பலருக்கு தெரியாத நளன் மற்றும் தமயந்தியின் அழகான காதல் கதை!

By: Ashok CR
Subscribe to Boldsky

மிகப்பெரிய இரண்டு இதிகாசங்கள் தான் மகாபாரதமும், ராமயணமும் ஆகும். இந்த இரண்டு இதிகாசங்களிலும் பல கதைகள் உள்ளன. அதிலும் மகாபாரதத்தை எடுத்துக் கொண்டால், அதில் எண்ணற்ற கதைகள் உள்ளது. பலருக்கு மகாபாரதம் என்றால் பாண்டவர்கள் பற்றி மட்டும் தான் தெரியும்.

ஆனால் மகாபாரதத்தின் ஒரு பகுதியில் நளன் மற்றும் தமயந்தியின் அழகான காதல் கதையும் அடங்கியுள்ளது. இவர்கள் இருவரைப் பற்றிய கதை பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை நளன் மற்றும் தமயந்தியின் கதையை இங்கு தெளிவாக கொடுத்துள்ளது. அதைப் படித்து பாருங்களேன்...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அன்னத்தை தூது விட்ட நளன்

அன்னத்தை தூது விட்ட நளன்

அயோத்தியாவை சேர்ந்த நிசத் அரசனுக்கு நளன் மற்றும் குவாரா என்ற இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். பீம அரசனின் அழகிய புதல்வியான தமயந்தியை மணக்க நளன் விரும்பினார். நளனை தமயந்தி அறியாததால், தன்னுடைய அன்னத்தை தமயந்தியிடம் நளன் அனுப்பி வைத்தார். தமயந்தியின் அரண்மனைக்கு பறந்து வந்த அன்னம், அங்குள்ள தோட்டத்தில் தமயந்தி தனியாக இருப்பதை கவனித்தது. தமயந்தியிடம் நளனை புகழ்ந்து பாடல்களை பாடியது.

இதற்கிடையில், தன் மகளின் சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தார் பீம அரசர். இந்த சுயம்வரத்தில் பல இளவரசர்கள் கலந்து கொண்டனர். அவர்களுள் தனக்கு பிடித்தவரை கணவனாக தமயந்தி தேர்ந்தெடுக்கலாம். நளனை தேர்ந்தெடுத்த தமயந்தி அவரையே மணந்தும் கொண்டார். பின்னர் அவர்களுக்கு இந்திரசேனன் மற்றும் இந்திரசேனா என இரு பிள்ளைகள் பிறந்தனர்.

சூதாட்டத்தால் அனைத்தையும் இழந்த நளன்

சூதாட்டத்தால் அனைத்தையும் இழந்த நளன்

நளன் திறம்பட ஆட்சி புரிந்து வந்தார். நிசத் அரசர் இறந்தவுடன், நளன் அரசனானார். பல்வேறு ராஜ்யங்களை கைப்பற்றி புகழை அடைந்தார். தன் சகோதரனான குவாராவுக்கு இது பொறாமையை ஏற்படுத்தியது. சூதாட்டம் தான் நளனின் பலவீனம் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். அதனால் நளனை தாய விளையாட்டுக்கு போட்டி போடா அழைத்தார் குவாரா. இந்த போட்டியில் நளன் அனைத்தையும் இழந்தார். இதனால் அரசனான குவாரா, நளனை அந்த ராஜ்யத்தை விட்டே வெளியேற்றினார். இதனால் காட்டிற்கு செல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார் நளன். தன் குழந்தைகளை தன்னுடைய வீட்டில் விட்டு விட்டு, தமயந்தியும் நளனை பின் தொடர்ந்தார்.

