"மல்லூஸ்" மிகவும் பிடித்தமானவர்களாக இருப்பதற்கான காரணங்கள்!!!

By: John
Subscribe to Boldsky

கேரள, மலையாள மக்களை "மல்லூஸ்" என செல்லமாக அழைக்கும் வழக்கம் உண்டு. இந்தியாவிலேயே கல்வி சதவீதத்தில் முதன்மையில் இருப்பவர்கள் மல்லூஸ். அறிவிருந்தால் அழகிருக்காது என்பர், அழகிருந்தால் அறிவிருக்காது என்பர். ஆனால், அறிவிலும், அழகிலும் இனிப்பு "பொங்கலாக" இருப்பவர்கள் மல்லூஸ் என்பது மிகையாகாது.

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட திரைப்படங்களை பற்றிய தகவல்கள்!!

சினிமாவிலும் கூட, வித்தியாசமான கதையம்சங்களும், அன்றாட வாழ்வியல் குறித்த கதையம்சமும் கொண்ட திரைப்படங்கள் கேரளத்தில் நிறைய காண இயலும். சினிமா, அழகு போன்றவையோடு இன்னும் சிலவன "மல்ளூஸ்" மிகவும் கவர்சிகரமாகவும், பிடித்தமானவர்களாகவும் இருக்க காரணமாய் இருக்கிறது....

நாடி ஜோதிடத்தின் வரலாற்று இரகசியங்கள் மற்றும் உண்மை தகவல்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அவர்களது மொழி நடை

அவர்களது மொழி நடை

தமிழாக இருக்கட்டும், ஆங்கிலமாக இருக்கட்டும், அவர்கள் கொஞ்சி பேசும் அந்த மொழி நடையை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆண்கள் பேசினால் கூட, மற்றவர் அதை கேலி செய்வார்கள். ஆனால், கேரளத்து இளம் மயில்கள் (பெண்கள்) பேசுவதைக் கண்டு உருகாத நெஞ்சங்களே இருக்க முடியாது.

நேந்திரம் சிப்ஸ்

நேந்திரம் சிப்ஸ்

எத்தனை வகையான சிப்ஸ்கள் வந்தாலும், என்ன இரசாயனங்களும் கலந்தாலும் (பிராண்டட் சிப்ஸ்கள்), எண்ணெயில் வறுத்து சுட சுட கிடைக்கும் அந்த நேந்திரம் சிப்ஸின் சுவைக்கு வேறெதுவும் ஈடாகாது.

இயற்கை

இயற்கை

இயற்கையின் ராணி என்று புகழப்படும் ஊர் கேரளா. இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. பாசமான வரவேற்பு, பாசம் பிடித்த அவர்களது பச்சை சுவர்கள், வீடுகள் அனைத்துமே காண இனிமையானது. பெரும்பாலும் கேரளாவில் சுற்றுலா சென்றால் பச்சை நிறத்தை மட்டும் தான் காண இயலும். பச்சைப்பசேல் என்ற பூமி என்ற வாக்கியத்திற்கு கேரளா ஓர் உவமையாக இருக்கும்.

 உணவுகள்

உணவுகள்

புட்டில் இருந்து அவர்கள் தட்டில் பரிமாறும் அணைத்து உணவுகளுமே வயிறு புடைக்கும் வரை சாப்பிடலாம். ருசியிலும் சற்று அதிகமாக ரசனைக் கொண்டவர்கள் மல்லூஸ். தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி சமைப்பது அவர்களது தனித்தன்மை. கேரளாவில் தென்னைகள் நிறைய இருப்பதாலோ என்னவோ, அவர்களது பெரும்பாலான உணவில் தேங்காய் சேர்க்கப்பட்டிருக்கும்.

தங்கம்

தங்கம்

கேரளத்து தங்கம் கூட தனித்தன்மை உடையது தான். கேரளத்தில் தங்கம் இல்லாத வீடே இருக்க முடியாது என்பது பொதுவான கருத்து. ஏனெனில், கேரளத்து தங்கம் விலை குறைவு.

உழைப்பு

உழைப்பு

வேலைக்கு தான் செல்ல வேண்டும் என்று இல்லை. எந்த வியாபாரம் வேண்டுமானாலும் செய்து முன்னேறலாம் என்ற அவர்களது தன்னம்பிக்கையும், உழைப்பும் சிறந்ததாகும். சிலர் நாயர் என்றாலே டீ ஆத்துபவர்கள் என்று கூறி கேலி செய்வார்கள். ஆனால், அப்படி கேலி செய்பவர்களை விட நல்ல நிலையில் வாழ்ந்துக் காட்டுபவர்கள் அவர்கள் தான்.

புடவை கட்டும் அழகு

புடவை கட்டும் அழகு

கேரளத்து பெண்கள் மாரோடு அனைத்து கட்டும் அந்த வித்தியாசமான புடவை கட்டும் அழகே தனி என்று தான் கூற வேண்டும். மடிப்பு, கொசுவம் போன்று புடவை கட்டுவதில் கூட தனி பாணியைக் கொண்டவர்கள் கேரளத்து பெண்கள்.

இணைப்பு

இணைப்பு

ஒருவர் மற்றொருவருடன் உறவில் இணைப்பாக இருப்பது மலையாள மக்களின் வலிமை என்று கூறலாம். உறவு முறைகளாக இல்லாவிட்டாலும். தெரிந்தவர்களுக்கும் அவர்களது வேலை மற்றும் சொந்த விஷயங்களில் உதவும் மனப்பான்மை அவர்களை உயர்த்தி காட்டுகிறது.

மை பூசிய கண்கள்

மை பூசிய கண்கள்

மலையாள பெண்களின், அந்த மை பூசிய கண்கள் இரண்டு போதும், அவர்களை விரும்ப. அவர்களது அழகை மேலோங்க செய்யும் ஓர் கருவியாக அது உதவுகிறது. சில மலையாள மக்களுக்கு அவர்களை "மல்லூஸ்" என்று கூப்பிடுவது பிடிக்காது, ஆனால், இது அவர்கள் மீதி வைத்திருக்கும் அன்பின் வெளிபாடு என்பதை பெரும்பாலானோர் புரிந்துக்கொள்வார்கள்!!!

கால்பந்து

கால்பந்து

வெளிமாநில ஆண்களுக்கு மல்லூஸை பிடிக்க ஓர் காரணமாக இருப்பது கால்பந்து விளையாட்டில் அவர்களுக்கு இருக்கும் ஓர் மோகம். இந்தியாவிலேயே, கேரளா மற்றும் கொல்கத்தா பகுதிகளில் தான் கால்பந்து மிகவும் பிரபலமான விளையாட்டாக இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Reasons Why Mallus Are More Impressive and Awesome

Do you know about the reasons why mallus are more impressive and awesome? read here.
Story first published: Friday, June 19, 2015, 13:08 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter