நாளைய உலக அழிவுக்கு காரணமாக எதிர்பார்க்கப்படும் மாபெரும் இயற்கை சீற்றங்கள்!!

By: John
Subscribe to Boldsky

பூகம்பம், எரிமலை சீற்றம், சுனாமி, கடல் கொந்தளிப்பு என ஒவ்வொரு வருடமும் இயற்கை சீற்றங்கள் நடந்துக் கொண்டே தான் இருக்கின்றது. நமது ஹாலிவுட் படங்களில் காண்பிப்பது போல, 21ஆம் நூற்றாண்டின் முதலில் இருந்தே உலகம் இதோ அழிந்துவிடும், அதோ அழிந்துவிடும் என்று பூச்சாண்டி காண்பித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

உலகம் அழிந்துவிடும் என விஞ்ஞானிகளை அஞ்ச வைக்கும் பேரழிவு நிகழ்வுகள்!!!

ஆனால், இதை நாம் அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. டைனோசர் எனும் மாபெரும் உயிரினம் அழிந்ததற்கு காரணமும் ஓர் தொடர் இயற்கை சீற்றம் தான். ஏன், மனித இனத்தின் தோற்றமான குமரிக் கண்டம் அழிந்ததற்கு காரணமும் ஓர் மாபெரும் கடல் கொந்தளிப்பு தான். ஓர் கண்டத்தையே உள்வாங்கும் அளவு ஏற்பட்டது அந்த இயற்கை சீற்றம்.

ஏலியன்கள் வாழும் கிரகங்கள் என்று ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்ட கோள்கள்!!!

அது போல, எதிர்காலத்தில் சில மாபெரும் இயற்கை சீற்றங்கள் ஏற்படும், அதன் விளைவுகளின் எதிரொலியாய் மனித இனம் மாபெரும் இழப்பை சந்திக்க நேரிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அவ்வாறு எதிர்காலத்தில் உலகை அழிக்கும் என எதிர்பார்க்கப்படும் மாபெரும் இயற்கை சீற்றங்கள்குறித்து இனி பார்க்கலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காட்டுத் தீ

காட்டுத் தீ

அமெரிக்காவில் 2050 ஆண்டிற்குள் ஓர் மாபெரும் காட்டுத் தீ விபத்து ஏற்படும் என்று ஹார்வார்ட் பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியில் கூறியிருக்கின்றனர். அமெரிக்காவில் இப்போதே ஒவ்வொரு வருடமும் 3 மடங்கு அளவு காட்டுத் தீயின் அளவு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

எரிமலை சீற்றம்

எரிமலை சீற்றம்

பாரோர்புங்கா எரிமலை சீற்றம் (Baroarbunga Volcanic Explosion Iceland), இது மிகப்பரிய சேதத்தை ஏற்படுத்தும் எரிமலை ஆகும். இன்னும் இதன் சீற்றம் அதிகரிக்கும் என்றும், எதிர்காலத்தில் இங்கு ஒரு வரலாறு காணாத எரிமலை சீற்றம் உண்டாகி மாபெரும் சேதமும், அழிவும் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

மாபெரும் பூகம்பம்

மாபெரும் பூகம்பம்

தென் அமெரிக்காவின் சிலி பகுதியில் மாபெரும் பூகம்பம் ஏற்படுமாம். ஏற்கனவே, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8.5 ரிக்டர் அளவில் ஏறத்தாழ 97 கி.மீ. தூரம் பெரும் சேதத்தை ஏற்படுத்திய பூகம்பம் நிகழ்ந்தது. இதை விட பல மடங்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும் பூகம்பம் 2050ஆம் ஆண்டிற்குள் ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் அஞ்சுகின்றனர்.

இரட்டை பூகம்பம்

இரட்டை பூகம்பம்

வரும் 2017ஆண்டு ஜப்பானில் மாபெரும் இரட்டை பூகம்பங்கள் ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவை இரண்டுமே 9.0 ரிக்டர் அளவுகளுக்கு மேல் பதிவு ஆகலாம் என்றும். இதனால் 400 கிமீ சுற்றளவு நிலம் சேதமடையலாம் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.

ஃபுஜி சிகரம் சீற்றம்

ஃபுஜி சிகரம் சீற்றம்

ஜப்பானின் ஒவ்வொரு வருடமும் குறைந்தது 15 எரிமலை சீற்றங்கலாவது ஏற்படுமாம். ஏராளமான எரிமலைகள் உள்ள பகுதியானது ஜப்பான். அதில் மிகவும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எரிமலையாக கருதப்படும் ஃபுஜி எரிமலையின் சீற்றமும் மாபெரும் இயற்கை சீற்றமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

கிழக்கு கடற்கரை மூழ்கடிக்கப்படலாம்

கிழக்கு கடற்கரை மூழ்கடிக்கப்படலாம்

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை மூழ்கடிக்கப்படுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 2050ஆம் ஆண்டிற்குள் பெரும்பாலான அமெரிக்க கடற்கரை சார்ந்த நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயம் இருக்கின்றது.

கரீபியன் மாபெரும் சுனாமி

கரீபியன் மாபெரும் சுனாமி

வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்கா கண்டங்களுக்கு மத்தியில் இருக்கும் ஒரு பகுதி தான் கரீபியன். இங்கு நூறு மீட்டர்களுக்கும் மேலான உயரம் எழும்பும் மாபெரும் சுனாமி சீற்றம் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றனவாம். ஆனால், அது எப்போது நடக்கும் என்று தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

துருவங்களின் அழிவு

துருவங்களின் அழிவு

வட துருவம் தென் துருவம் என்று கூறப்படும் அண்டார்டிக் மற்றும் அட்லாண்டிக் பனிப் பிரதேசங்கள் 2050 ஆண்டின் வாக்கில், அதிகப்படியான பூமி வெப்பமயத்தினால் முழுமையாக உருகிட நேரிடும் என்றும். இதனால், உலகின் பெரும்பாலான பகுதிகளில் கடல் நீர் உட்புகலாம், கடற்கரை நகரங்கள் அழியலாம் என்றும் கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Major Natural Disasters Predicted In The Near Future

Do you know about the major natural disasters predicted in the near future? read here.
Subscribe Newsletter