காட்டில் நளனும் தமயந்தியும்

காட்டில் நளனும் தமயந்தியும்

நளனும் தமயந்தியும் காட்டை அடைந்தனர். மூன்று நாட்களுக்கு அவர்களால் எதுவுமே உண்ண முடியவில்லை. சோர்வாக இருந்த நளன் பசியில் வாடிய தமயந்தியை பார்த்து, தன்னை தனியாக விட்டு விடும் படி கூறி, விதர்பாவை நோக்கி கைகளை காட்டினார். "உங்களை என்னால் காட்டில் தனியாக விட்டு செல்ல முடியாது. நானும் உங்களுடன் வருகிறேன். அனைத்து வித மன அழுத்தங்களுக்கும் மனைவியே மருந்து", என தமயந்தி கூறினார். "நீ சொல்வது சரி தான். ஒரு ஆணுக்கு சிறந்த நண்பன் தன் மனைவி தான். என்னால் உன்னை ஒரு போதும் விட்டு விட முடியாது. உனக்கு ஏன் அந்த சந்தேகம்? நான் எப்போதும் உன்னுடன் இருப்பேன்", என நளன் அதற்கு பதிலளித்தார். "பின்னே எதற்கு விதர்பாவுக்கான வழியை என்னிடம் காட்டினீர்கள்? நான் என் வீட்டிற்கு செல்வதை நீங்கள் விரும்பினால், நாம் இருவரும் சேர்ந்து போய், அங்கே ஒன்றாக வாழலாம். உங்கள் வார்த்தைகள் என்னை காயப்படுத்துகிறது. என்னை விட்டு நீங்கள் பிரிந்து விடுவீர்களோ என எனக்கு பயமாக உள்ளது." என தமயந்தி கூறினார்.

தமயந்தியை விட்டு சென்ற நளன்

தமயந்தியை விட்டு சென்ற நளன்

தமயந்தி தூங்கிக் கொண்டிருந்த போது, நளன் அவரை காட்டிற்குள் விட்டு சென்றார். மறுநாள் எழுந்த தமயந்தியால் தன் கணவனை காண முடியவில்லை. மனம் உடைந்த தமயந்தி பின்னர் சேடியை அடைந்தார். ஆண்களுடன் பழக அவர் பழக மாட்டார் என்ற சில நிபந்தனைகளோடு அவர் அங்கே வாழ தொடங்கினார்.

உதவி கேட்ட பாம்பு

உதவி கேட்ட பாம்பு

நளன் காட்டிற்குள் தனியாக சென்று கொண்டிருந்த போது உதவி நாடி அழும் குரல் ஒன்று கேட்டது. "நளன், தயவு செய்து இங்கே வரவும்". அழுகை கேட்ட திசையை நோக்கி நளன் சென்றார். காட்டின் ஒரு பகுதி எரிந்து கொண்டிருந்ததை கண்டார் நளன். தன்னை அழைத்தது ஒரு பாம்பு என்பதையும் அவர் தெரிந்து கொண்டார். "நான் தான் கார்கொடகா, பாம்புகளின் அரசன். என்னை இந்த தீயில் இருந்து காப்பாற்றவும்." என பாம்பு நளனிடம் கூறியது. கார்கோடகனை தீயில் இருந்து காப்பாற்றினார் நளன். திடீரென நளனை பாம்பு கடித்தது. பாம்பின் விஷம் நளனின் உடம்பில் ஏறியதால், அவர் உருக்குலைந்து போனார். இதனால் அருவருப்பான தோற்றத்துடன் காட்சி அளித்தார் நளன்.

பாம்பின் கூற்று...

பாம்பின் கூற்று...

"பிறருக்கு அடையாளம் தெரியக்கூடாத காரணத்தினால் தான் உம்மை இப்படி மாற்றினேன். இனி மற்ற விஷத்தால் உமக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. உங்கள் எதிரியை போரில் சுலபமாக வெல்லலாம். அயோத்தியாவிற்கு சென்று ரிதுபர்னா என்ற அரசனை சந்திக்கவும். தாங்கள் பாஹூக்கா என்ற தேரோட்டி என அவரிடம் கூறவும். அஷ்வா ஹிரித்யாவின் நுட்பங்களை அவருக்கு கற்றுக் கொடுக்கவும். அரசர் உங்களின் நண்பனாகி விடுவார். மன அழுத்தம் அடையாதீர். உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுடன் இணைந்து, மீண்டும் ராஜ்யத்தையும் அடைவீர்கள். இந்த ஆடைகளை அணியும் போது பழைய தோற்றத்தை மீண்டும் பெறுவீர்கள்." என நளனிடம் கார்கோடகன் கூறினார். இதனை கூறி முடித்தவுடன் கார்கோடகன் மறைந்தது.

