For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கணவனால் கல்லாக சபிக்கப்பட்ட அகல்யா தேவியின் கதை தெரியுமா?

By Ashok CR
|

இராமாயணத்தில் அகல்யாவின் கதை உங்களுக்கு தெரியுமா? அவரை ஏன் இந்திரன் ஏமாற்றினான், பின் ஏன் தன் கணவன் கௌதம முனிவரால் சபிக்கப்பட்டார் என்பது உங்களுக்கு தெரியுமா? அதை தெரிந்து கொள்ள அறிவு மற்றும் ஆன்மீகத்தை கொண்டுள்ள ராமாயணம் என்ற மகாகாவியத்தை ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக இராமயணத்தில் இந்த கதை இருப்பது பலருக்கு தெரியாது. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை அகல்யா தேவியின் கதைக்கான விளக்கத்தைப் பற்றி தெளிவாக கொடுத்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அகல்யாவைக் கண்ட இந்திரன்

அகல்யாவைக் கண்ட இந்திரன்

வானத்தில் இருந்து கௌதம முனிவரின் மனைவியான அகல்யாவை பார்த்தான் இந்திரன். பெண்கள் மத்தியில் மிகவும் அழகானவளாக கருதப்பட்ட அகல்யாவை அனுபவிக்க ஆசைப்பட்டான் இந்திரன். அவளை சிறிது காலம் பார்த்துக் கொண்டிருந்தான்.

கௌதம முனி போல் வேடமிட்ட இந்திரன்

கௌதம முனி போல் வேடமிட்ட இந்திரன்

ஒரு நாள் விடியற்காலையில் கௌதம முனிவர் குளிப்பதற்காக நதிக்கு சென்ற சமயம், அந்த வாய்ப்பை இந்திரன் பயன்படுத்திக் கொண்டான். கௌதம முனியை போல் வேடமிட்டுக் கொண்டு வந்தான் இந்திரன். அகல்யா இருந்த குடிலுக்குள் சென்றான்.

"இது என் கணவனின் குணாதிசயத்தை போல் தெரியவில்லை. ஆனால் திடீரென என் கணவன் என்னை அனுபவிக்க விரும்பி என்னை ஆசை தீர தழுவுகிறாரே, அவரிடம் நான் எப்படி மறுப்பு தெரிவிப்பது?" என அகல்யா கூறினாள். வந்த வேலை முடிந்தவுடன் குடிலை விட்டு வெளியே வந்தான் இந்திரன். அதே நேரம் கௌதம முனிவர் குளித்து விட்டு உள்ளே நுழைந்தார். தன்னுடைய தோற்றத்தில் மற்றொரு மனிதரை கண்டவுடன், ஏதோ பித்தலாட்டம் நடந்துள்ளது என்பதை அவர் புரிந்து கொண்டார். தன் கையில் கொஞ்சம் நீரை எடுத்த அவர், "உண்மையிலேயே நீ யார்?" என கேட்டார். உடனே இந்திரன் தன் சுய ரூபத்தை அடைந்தான். இதை கண்டு வெகுண்டெழுந்த கௌதம முனிவர் "நீ ஆண்மையற்றவனாக மாற சபிக்கிறேன்" என கூறி அவன் மீது நீரை தெளித்தார்.

கௌதம முனியின் சாபம்

கௌதம முனியின் சாபம்

சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்த அகல்யா, ஒரே உருவத்தில் இரண்டு பேர்களை பார்த்தார். "நான் ஏமாற்றப்பட்டு விட்டேன்." என அவள் கூறினாள். இதை கேட்டு கோபமுற்ற கௌதம முனிவர், "நீ ஏமாற்றப்பட போகிறாய் என அறிந்தும் ஏன் அவனை உள்ளே அனுமதித்தாய்?" என அவர் கேட்டார். "அவன் உங்களை போலவே இருந்தான்" என அவள் கூறினாள். "நீ ஆழ்மனதை கண்டிருக்க வேண்டும். ஏனென்றால் அவனின் மனது ஒரு வஞ்சகமே. அதனால் உன்னையும் நான் சபிக்கிறேன். நீ ஒரு கல்லாக மாற நான் சாபமிடுகிறேன்." என முனிவர் கூறினார். பின் அவள் மேல் நீரை தெளித்தார். உடனே கல்லாக மாறி போனால் அகல்யா.

