For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் "இரும்பு மனிதர்" சர்தார் வல்லபாய் படேல் பற்றிய சில அரிய தகவல்கள்!!!

By John
|

இந்திய விடுதலை போராட்டத்தின் போது, இந்தியாவை தலைமை தாங்கி போராட்டங்கள் நடத்திய தலைவர்களுள் இவரும் ஒருவர். குஜாரத்தில் பிறந்து, வளர்ந்த வல்லபாய் படேல் அவர்கள் வழக்கறிஞராக பணியாற்றினார். இவர் ஆங்கிலேயருக்கு எதிராக அறவழியில் போராட்டங்களை நடத்தியவர் ஆவார்.

ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிய கொடூர சம்பவத்திற்கு வித்திட்ட ஹிட்லர் பற்றிய அரிய விஷயங்கள்!

சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர் சர்தார் வல்லபாய் படேல் அவர்கள்.இவரது தைரியத்தையும், துணிச்சலையும் போற்றி "இந்தியாவின் இரும்பு மனிதர்" என்று மக்களால் அழைக்கப்பட்டார்.

ஜெயலலிதா பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத அறிய விஷயங்கள்!!

தற்போதைய அரசு இவரது தியாகத்தையும், போராட்டத்தையும் நினைவுக் கூறும் வகையில் 3000 கோடி ரூபாய் செலவில் ஓர் பெரிய சிலை நிறுவ மத்திய அரசு முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இனி, சர்தார் வல்லபாய் படேல் அவர்களை பற்றிய சில அரிய தகவல்கள் பற்றிக் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காந்தியுடனான நெருக்கமான பழக்கம்

காந்தியுடனான நெருக்கமான பழக்கம்

காந்தியுடன் மிகவும் நெருக்கமாக நட்பு பாராட்டி வந்தவர் வல்லபாய் படேல். காந்தியின் இறப்புக்கு பிறகு மிகவும் வலுக்குன்றிய நிலையில் காணப்பட்டார். காந்தி இறந்த இரண்டாவது மாதத்தில், வல்லபாய் படேல் தீவிரமான மாரடைப்பால் பாதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயி வல்லபாய்

விவசாயி வல்லபாய்

சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் ஓர் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை ராணி ஜான்சிக்கு சேவை செய்து வந்தவர். வழக்கறிஞராக இருந்தாலும் கூட, நேரம் கிடைக்கும் போதெல்லாம், இந்த இரும்பு மனிதர் விவசாயமும் செய்திருக்கிறார். ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்ததால்,ஏழை மக்களின் மீது மிகவும் கரிசனம் கொண்டவராக இருந்தார்.

பிறந்த தேதி தெரியாது

பிறந்த தேதி தெரியாது

சர்தார் வல்லபாய் படேலின் சரியான பிறந்த தேதி எந்த குறிப்புகளிலும் கண்டறியப்படவில்லை. ஆயினும், அவரது பள்ளி சான்றிதளை வைத்து அக்டோபர் 31 தான் இவரது பிறந்தநாளாக இருக்கும் என்று பின்பற்றி வரப்படுகிறது.

அரசர்களுக்கு உதவித் தொகை

அரசர்களுக்கு உதவித் தொகை

சுதந்திரத்திற்கு பிறகு கப்பம் போன்று, குறுநில மற்றும் பெருநில மன்னர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்று சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் பரிந்துரைத்தார் என்றும், அப்போதைய காங்கிரஸ் அரசு அதை நிராகரித்துவிட்டது என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவை உருவாக்கியவர்

இந்தியாவை உருவாக்கியவர்

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு விடுதலை அளித்துவிட்டு சென்ற பிறகு, நாடு முழுதும் ஓர் பிரச்சனை எழுந்தத. அரச குடும்பங்கள் தங்கள் நாடுகள் தங்களுக்கே வேண்டும் என்று வேண்டினர். ஏறத்தாழ 500 மேற்பட்ட பிரிவினைகள் இருந்தன. அதை எல்லாம் உடைத்து, தற்போதுள்ள மாநிலம் சார்ந்த இந்தியாவை உருவாக்கியவர் சர்தார் வல்லபாய் படேல்.

கொடூரமான பிளேக் நோய் தாக்கம்

கொடூரமான பிளேக் நோய் தாக்கம்

குஜராத்தில் ஒரு சமயம் கொடூரமான பிளேக் நோய் தாக்கம் ஏற்பட்டது. அந்த சமயத்தில், அந்த கொடூரமான பிளேக் நோய் வல்லாய் படேல் அவர்களையும் தாக்கியது. நோய்வாய்ப்பட்டுப் போன வல்லபாய் அவர்கள் உடனடியாக அப்பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு, நோயின் தாக்கம் குறைந்த பிறகு மீண்டும் ஊரு திரும்பினார்.

ஆர்.எஸ்.எஸ்'க்கு எதிர்ப்பு

ஆர்.எஸ்.எஸ்'க்கு எதிர்ப்பு

இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேல் அவர்கள், விடுதலைக்கு பிறகு ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகக் சில செய்திக் கோப்புகளில் கூறப்பட்டுள்ளன.

நேருவுடன் மோதல்

நேருவுடன் மோதல்

நேருவுடன் நல்ல நட்புறவில் இருந்த போதிலும் கூட, ஏதோ வகுப்பு சார்ந்த பிரிவினைப் பிரச்சனையின் காரணமாக இருவருக்குள்ளும் பேச்சு வார்த்தைத் தடைப்பட்டு போனதாக கூறப்படுகிறது. அந்த பிரச்சனைக்கு பிறகு இருவரும் கடைசி வரை பேசிக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்த செய்தி எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.

இந்திய அரசு ஊழியர்கள் அமைப்பு

இந்திய அரசு ஊழியர்கள் அமைப்பு

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற இந்திய அரசு ஊழியர்கள் அமைப்பினை உருவாக்கிட நிறைய உழைப்பை தந்தவர் "இரும்பு மனிதர்" சர்தார் வல்லபாய் படேல். மாநில வாரியாக இந்தியாவை ஒன்றிணைத்த பிறகு. அதிகாரத்தோடு மக்களை நல்வழிப்படுத்த, தவறுகள் நடக்காமல் இருக்க இது தேவை என்று கருதி, உருவாக்கிட நற்முயற்சி எடுத்தார் வல்லபாய் படேல்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Lesser Known Facts About Sardar Vallabhbhai Patel

Do you know about the lesser known facts about sardar vallabhai patel? read here.
Desktop Bottom Promotion