்தியின் பக்தர்கள் ஆவார்கள். இச்சை அடக்கம், குடிப்பழக்கத்திலிருந்து விலகியிருத்தல் போன்றவற்றை முழுமையாக பின்பற்றும் பிற சாதுக்களைப் போல் அல்லாமல் அகோரிகள் வேறுபட்டிருப்பார்கள். அவர்களை பொறுத்த வரை, மாமிசம் உண்ணுதல், மது அருந்துதல், உடலுறவு கொள்ளுதல் போன்றவைகள் எல்லாம் தேவியை திருப்தி படுத்துவதற்கான செயல்களாகும். மேலும் அனைத்திலும் கடவுள் இருக்கிறார் என நம்புபவர்கள் அவர்கள். அதனால் மனித கழிவு, மனித நீர்மம் மற்றும் அழுகும் நிலையில் உள்ள மனித சவம் ஆகியவைகளையும் கூட அவர்கள் உண்ணுவார்கள். இப்படிச் செய்வதால் விஷயங்களில் உள்ள ஒருமையை (புனித மற்றும் புனிதமற்ற) தன்மயமாக்க முயற்சி செய்வார்கள். இதன் மூலம் அழகின் உண்மையான புலனுணர்வை வரையறுப்பார்கள்.

உண்மை: 2

உண்மை: 2

அகோரிகளின் மிகவும் நெறி தவறிய வழக்கமாக கருதப்படுவது பிணத்தைப் புணருவது. அவர்களை பொறுத்த வரையில், காளி தேவி உடலுறவில் திருப்தியை எதிர்ப்பார்க்கிறார். அதனால் தகுந்த பிணம் ஒன்றினை கண்டுப்பிடித்து, அதனுடன் உடலுறவு வைத்துக் கொள்வார்கள். புகழ் பெற்ற புகைப்படக்காரரான டேவர் ரோஸ்டுஹர் ஒரு அகோரியை பேட்டி எடுக்கையில், அந்த அகோரி கூறியதாவது, "வெளி உலகத்திற்கு மூர்க்கத்தனமான தெரியும் காரியங்களை நாங்கள் செய்வதற்கான காரணம் மிகவும் சாதாரணமானது. அருவெறுப்பான விஷயத்தில் புனிதத்தைக் கண்டுபிடிப்பதே அதற்கான காரணம்! ஒரு பிணத்துடன் உடலுறவு கொள்ளும் போதோ அல்லது மனித மூளையை உண்ணும் போதோ ஒரு அகோரி கடவுள் மீது தன் கவனத்தை வைத்திருந்தால், அவன் சரியான பாதையில் செல்கிறான் என அர்த்தமாகும்."

உண்மை: 3

உண்மை: 3

பில்லி சூனியம் மற்றும் இயற்கையை மீறிய சக்திகளில் அகோரிகள் நம்பிக்கை கொண்டிருப்பார்கள். பிணத்தைப் புணரும் போது, அவர்கள் அதிர்ச்சி ஊட்டும் சடங்குகளில் ஈடுபடுவார்கள். இறந்த சடங்களுடன் உடலுறவு கொள்ளும் போது, இயற்கையை மீறிய சக்திகள் தங்களுக்கு அதிகரிக்கும் என அவர்கள் நம்புகின்றனர். அதனால் அகோரிகளின் கூட்டம் இந்த சடங்கினை செய்திட இரவு நேரத்தில் கல்லறையில் ஒன்று கூடுவார்கள். எரிக்கப்பட்ட சவத்தின் சாம்பலை தன் உடலின் மீது அகோரி பெண்கள் பூசிக் கொள்வார்கள். கொட்டு அடிக்கப்பட்டு, மந்திரங்கள் ஓதப்பட்டு, கன்னியிழப்பு நடைபெறும். இந்த செயல் நடைபெறும் போது, அந்த பெண் மாதவிடாய் காலத்தில் இருப்பது அவசியமாகும்.

உண்மை: 4

உண்மை: 4

அகோரிகள் தங்கள் மனதில் பகையையோ அல்லது வெறுப்பையோ வைத்திருக்க மாட்டார்கள். வெறுப்பை கொண்டிருந்தால் தியானத்தில் ஈடுபட முடியாது என்பது அவர்களுடைய நம்பிக்கையாகும். அதேப்போல் தங்கள் உணவை தாங்கள் உண்ணும் கிண்ணத்திலேயே நாய்களுக்கும் மாடுகளுக்கும் பகிர்ந்து உண்ணுவது அவர்களை மகிழ்விக்கும். இவ்வகையான எதிர்மறையான எண்ணங்களை (மிருகங்கள் தங்கள் உணவை அசுத்தம் செய்வது) நீக்கினால் தான், சிவபெருமானுடன் ஐக்கியமாகும் தங்களின் ஒரே குறிக்கோளின் மீது கவனத்தை செலுத்த முடியும் என அவர்கள் நினைக்கிறார்கள்.