தமயந்தியை மிரட்டிய அசுரன்

தமயந்தியை மிரட்டிய அசுரன்

மற்றொரு ராஜ்யத்தை நோக்கி நளன் தொடர்ந்தார். இதற்கிடையில், தமயந்தி கண் விழித்த போது, தன் பெற்றோரிடம் செல்லுமாறு நளன் எழுதியிருந்த குறிப்பை கண்டார். அதன் படி முன்னோக்கி செல்லும் போது, ஒரு அசுரன் தமயந்தியை உண்ண போவதாக மிரட்டினான். பயமில்லாத தமயந்தியை பார்த்த அந்த அசுரன் தன் உண்மையான ரூபத்தை காண்பித்தான். உண்மையிலயே கடவுளான அவர், தமயந்தி தன் கணவனிடம் 12 வருடங்களுக்கு பிறகு ஒன்று சேர்வார் என கூறினார். அச்சல்புரா ராஜ்யத்திற்கு சென்ற அவர், அங்கு ராணியின் சேவகியாக பணிபுரிந்தார். சம்சுமரா ராஜ்யத்திற்கு சென்ற நளன், அரசனின் சேவகனாக சேர்ந்தார். பல வருடங்கள் கடந்தது.

மீண்டும் நடந்த சுயம்வரம்

மீண்டும் நடந்த சுயம்வரம்

ஒரு நாள், பீம அரசனின் ஆட்கள் தமயந்தியை அச்சல்புரா ராஜ்யத்தில் பார்த்து விட்டு, அவரை அவரின் தந்தையிடம் அழைத்துச் சென்றனர். நளனை கண்டுபிடிக்கும் முயற்சியில் பீம அரசன் தோல்வி அடைந்தார். தமயந்திக்கு மீண்டும் ஒரு சுயம்வரத்தை ஏற்பாடு செய்தார். தன் மனைவிக்கு இரண்டாம் திருமணம் நடைபெற உள்ளது பற்றி நளனுக்கு தெரிய வரும் போது, அவர் கண்டிப்பாக வருவர் என அரசர் நினைத்தார். பீம ராசர் சரியாக யூகித்தார்.

ராஜ்யத்தை கைப்பற்றிய நளன்

ராஜ்யத்தை கைப்பற்றிய நளன்

தன் முதலாளியான சம்சுமரா அரசனுடன், நளன் சுயம்வரத்திற்கு வந்தார். சுயம்வரத்திற்கு ஒரு நாளைக்கு முன்னால், கூன் விழுந்த வேலைக்காரன் தோற்றத்தில் இருந்த நளனை தமயந்தி கண்டார். அவர் உடனே தன் கணவனை கண்டு கொண்டார். நளனும் அந்த ஆடைகளை அணிவித்து தன் சுய தோற்றத்தை மீண்டும் பெற்றார். சுயம்வரத்தில் கலந்து கொள்ளுமாறு நளனிடம் தமயந்தி கேட்டுக் கொண்டார். சுயம்வரத்தின் போது நளனின் கழுத்தில் மாலை அணிவித்தார் தமயந்தி. அவர்கள் மீண்டும் இணைந்தார்கள். அந்த 12 வருட பிரிவு காலமும் முடிவுக்கு வந்தது. பீம அரசனின் படையோடு தன் ராஜ்யத்தை மீண்டும் வென்றார் நளன். மீண்டும் அயோத்தியாவின் மன்னரானார்.

துறவியின் வருகை...

துறவியின் வருகை...

ஒரு நாள் நளனின் அரண்மனைக்கு ஒரு துறவி வந்தார். நளன் ஏன் 12 வருட வனவாசத்தை அனுபவிக்க வேண்டியிருந்தது என அவர் விளக்கினார். சென்ற ஜென்மத்திலும் கூட நளனும் தமயந்தியும் ராஜாவாகவும் ராணியாகவும் இருந்துள்ளனர். அப்போது அப்பாவியான ஒரு துறவியை சிறைக்கு அனுப்பியுள்ளார். கடந்த ஜென்மத்தில் அவர்கள் செய்த பாவமே இந்த ஜென்மத்தில் இந்த வனவாசம். பின் நளனுக்கும் தமயந்திக்கும் புஷ்காரா என்ற மகன் பிறந்தான். அவனை அரசனாக ஆக்கிய பிறகு, ஆன்மீக ஞானத்தை தேடி அவர்கள் அனைத்தையும் துறந்தார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Story Of Nala And Damayanthi

Here is the story of nala and damayanthi. Take a look...
Subscribe Newsletter