கல்லில் துளசி வருவதைக் கண்ட ராமர்

கல்லில் துளசி வருவதைக் கண்ட ராமர்

விஸ்வாமித்திரருடன் சேர்ந்து ராமர் மிதிலாவுக்கு வந்து கொண்டிருந்த போது, தனித்து விடப்பட்ட ஆசிரமத்தையும் அதனருகில் இருந்த ஒரு கல்லையும் கண்டனர். அந்த கல்லில் இருந்து ஒரு துளசி செடி வளர்வதை கண்டனர். "குருவே, இது மிகவும் வியப்பாக உள்ளது. எப்படி இங்கே அனைத்தும் தனித்து விடப்பட்டுள்ளது? அப்படி இருந்தும் எப்படி ஒரு கல்லில் இருந்து துளசி செடி வளர்கிறது?" என விஸ்வாமித்திரரிடம் ராமர் கேட்டார்.

விஸ்வாமித்திரர் கூற்று...

விஸ்வாமித்திரர் கூற்று...

"இந்த கல்லுக்குள் ஒரு பெண்ணின் ஆத்மா உள்ளது. மற்றொரு ஆணால் ஏமாற்றப்பட்டதால், ஒரு ஆணால் சபிக்கப்பட்டவளே இந்த பெண். ராமா, தவறான செய்கையை புரிந்தவரைகளை எப்படி குறை கூற வேண்டும் என்பதும், எப்படி தண்டிக்க வேண்டும் என்பதும் அனைவருக்கும் தெரியும். ஆனால் விசேஷ மனிதர்களால் மட்டுமே இத்தகைய சாபத்தை திருப்பி எடுக்க முடியும். ராமா, அப்படிப்பட்ட விசேஷ மனிதன் தான் நீ. இந்த கல்லை உன் பாதங்களால் நீ தொட்டால், சாபத்தில் இருந்து அகல்யா மீள்வாள்." என விஸ்வாமித்திரர் கூறினார்.

சாப விமோட்சம் பெற்ற அகல்யா

சாப விமோட்சம் பெற்ற அகல்யா

விஸ்வாமித்திர ரிஷி கூறியதை போல் தன் பாதத்தை கல்லின் மீது வைத்தார் ராமர். அந்த கல் அகல்யாவாக மாறியது. ராமருடைய ஸ்பரிசத்தால் சாப விமோச்சனம் பெற்றால் அகல்யா. "என் கணவன் எனக்கு சாபமிட்டார் என நான் நினைத்தேன். ஆனால் அந்த சாபமே எனக்கு மிகப்பெரிய ஆசீர்வாதமாக மாறி விட்டது. இத்தனை வருடம் ராமரின் பெயரை சொல்லி ஜெபித்து வந்ததால் அவரின் முகத்தை காணும் பாக்கியத்தை அடைந்தேன். இது மிகப்பெரிய ஆசீர்வாதம். கடவுளின் முகத்தை காண என் கணவன் எனக்கு அளித்த மிகப்பெரிய ஆசீர்வாதம். எனக்கு மட்டும் சாபம் கிடைக்கவில்லை என்றால் எனக்கு பாக்கியம் எப்படி கிட்டியிருக்கும்?" என ராமரின் கண்களை பார்த்து அகல்யா கூறினாள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Story of Gautam Muni and Ahalya Devi

Ramayana on the story of ahilya that why Indra did adultery with her then why only she was cursed by her husband Gautama saint but no body knows that ramayan is a great scripture of wisdom and spiritualism which need deep study to understand. Here is the explanation of Ahilya’s story in the light of symbolism behind it.
Desktop Bottom Promotion