உண்மை: 5

உண்மை: 5

மிகச்சிறய சணல் கோவணத்தை தவிர அவர்கள் உடலில் எந்த துணியும் அணியாமல் தான் அலைவார்கள். சில நேரங்களில் இறந்த மனித உடலின் சாம்பலை உடல் முழுவதும் பூசிக்கொண்டு நிர்வாணமாகவும் கூட சுற்றுவார்கள். சாம்பல் என்பது வாழ்க்கையின் 5 அதிமுக்கிய பொருட்களை கொண்டு செய்யப்படுவது. அதனால் நோய்கள் மற்றும் கொசுக்களிடம் இருந்து அது அகோரிகளை பாதுகாக்கும் என அவர்கள் நம்புகிறார்கள். பொதுவாக சிவபெருமானின் தோற்றத்தைப் போல நடந்து கொள்ளவே அவர்கள் இப்படி செய்கிறார்கள்.

உண்மை: 6

உண்மை: 6

கபாலம் என்றழைக்கப்படும் மனித தலையை உடைமையாக வைத்திருப்பதே அகோரியின் உண்மையான சின்னமாகும். அதற்காக கங்கை நீரில் மிதந்து செல்லும் பிணங்களை அவர்கள் கைப்பற்றிக் கொள்வார்கள். அதன் பின் அந்த மண்டை ஓட்டை கொண்டு மதுபானம் குடிக்கவோ அல்லது உணவருந்தவோ அல்லது பிச்சை பாத்திரமாகவோ பயன்படுத்துவார்கள்.

உண்மை: 7

உண்மை: 7

தூய்மை மற்றும் தூய்மையற்ற, புனிதம் மற்றும் புனிதமற்ற, சுத்தம் மற்றும் அசுத்தத்திற்கு இடையே உள்ள விதிமுறைகளை உடைப்பதன் மூலம் குணப்படுத்தும் அதிசய சக்தியை தாங்கள் பெறுவதாக அகோரிகள் நம்புகின்றனர். இரவு நேரத்தில் அனைவரும் தூங்கிய பிறகு, சுடுகாட்டில் அவர்கள் அமைதியான முறையில் தியானம் செய்வார்கள்.

உண்மை: 8

உண்மை: 8

சமயத்தின் புனிதத் தன்மைக்கு மதிப்புக் கொடுக்காததன் மூலம் நிர்வாணம் மற்றும் ஆத்மாவின் மோட்சத்திற்கு பாதை கிடைக்கும் என இந்த இனம் நம்புகிறார்கள். அதனால் தான் அவர்கள் சமயத்தின் புனிதத் தன்மைக்கு மதிப்புக் கொடுக்காமல், காரணமே இல்லாமல் மிக சத்தமாக சபிப்பார்கள். இந்த ஒரே வழியில் தான் அகோரிகளால் அறிவொளியை அடைய முடியும்.

உண்மை: 9

உண்மை: 9

மனித மண்டை ஓடுகளை ஓரி அணிகலனாக தங்கள் கழுத்தில் மாலையாக அணிவித்திருப்பதை நாம் காண நேரிட்டிருக்கலாம். மனித மண்டை ஓடுகளை கொண்டு செய்த இந்த ஒரே அணிகலனை தான் அவர்கள் தங்கள் வாழ்க்கையின் முக்கிய அங்கமாக கருதுகின்றனர். எரிக்கப்பட்ட பிணங்களின் தொடை எலும்பையும் கூட நடை குச்சியாக சில அகோரிகள் பயன்படுத்துவார்கள். இது அகோரியின் சின்னமாகும். அவர்கள் தங்களது தலை முடியை வெட்டவோ அல்லது குளிக்கவோ மாட்டார்கள். அதனால் தான் இயற்கையான ஜடாமுனி அவர்களுக்கு ஒரு அடையாளமாகவே விளங்குகிறது.

உண்மை: 10

உண்மை: 10

அகோரிகள் கஞ்சாவை புகைப்பதில் நம்பிக்கை கொண்டுள்ளவர்கள். அதற்கு காரணம், அவர்கள் விடாமல் கடைப்பிடிக்கும், விடாமுயற்சியுள்ள தியானத்தில் மனதை ஒருநிலைப்படுத்த அது உதவும் என நம்புகின்றனர். சொல்லப்போனால், எப்போதுமே அவர்கள் கஞ்சாவின் தாக்கத்திலேயே தான் இருப்பார்கள். இருப்பினும் பார்ப்பதற்கு அமைதியாகவே காணப்படுவார்கள். இந்த போதை வஸ்து கொடுக்கும் பிரமை, மிக உயரிய ஆன்மீக அனுபவங்களாக கருதப்படுகிறது.

குறிப்பு

குறிப்பு

அதிர்ச்சியூட்டும் தங்களின் பழக்கங்களை ஒருவர் ஒத்துக்கொண்டாலும் சரி, இல்லையென்றாலும் சரி, இந்தியாவில் அகோரிகள் தன்னினம் உண்ணுவதும், பில்லி சூனியத்தில் ஈடுபடுவதும், வழிபாட்டுச் சடங்குகளை நடத்துவதும் நடந்து கொண்டு தான் உள்ளது. இவையெல்லாம் உடனே நிற்கக்கூடிய விஷங்களும் அல்ல. சரி, இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவர்கள் வழியிலான வாழ்க்கையினால் அவர்கள் தேடும் அறிவொளியை அவர்களால் அடைய முடியுமா? உங்கள் கருத்துக்களை பகிரவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ten Bizarre Truths About The Mystic Aghori Sadhus

Here are some of the bizarre truths about the mystic aghori sadhus. Take a look...